வெளிச்சத்தின் மறுபக்கம் 4 (3)

“அவங்க சர்ஜெரி எல்லாமே சக்செஸ் தான். அவங்க செய்த ஆபரேசன் எதுவும் இதுவரை தோல்வி அடைந்ததே இல்ல தெரியுமா?”

“எல்லாத்துக்கும் மேல, அவங்க இன்னும் எம்.டி படிச்சே முடிக்கவில்லை தெரியுமா? ஷி இஸ் ஸ்டில் அ ஸ்டுடென்ட்! இந்த சின்ன வயசுலேயே பல ஆபரேசன்ஸ்! எண்ணற்ற வெற்றி! ஈவென் பிரசிடன்ட் கிட்ட இருந்து சிறந்த கார்டியோ சர்ஜன் விருது கூட வாங்கியிருக்காங்க தெரியுமா?” தெரியுமா தெரியுமா என்று அந்த சாதனை பெண்ணின் தரிசனம் தற்போதே வேண்டும் என்று அவர்களின் மனம் கூவும்படி செய்திருந்தனர், அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள். கூடவே சில பல சந்தேகங்களுக்கும் வழி வகுத்தனர்.

“படிச்சு முடிக்காத பொண்ண எப்படி அறுவை சிகிச்சை பண்ண உங்க மருத்துவமனை நிர்வாகம் சம்மதிச்சாங்க? இது ரூல்ஸ்க்கு அகைன்ஸ்டா இல்லையா?” தன் சந்தேகத்தை முன்வைத்த அதிரனுக்கு, “எது சார் அகைன்ஸ்ட் ரூல்ஸ்? அப்படி பார்த்தா, பாலமுரளி ஆம்பாட்டி (Balamurali Ambat)i, செரீனா ஹார்டிங் (serennah harding), ஷோ யானோ (Sho Yano) இன்னும் பலர் ரொம்ப ரொம்ப சின்ன வயதில், அதாவது பதினேழு, பதினெட்டு வயசுலையே மருத்துவர்கள் ஆகியிருக்காங்க. அதுவும் நான் கடைசியா சொன்ன ஷோ யானோ, தன்னோட பனிரெண்டாவது வயதில் எம்.டி முடிச்சிருக்காறு. இவங்க எல்லாம் நம்ம உலகம் ஏற்றுக்கொண்ட சிறந்த மருத்துவர்கள். இவங்க எல்லாரையும் ஏற்றுக்கொண்ட நம்ம  உலகத்துக்கு எங்க வேதாவை ஏற்றுக்கொள்ள, என்ன தடை வந்திடப் போகுது”  கேட்டபடி அதிரன் முன் வந்து நின்றவரை ‘யார்’ என்று புருவம் சுருக்கி யோசிக்க, அழகாய் புன்னகைத்தவர், “ஐ ஆம் டாக்டர் நந்தகுமார், வியாஸ் மெடிக்கல் பவுண்டேஷனோட சீப் டாக்டர் அண்ட் ப்ரோபோசர்” என்றிட, கண்கள் விரிய ஆச்சரியம் கொண்டவன், “ஹலோ டாக்டர்! உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன். நைஸ் டு மீட் யு” கைக் குலுக்கினான் அதிரன்.

சிறு புன்னகையை உதிர்த்தவர், “மிஸ்டர் அதிரன், ஒரு சிபிஐ அதிகாரியா நீங்க வேதா மேல சந்தேகப்படுறது நியாயம் தான். ஆனா என்னை பொருத்த வரை வேதாவுக்கும் இந்த கொலை வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்ல” என்றிட, “அதெப்படி சார் இவ்வளவு உறுதியா சொல்றீங்க” வித்யுத் தன் சந்தேகத்தை முன்வைத்திட, “சோ சிம்பிள்! வேதா, ஷி இஸ் ஏ ஜீனியஸ். காப்பாத்தவே முடியாதுன்னு பல மருத்துவர்கள் கைவிட்ட கேஸ கூட, தைரியமா எடுத்து, அழகா ஹேண்டில் பண்ணி, பலரோட உயிரை காப்பாத்திருக்கா. நான் கூட அடிக்கடி யோசிப்பேன், இந்த பொண்ணால மட்டும் எப்படி இப்படி எல்லாம் செய்ய முடியுதுன்னு. பல உயிர்களை காப்பாதுறதுக்காகவே கடவுள் இவளை படச்சிருக்காறோன்னு கூட நினச்ச நாட்கள் உண்டு. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? வேதாவோட முதல் ஆப்ரேஷன், இட்ஸ் லைக் அ மேஜிக். ஒரு நோயாளிய குற்றுயிரா கொண்டு வந்தாங்க.  அவர காப்பாத்திரலாம்ன்னு ஒரு சின்ன ஹோப் கூட இல்ல! எனக்கும் தான்! எப்படியும் மரணம் நிச்சயம்ங்குற லெவல்க்கு போய்ட்டாரு. அப்ப வந்தா வேதா, என்னால அவர காப்பாத்த முடியும், என்ன நம்புங்கனு சொன்னா. யாருமே சம்மதிக்கல ஏனா ஆப்ரேஷன் செய்தாலும் சரி செய்யாட்டியும் சரி அவருக்கு மரணம் உறுதி. இதுல இந்த ஆப்ரேஷன் அவசியமான்னு தோணிச்சு. ஆனா அவ கேட்கல. பிடிவாதமா நின்னா. திட்டத்தட்ட முப்பத்திரண்டு மணிநேரம் போராடி, மரணத்தோட விழும்பில நின்ன அந்த மனுஷனோட உயிரை திரும்ப கொண்டு வந்தா. எல்லாருக்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். அதுலையும் ஆப்ரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே  வந்தவளோட முகத்தை பாக்கணுமே! அதுல அவ்வளவு சந்தோஷம்! நான் ஒரு உயிரை காப்பாத்திட்டேன்னு சந்தோசத்துல அழுதா பாருங்க, அது இன்னும் என் கண்ணு முன்னாடியே நிக்குது!” ஒருவித பூரிப்போடு அவர் கூறியதை கேட்ட அதிரனுக்கு ஏனோ அந்நொடி காரணமின்றி பாண்டியனின் நினைவு வர, தன்னையும் பாண்டியன் இவ்வாறு தானே புகழ்வார் என்று எண்ணியவனின் இதழில் சிறு புன்னகை வந்தமர்ந்தது.

சிறு புன்னைகையுடனே நிமிர்ந்தவனின் விழிகள் ஓர் இடத்தில் நிலைக்குத்தி நின்றது. அவனின் விழிகள் அங்கு கண்ணீர் மல்க நின்றுக்கொண்டிருந்த வயதானவர் ஒருவரையும் அவர் கூறுவதை அமைதியின் உருவாய் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணிடமும் நிலைத்து நின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அந்த சாந்த சொரூபியாய் நின்ற பெண்ணிடம் தான் நிலைத்து நின்றது.

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள்

வெளிச்சத்தின் மறுபக்கம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி