உன்னில் மயங்குகிறேன் 9

ஆருத்ரனை திட்டுவதற்காக அவன் அருகில் சென்று கொண்டு இருந்தவளின் தோளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்றது.. அம்மா என்று அலறியபடி கீழே விழுந்தவளை நோக்கி ஆருத்ரனும், மிதுனும் ஓடி வந்தனர், துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியபடி அங்கும் இங்கும் ஒட ஆரம்பித்தருந்தனர் அவர்களை கடந்து வருவதற்குள் குஹாசினி மயங்கி இருந்தாள்..

 

அவளது நிலைமையை கண்ட ஆருத்ரனுக்கு கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.. மிதுன் அவன் தோளை தொட்டதும் சுய நினைவு வந்தவனாய் மிதுன் காரை எடுத்துக்கிட்டு வாடா சீக்கிரம் என்று கத்த ஆரம்பித்தான்..

 

அவனும் தாமதிக்காது பார்கிங் ஏரியாவிற்கு சென்று காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்..

 

மிதுன், “ஏய் காரை எடுத்துக்கிட்டு வந்துட்டேன்.. இப்ப இவள எப்படி கூட்டிக்கிட்டு போறது? ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணவா?

 

ஆருத்ரன்,” என்னடா பேசுற அறிவிருக்கா உனக்கு? டோரை திற என்று அவளை தன் கரங்களால் தூக்கி கொண்டு விரைந்தான் “

 

கார் அதிவேகமாக அருகில் இருக்கும் பிரபல மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஆருத்ரன் குஹாசினியிடம் பேசியபடியே வந்தான்..

 

ஆருத்ரன், “ஹாசினி என்ன பாருடா.. ப்ளீஸ் ஏதாவது பேசு இல்ல திட்டு நீ என்னை ஏதோ சொல்லி திட்டுவீயே தாட்டான்னு அதையாவது சொல்லுமா ப்ளீஸ் கண்ண திறடீ” என்று அவன் புலம்புவது மிதுனுக்கு சாதரணமாக எண்ண தோன்றவில்லை.

 

பத்து நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்ததும் அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்ற பின்னர் மிதுன் ஆருத்ரனிடம் வந்தான்..

 

மிதுன்,” மச்சான்.. அவளுக்கு எதுவும் ஆகாது ப்ளீஸ் கண்களை துடை.. யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க..”

 

ஆருத்ரன், “என்ன தப்பா நினைப்பாங்க? அடுத்தவங்க இவளை தப்பா பேச போறாங்கன்னு நினைச்சி தான் நான் அவளை விட்டுட்டு மத்தவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்.. ஒரு வேளை நான் அதுக்கு எல்லாம் கவலைப்படாமல் இவ கூடவே இருந்து இருந்தா இது நடந்து இருக்காது இல்லையா? ஆமா அவ உன்கிட்ட தானே பேசிட்டு இருந்தா? எதுக்காக நான் இருந்த பக்கமா வந்தா?” யார் ஹாசினிய சுட்டு இருப்பாங்க? எனக்கு தெரிஞ்சி இது அவளுக்கான குறி இல்லை எனக்கானது”

 

மிதுன், “என்னடா சொல்ற? உன்ன கொல்ற அளவுக்கு யாரா இருக்கும்? ஒருவேளை அவனா உன்னோட.. என்று ஆரம்பித்தவன் ஆருத்ரனின் முறைப்பில் அப்படியே நிறுத்தினான்”

 

ஆருத்ரன், “எனக்கும் அவன் மேல தான் சந்தேகமா இருக்கு என்று யாருக்கோ கைபேசியில் அழைத்தான். டேய் என்னடா வேணும் உனக்கு? அது தான் உன்னோட பாகத்தை பிரிச்சிக்கிட்டு போயிட்டல்ல அப்பறம் என்ன? நீ எல்லாம் இந்த குடும்பத்துல பிறந்தவனா? ச்சே நீயெல்லாம் எனக்கு தம்பியா? சித்தப்பா பையன்னாலும் உன் மேல உண்மையான பாசத்தை தானே காட்டினோம் உனக்கு எங்க இருந்து இந்த மாதிரி கேவலமான புத்தி வந்தது.? இந்த கொலை முயற்சி உன்னோட வேலை தானே? இன்னும் என்ன வேணும் உனக்கு?”

 

எதிர்முனையில் ஒர் கம்பீர சிரிப்பு வந்த பின்னர் ஆமாடா நான் தான் உன்னை கொல்ல டிரை பண்ணேன் இப்ப அதுக்கு என்ன? சொத்தை பிரிச்சி கொடுத்துட்டா போதுமா? என்னை அவமானப்படுத்தி தானே வெளியே அனுப்பி வச்சிங்க.. அதுக்கெல்லாம் காரணம் அந்த கிழவன் தான்.. அவனை தான் கொல்லனும்னு நினைச்சேன் பட் வயசான அந்த ஆள கொல்லறதுனால என்ன யூஸ்? அதனால தான் அவன் உயிரா நினைக்கிற உன்னை கொல்ல நினைச்சேன் மிஸ் ஆகி போச்சி ச்சே.. “

 

ஆருத்ரன்,” டேய் தாத்தாவ மரியாதையா பேசு வந்தேன்னா நீ அவ்வளவு தான் உன்னால நான் செத்தா கூட பரவாயில்லை ஆனா அடுத்தவங்கள ஏன் காயப்படுத்துற? குறி வச்சி சுட தெரியாதவன்லாம் துப்பாக்கிய தூக்கிட்டு வந்துட்டான் பிளடி.. நீ என் எதிர்ல வா எப்படி குறி வைக்கனும்னு உன்ன வச்சி சொல்லி தரேன் பட் அதுல பெஸ்ட் பார்ட் என்னனா அத பார்க்க நீ உயிரோட இருக்க மாட்ட என்று கர்ஜித்தான்”

 

அவனோ,” டேய் நான் ஒன்னும் குறி வைக்க தெரியாம சுடல அக்ஷுவலி உன்னை தான் சுட வந்தேன் பட் குஹாசினி உன்கிட்ட சிரிச்சு பேசுறத பார்த்ததும் எனக்கு பிடிக்கல அதான் சுட்டேன். “

 

ஆருத்ரன்,” அவ என்கிட்ட பேசினா உனக்கு ஏன் கோபம் வரனும்? கோபம் வந்தா கூட ஒருத்ததவங்கள கொல்லற உரிமை உனக்கு யாரு கொடுத்தது? இடியட் “

 

அவனோ,” ஓஓ சூப்பர் உன்ன கொல்ல நினைச்சேன்னு சொன்ன போது பரவாயில்லை கொன்னுக்கோனு சொன்னவன் அவளுக்குன்னு சொன்னதும் அப்படியே பொங்குற? அவ்வளவு பாசமா? எனக்கு என்ன குறி வைக்க தெரியாமையா அவள சுட்டேன் நீ நினைக்கிறீயா? பிளடி இடியட் ஆருத்ரன்.. நான் அவகிட்ட எத்தனை தடவை பேச முயற்சி பண்ணேன்னு தெரியுமா? பெரிய இவ மாதிரி என்னை முறைச்சிட்டு போனா இன்னைக்கு உன்கிட்ட மட்டும் பல்ல காட்டிகிட்டு நிக்குறா.. உங்களுக்குள்ள எப்படி பழக்கம்? உங்க இரண்டு பேருக்கும் தான் ஆகாதே அப்பறம் எப்படி? காசு கொடுத்து ஹம் என்று இழுத்தான்..”

அடுத்த பக்கம்

Advertisements