உன்னில் மயங்குகிறேன் 8

ஹாசினியிடமிருந்து கால் வந்தது தெரிந்ததும் ஒரு நமட்டுச் சிரிப்பை சிந்தி விட்டு மிதுனிடமிருந்து தன் கைபேசியை வாங்கி கொண்டான் ஆருத்ரன்.

 

அவன் கைபேசியை வாங்கி கொண்டதும் அவனை ஸ்பீக்கரில் போட சொன்னான்.

 

ஆருத்ரன், “எதுக்குடா ஸ்பீக்கரில் போட சொல்ற?

 

மிதுன்,” சொல்றத செய்.. இல்லன்னா நான் இப்பவே நிவிதாவை நீ கூப்பிட்டனு இங்க அனுப்பி வச்சிடுவேன் பாத்துக்க..

 

ஆருத்ரன், “ஏன்டா நான் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க கூடாதா.. இரு ஸ்பீக்கர்ல போட்டு தொலைக்கிறேன் என்றான் இவர்கள் பேசி முடிப்பதற்குள் அவளின் அழைப்பை துண்டிக்கப்பட்டு இருந்தது.

 

“ டேய் அவ கால் கட் ஆயிட்டிச்சி..

 

மிதுன், “ அவளா உனக்கு கால் பண்ணாலா? இல்ல உன்னோட வேலையா?

 

ஆருத்ரன், “ அது வந்து ஈஈஈஈ..

 

அடச்சே கேவலமா இருக்கு.. அப்ப நீ தான் கால் பண்ணி இருக்க.. உனக்கு எப்படி அவளோட பர்சனல் நம்பர் தெரியும்?

 

ஆருத்ரன்,” சொல்றேன்.. பட் அதுக்கு முன்னாடி அவளுக்கு பேசிட்டு வரேனே என்றான் குழந்தையாய்..

 

இதுவரை அப்படி ஒரு ஆருத்ரனை மிதுன் பார்த்தது இல்லை.. அதனால் அவன் மாறுதலை ரசித்தபடி சரி என்றான்.

 

ஒரு வித துள்ளளோடு ஹாசினியின் எண்ணிற்கு அழைத்தான் ஆருத்ரன். அந்த முகத்தில் வழக்கத்திற்கு மாறாக முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி..

Advertisements

ஆருத்ரன் ஹாசினி எண்ணிற்கு அழைத்த சில நொடிகளிலேயே மறுபுறம் எடுக்கப்பட்டது..

 

குஹாசினி, “ஹாய் ஆரு.. எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் எப்படி போகுது? உங்களுக்கு இப்ப தான் என் கிட்ட பேச தோணிச்சா? அப்பறம்..

 

மிதுன்,” என்னடா இது? ஆருவா?

 

அவன் கேட்பதை பொருட்படுத்தாமல் ஹாசினியிடம் பேச ஆரம்பித்தான்.

 

ஆருத்ரன், “ஹாய் ஹாசினி, போதும் போதும் முதல்ல நீ கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்றேன்.. அப்புறம் வேற கேள்விய கேளு ஓகே..

 

குஹாசினி, “ ஓகே சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?

 

ஆருத்ரன், “நான் நல்லா இருக்கேன் ஹாசினி.. நீ எப்படி இருக்க?

 

குஹாசினி,” நானும் நல்லா இருக்கேன்.. அக்சுவலி நான் இன்னைக்கு நைட் உங்களுக்கு கால் பண்ணி பேசனும்னு நினைச்சேன்.. சர்ப்ரைஸா நீங்களே கால் பண்ணிட்டீங்க..

 

ஆருத்ரன், “வாவ் சூப்பர் டா.. நீயும் நானும் ஒரே மாதிரி யோசிச்சி இருக்கோம்.. நெக்ஸ்ட் டைம் பார்க்கும் போது எனக்கு சாக்லேட் தரணும் டீல்..?

 

குஹாசினி,” எப்பதிலிருந்து இப்படி மாறினீங்க பட் சிடு சிடுன்னு இருக்க ஆருக்கு இந்த குழந்தைத்தனமான ஆரு ஓகே தான்.. ஓகே டீல் கண்டிப்பா வாங்கிட்டு வரேன்..

 

ஆருத்ரன், “ சரி நீ இன்னைக்கு நடக்கபோற பிசினஸ் பார்ட்டிக்கு வருவ தானே?

 

குஹாசினி, “கண்டிப்பா வருவேன் ஆரு.. நீங்க?

 

ஆருத்ரன், “கண்டிப்பா அதுவும் உன்னை பார்க்க மட்டும் தான்..

 

குஹாசினி,” என்ன? என்னை பார்க்கவா? புரியல.. அப்ப மத்த பிசினஸ் பீபீல்லாம் பார்க்க மாட்டீங்களா? பேச மாட்டீங்களா?

அடுத்த பக்கம்

Advertisements