உன்னில் மயங்குகிறேன் 7

பத்திரிக்கையாளர்களை சந்திக்க பிடிக்காமல் அவர்களை திசை திருப்ப தான் அணிந்து வந்த உடையை மாற்ற எண்ணி ஒரு புடவை பையை தூக்கி கொண்டு ஓடி விட்டாள் குஹாசினி.

 

அதன் பின்னர் ஆருத்ரன் தவறாக ஒரு பெண்ணை குஹாசினி என்று தோள் தொட்டு திருப்ப, அதை பார்த்து ஒரு பெண் அவனிடம் சண்டைக்கு நின்றாள்.. பின்னர் தான் தான் ஹாசினி என்று சொன்னதும் அவனுக்கு மயக்கம் வராத குறைதான்.

 

தலையில் கொண்டையிட்டு, வாயில் வெற்றிலை பாக்கு இருக்க, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு ஒரு பொட்டு, கண்டாங்கி சேலை கட்டி கையில் ஒரு பையுடன் இருப்பவளை பார்த்து இவள் தான் குஹாசினி என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.

 

ஹாசினி, “என்ன ஆரு இந்த கெட்டப் ஓகேவா? யாருக்கும் என்னை அடையாளம் தெரியாதே?

 

ஆரு,” அடிப்பாவி நல்லா தானே போன? இது என்ன கோலம்? உன்னை பார்த்தா பிசினஸ் வீமன் மாதிரியே இல்ல கிராமத்துல இருந்து வந்தவ மாதிரி இருக்க.. பேசாம எங்கையாவது ஒரு வயலை வாங்கி விவசாயம் பண்ணு.. புண்ணியமா போகும்.

 

ஹாசினி,” தாங்க்யூ இது தான் எனக்கு வேணும்.. இரண்டு நாளா என் கூட இருந்த உன்னாலயே என்னை கண்டுபிடிக்க முடியலை அப்பறம் என்னிக்கோ ஒரு நாள் பார்க்கும் இவங்களால கண்டிப்பா கண்டுபிடிக்க முடியாது. ஓகே லெட்ஸ் கோ.

 

ஆரு,” ஏய் ஹாசினி ஒரு நிமிஷம் நில்லு.. ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமான்னு தெரியல..

 

ஹாசினி,” அடப்பாவி இவ்வளவு நேரம் அழகா டிரஸ் பண்ணிட்டு இருக்கும் போது கேட்டீயா? இப்ப இந்த மாதிரி இருக்கும் போது கேக்குற.. என்னால முடியாது.

 

ஆருத்ரன் ,” ஏய் ப்ளீஸ் இதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ்.. சோ சே சீஸ் என்று ஒருவழியாக போட்டோ எடுத்து விட்டான்..

 

ஹாசினி,” சரி ஓகே இனி இதோ என்னை எதிர்பார்த்து காத்து இருக்கவங்கள ஏமாற்றி விட்டு போகலாம் வா.

 

அவ்வாறே அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போது ஆருத்ரனை ஒரு மாதிரியாக பார்த்தனர் அனைத்து பத்திரிக்கையாளர்களும். அதில் ஒருவன் வந்து” சர் உங்க கூட வந்த குஹாசினி மேடம் எங்க? உங்க கூட வந்தது நாங்க பார்த்தோமே!!

 

ஆருத்ரன்,” குஹாசினியா? அது யாரு?

 

பத்திரிக்கையாளர்,” உங்க கூட ஒருதங்க பேசிக்கிட்டு வந்தாங்க இல்லையா அவங்கள தான் கேட்கிறோம்.

 

ஆருத்ரன்,” ஓ அந்த பொண்ணா அவரு சரியான லூசு சர். சும்மா நொய்யி நொய்யின்னு ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா தான் பெரிய பிசினஸ் மெக்னேட் அது இதுன்னு செம பீலா.. இப்ப தான் அவ கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்..

 

பத்திரிகையாளர்,” ஓ சாரி சர் நீங்க பேசிட்டு வந்ததை பார்த்து நீங்க அவங்க பாய் பிரண்ட்னு நினைச்சிட்டோம்..

 

ஆருத்ரன்,” அய்யோ அந்த லூச எவன் லவ் பண்ணுவான்? இதோ இவங்க தான் என்னோட கேர்ள் பிரண்ட் என்று புடவை கட்டி கொண்டு இருந்த ஹாசினியை காண்பித்தான்.

 

அவளை பார்த்ததும் பத்திரிகையாளர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.. ஆருத்ரனை தனியாக கூட்டிக்கொண்டு சர் கேக்குறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க இந்த பொண்ணு தான் உங்க கேர்ள் பிரண்டா? நீங்க பார்க்க அழகா பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கீங்க ஆனா அந்த பொண்ணு கிராமத்து பொண்ணு மாதிரி இருக்காங்க.. இது எப்படி?

 

ஆருத்ரன் அவளை பார்த்து கொண்டே, அவ என்னோட அத்தை பொண்ணு சின்ன வயசுலையே பேசி முடிவெடுத்துடாங்க.. அவளும் நல்ல பொண்ணு தான். இப்ப தான் பர்ட்ஸ்ட் டைம் சென்னைக்கு வரா.. இனிமேல் தான் மாத்தனும்.

 

பத்திரிகையாளர், “ ஓகே சர் நீங்க போயிட்டு வாங்க நாங்க எங்க வேலைய பார்க்க போறோம்.. இந்த மேடம் வேற எங்க போனாங்கனு தெரியல.. இவங்கள வச்சி ஒரு வாரம் ஓட்டலாம்னு பார்த்தோமே ச்சே என்று புலம்பியபடி சென்று விட்டார்.

 

அவர் சென்ற பிறகு ஆருத்ரனை தீயென முறைத்து கொண்டு நிற்பவளை கண்டு சிரிப்பு தான் வந்தது ஆருத்ரனுக்கு.

அடுத்த பக்கம்

Advertisements