உன்னில் மயங்குகிறேன் 6 (3)

ஆருத்ரன்,” அப்படியா ஓகே ஓகே என்று அதோடு அவர்கள் பேச்சு பிசினஸ் பக்கம் சென்றது அதிலையே நேரம் போனது தெரியவில்லை இருவருக்கும்.. ஒரு வழியாக காட்டிலிருந்து நாட்டிற்கு வந்து விட்டார்கள்.

 

சென்னை விமான நிலையம், இவர்கள் இருவரும் பேசியபடி வருவதை கவனித்துவிட்டது ஒரு ஊடக கண் உடனே கூட்டத்தை கூட்டி விட்டார்கள் இதை கவனித்த ஹாசினி, ஆரு நான் மாட்டினேன் இன்னைக்கு சாதாரணமாவே ஆயிரத்தி எட்டு கேள்வி கேட்பாங்க இதுல ஒரு மாசம் ஊரைவிட்டு போய் ஒரு பையனோட வரர்த பார்த்து இருக்காங்க என்னலாம் கதை எழுத போறாங்களோ!! இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆனா போதும் நியூஸ் கிடைக்காது.. என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டிருந்தவளின் கண்ணில் ஒரு புடவை கவர் தென்பட,

 

குஹாசினி, “ஆரு இங்கையே இருங்க இதோ வரேன் என்று நேராக புடவை கவரை யாரும் அறியா வண்ணம் தூக்கி கொண்டு கழிவறை பக்கம் சென்று விட்டாள்.

 

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஆருத்ரனுக்கு தான் பி. பி எகிறி கொண்டிருந்தது.

 

ரொம்ப நேரம் ஆகியும் அவள் வரவே இல்லை.. அவளின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள் அது அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லியது. சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவனின் கண்களில் ஒரு பெண் தென்பட்டால் அது குஹாசினியை போன்று தெரியவே அவளிடம் தோள் தொட்டு ஏய் ஹாசினி நீ என்ன இங்க வந்து இருக்க என்று பேசி கொண்டே திரும்பினால் அது அவள் இல்லை.. அந்த பெண்ணிடம் மன்னிப்பு வேண்டி விட்டு மறுபடியும் தேட ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு கரம் அவனின் தோள்களை பதமாய் தொட்டது.. அவனுக்கு தெரிந்து விட்டது இது அவள் தான் என்று ஏய் ஹாசினி எங்க போன என்று சொல்ல வாயெடுத்தவன் பேச்சற்று நின்றான்.

 

ஆருத்ரன், “ஏய் யாரும்மா நீ? ரொம்ப உரிமையா தோள் மேல கை வைக்குற.

 

“ நான் கை வச்சா தப்பு ஆனா நீ கை வச்சா தப்பு இல்லையா? என்றாள் அவள்.

 

ஆருத்ரன், “மைண்ட் யூவர் லாங்குவேஜ்.. நான் யார் மேல கை வச்சேன்?

 

“ இங்க இருந்த ஒரு பொண்ண தோள் தொட்டு திருப்பல? நீங்க பண்ணா தப்பு இல்ல நான் பண்ணா தப்பா?

 

ஆருத்ரன்,” யாரும்மா நீ,? நான் எனக்கு தெரிஞ்ச பொண்ணுனு நினைச்சி தான் அப்படி பண்ணேன் தப்பாலாம் இல்லை என்று அந்த பெண்ணிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தான்.

 

ஏய் ஆரு பயந்துடீங்களா இட்ஸ் மீ, குஹாசினி.. என்றவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்தால் கண்டிப்பாக அவள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் இருந்தது அவளின் அலங்காரம்.

 

எப்படி இருந்தான்னு தானே கேக்குறீங்க அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்… ஹி ஹி

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

உன்னில் மயங்குகிறேன் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

Advertisements