உன்னில் மயங்குகிறேன் 6 (2)

குஹாசினி, “ஆருருரு என்ன தான் ஆச்சு உங்களுக்கு? அப்ப அப்ப சிலை மாதிரி நிக்கறீங்க.

 

ஆருத்ரன்,” ஆ அது வந்து ஹாசினி இதப்பத்தி அப்பறம் பேசலாம் பிளைட்க்கு டைம் ஆச்சு வா கிளம்பு என்று ஒரு வழியாக சென்னை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டார்கள்.

 

குஹாசினி, “ஆரு இன்னும் ஒரு 10 மணி நேரம் தான் நீங்களும் நானும் இந்த மாதிரி சிரிச்சி பேச முடியும்.. அதுக்கு அப்புறம் எப்பவும் போல முகத்துல கடுமைய வச்சிக்கிட்டு வளைய வர வேண்டியது தான்.

 

ஆருத்ரன் அவள் கைகளை தன் கைக்குள் வைத்து ஆதரவாக பிடித்தபடி, ஹாசினி உனக்கு நான் அப்ப சொன்னது தான் நீ நீயா இரு எப்பவும் அடுத்தவங்களுக்காக வாழதே நமக்கு இந்த ஒரு லைப் தான் சோ இருக்க வரைக்கும் சந்தோஷமா நமக்கு பிடிச்சா மாதிரி வாழனும். சோ இனிமேல் உனக்கு எப்படி இருக்கனும்னு தோணுதோ அப்படி இரு ஓகே.

 

குஹாசினி, “ஓகே ஆரு இனிமேல் நான் என்னுடைய இஷ்டம் போல தான் இருப்பேன் ஆனா இன்னொரு விசியம் நீங்களும் என்னை எங்கையாவது பார்த்தா இதே மாதிரி சிரிச்ச முகத்தோட பேசனும் சரியா முதல்ல பார்த்தா மாதிரி நோ சிடுமூஞ்சி.

 

அப்பொழுது தான் ஆருத்ரன் அங்கிருந்த தொலைக்காட்சி திறையில் தன் முகத்தை கவனித்தான் அது வழக்கத்திற்கு மாறாக ஒரு வித குறுநகை சிந்தி கொண்டிருந்தது. இது எவ்வாறு சாத்தியம் என்று எண்ணும் போது தான் பக்கத்தில் ஹாசினி ஒரு முதியவரிடம் பேசி கொண்டிருப்பதை கவனித்தான் அவர் இவளின் குறும்பு பேச்சில் தன்னை மறந்து தன் சோகத்தை மறந்து சிரித்து கொண்டு இருந்தார்.

 

அவரிடம் பேசி விட்டு இவன் புறம் திரும்பியவள், “பாவம் ஆரு அவருக்கு கிட்னி பெயிலியராம் ஹி இஸ் கவுண்டிங் இஸ் டேஸ்.. அதான் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.

 

ஆருத்ரன்,” அப்படி என்ன சொன்ன அவர் கிட்ட இப்ப பயம் போய் தெளிவா இருக்காரு.

 

குஹாசினி, “அதுவா எனக்கும் இரண்டு கிட்னியும் பெயிலியர் பாருங்க நான் அவங்க சொன்ன டேஸ் தாண்டி நல்லா தான் இருக்கேன்.. எனக்கு இப்ப கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு டாக்டர்கள் சொல்றத நம்பாதீங்க நான் அவங்க சொன்னத நம்பவே இல்ல நீங்களும் நம்பாதீங்க பீல் ப்ரி எங் மேன்  நெக்ஸ்ட் டைம்  எனர்சிடிக்காக இருக்க போறீங்க பாருங்கனு சொல்லிட்டு வந்தேன் என்றாள் தோளை குலுக்கியவாறு.

 

அவள் சொன்னதை கேட்டவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.

 

ஆருத்ரன், “ஏய் ஹாசினி என்ன சொல்ற நீ? உனக்கு கிட்னி பெயிலியரா? என்னடி சொல்ற? ப்ளீஸ்டி என்னை விட்டு எங்கையும் போகத என்று தன்னை மறந்து புலம்பி கொண்டிருந்தான்.

 

குஹாசினிக்கு அவன் புலம்புவதை காண பொறுக்கவில்லை.. ஏனோ அவனை தன்னுடன் சேர்த்து ஆறுதல் சொல்ல அவள் கைகள் நீண்டது ஆனால் மறு நிமிடமே இது தவறு அவன் வேறு ஒருத்திக்கு சொந்தமானவன் நீ நெருங்காதே என்று அவள் மனது எச்சரித்தது.

 

குஹாசினி, “ ஆரு ப்ளீஸ் எல்லாரும் பார்க்கறாங்க.. எனக்கு எதுவும் இல்ல நான் அவருக்காக சொன்னேன்.. ஹ அம் பர்பேக்டிலி ஆல்ரைட்.

 

ஆருத்ரன்,” ஏய் அறிவில்லை எதை சொல்லி விளையாடானும்னு தெரியாதா? ஒரு நிமிஷம் என் உயிரே போனா மாதிரி இருந்தது.

 

குஹாசினி, “எனக்கு ஏதாவதுன்னா நீங்க ஏன் கவலைபடனும்? அண்ட் ஒன் மோர் திங் நான் சொன்னத நீங்க சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன்.. நான் அவர் கிட்ட எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்குன்னு சொன்னேன்.. எனக்கு என்ன கல்யாணம் ஆச்சா என்ன?

 

ஆருத்ரன்,” அதான் நமக்கு என்று சொல்ல வந்தவன் அதை சொல்லாமல் சாரி ஹாசினி நீ சொன்னத வச்சி கொஞ்சம் பயந்துடேன்.

 

குஹாசினி,” பரவாயில்லை எனக்காக துடிக்கிற இரண்டாவது ஆள் நீங்க தான் சோ மன்னிச்சு.

 

ஆருத்ரன், “இரண்டாவது ஆள்ளா அப்ப பர்ட்ஸ்ட் யாரு ஷ்யாமா?

 

குஹாசினி,” அட நீங்க வேற அவனாவது கவலைப்படுவதாவது.. நான் என்னுடைய அம்மாவ சொன்னேன்.

அடுத்த பக்கம்

Advertisements