உன்னில் மயங்குகிறேன் 6

அவனையும் அறியாமல் அவளை ரசித்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது குஹாசினியின் குரல்..

 

தூக்கத்தில் ஏதோ புலம்புகிறாள் என்று நினைத்தவன் சொன்னதையே சொல்வது போல் தோன்றவே அவளின் உதடுகளின் அருகில் தன் செவியினை வைத்தான்.. முக்கியமாக ஏதோ சொல்கிறாள் என்று நினைத்தவனுக்கு அவள் சொன்ன வார்த்தை சிரிப்பை ஏற்படுத்தியது.

 

அப்படி அவ என்ன புலம்பிட்டு இருந்தானு தானே கேக்குறீங்க.. சொல்றேன்..

 

டேய் அறிவுகெட்ட ஷ்யாம் மரியாதையா என் லாலிபாப்ப என் கிட்ட கொடுடா.. நான் சாப்பிடுறதுல உனக்கு எங்க வலிக்குது வந்தேன் நீ அவ்வளவு தான் பார்த்துக்கோ என்று ஓங்கி ஷ்யாம் என்று நினைத்து ஆருத்ரனை உதைத்து விட்டாள். அவள் அடித்ததும் ஒரு அடி தள்ளி விழுந்தவனுக்கு வலி தெரியவில்லை மாறாக சிறு குழந்தையின் செய்கையே அவனை ரசிக்க வைத்தது.

 

சிறிது நேரம் ரசித்தவன் பின் அவள் சிணுங்கவும் எழ முடியாமல் எழுந்து அவன் அறை நோக்கி சென்றான் ஆருத்ரன்.

 

மறுநாள் காலை விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் கேப் டவுனை அடைந்தார்கள். இரவு அவள் உதைதத்தில் இடுப்பு பிடித்து கொள்ளவே தூங்க வெகு நேரம் ஆயிற்று ஆருத்ரனுக்கு.. அதனால் காலையில் அசந்து உறங்கி கொண்டிருந்தவனின் நாசியில் உயர்ரக வாசனை திரவிய நறுமணம்.. கனவென்று என்று நினைத்து புரண்டு படுத்தவனுக்கு அருகில் அவள் பிஞ்சு விரலின் ஸ்பரிசம் படவும் அலறியபடி எழுந்து அமர்ந்தான்.

 

கண்விழித்தவனின் பார்வையில் புத்தம் புது மலராய் வெள்ளை நிற சுடிதாரில் அளவான ஓப்பனையில் கூட தேவதையாய் மின்னுபவளை விட்டு அவன் கண்கள் இமைக்கவும் மறந்தன.

 

குஹாசினி, “குட் மார்னிங் ஆரு, சீக்கிரம் ரெடியாகுங்க இன்னும் அரை மணி நேரத்துல நாம இறங்கனும்.

 

ஆருத்ரன்,” ஹங் குட் மார்னிங் ஹாசினி.. அவ்வளவு சீக்கிரமாவா வந்திருச்சு?

 

குஹாசினி, “என்னது? கரெக்டான டைம் தான் நமக்கு இன்னும் 3 மணி நேரத்துல பிளைட்.. சோ ஹரிஅப்.

 

ஆருத்ரன், “நான் ரெடியாகனும்ன்னா பர்ட்ஸ்ட் நீ இந்த இடத்தை விட்டு போகணும்.

 

குஹாசினி,” ஆமால்ல.. சாரி நீங்க ரெடியாகுங்க.. பாய்

 

அவள் சென்றதும் ச்சே என்ன ஆருத்ரா நீ அவள அப்படி பார்க்குற இதை அவ கவனிச்சு இருந்தா என்ன நினைச்சு இருப்பா.. இனிமேல் அவளை பார்குறத குறைச்சிக்கனும் என்று எண்ணியவாறே தயாராகி வந்தான்.

 

வெளியே அவனுக்கு முன்னரே அவள் காத்திருந்தாள். இவன் தாங்கி தாங்கி நடந்து வந்த விதம் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அடக்கியபடி,

 

குஹாசினி, “ஆரு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்து வரீங்க?

 

‘ஆருத்ரன் மைண்ட் வாயிஸ் பாவி நல்லா கழுதை மாதிரி உதைச்சிட்டு கேக்குற கேள்விய பாரு, நான் நீ தான் உதைச்ச அதான்னு சொன்னா இவளுக்கு நாம அவ ரூம்க்கு போனது எல்லாம் சொல்ல வேண்டி வருமே’ சரி சமாளிப்போம்..

 

குஹாசினி,” ஆரு என்ன ஆச்சின்னு கேட்டா எதையோ யோசிச்சிட்டு நிக்கறீங்க.

 

ஆருத்ரன்,” அது வந்து என் கனவுல ஒரு அழகான கழுதை உதைச்சிதா நான் நிஜம்னு நினைச்சி கட்டில இருந்து கீழ விழுந்துடேன்.

 

குஹாசினி, “கனவு ஓகே பட் கட்டில் அவ்வளவு உயரம் இல்லையே விழுந்தா அடிபடாதே அப்பறம் எப்படி?

 

‘அய்யோ ஆண்டவா இவ மூளைய சில நேரம் ஓழுங்கா வேலை செய்ய வைக்குறீங்க சில நேரம் சுத்தமா வேலை செய்யறது இல்ல.. இப்ப இந்த நேரம் இவ இந்த மாதிரி கேள்வி கேக்கனுமா? தேவையில்லாத நேரத்துல கரெக்டா வேலை செய்யுது.. போ ஆண்டவா உன் பேச்சு கா..

அடுத்த பக்கம்

Advertisements