உன்னில் மயங்குகிறேன் 5

ஆருத்ரன் அவன் காதல் கதையை சொல்ல ஆரம்பித்தான்.. ஆனால் ஒரு புதிருடன்..

 

ஆருத்ரன், “ஹாசினி, நான் லவ் பண்ற பொண்ணு உனக்கு நல்லா தெரியும்.. இன்பேக்ட் நீ அவங்கள பார்த்து இருக்க, பேசி இருக்க..

 

குஹாசினி,” என்னது நான் பார்த்து இருக்கேன், பேசி இருக்கேனா? யார் அவங்க.. சீரியஸா யாருன்னு தெரியல..

 

ஆருத்ரன், “சரி சொல்றேன்.. என்னோட கம்பெனி மாடல் அழகி நிவிதா தான் என் கேர்ள் பிரண்ட்.

 

(அடப்பாவி நீ குஹாசினிய தான் சொல்ல போறன்னு பார்த்தா நீ என்னடான்னா நிவி கிவின்னு சொல்லிட்டு இருக்க)

 

குஹாசினி மைண்ட் வாயிஸ் அடச்சே அந்த திமிர் பிடிச்சவள தான் இவன் லவ் பண்றானா? சரி நமக்கு என்ன சிடுமூஞ்சிக்கு சிடுமூஞ்சு தான் கிடைக்கும்.. அது தான் இவனுக்கு விதிச்சி இருக்கு போல..

 

ஆருத்ரன், “ஹேய் ஹாசினி வாட் ஹபன்?

 

குஹாசினி,” ஒன்னும் இல்லை.. உங்களுக்கு ஏற்ற ஜோடி தான்.. சூப்பர்.. பட் நீங்க எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சிங்கன்னு சொல்லல..

 

ஆருத்ரன், “எனக்கு அவ மேல ரொம்ப இன்டிரெஸ்ட் இல்ல.. பார்க்க நல்லா இருக்கா.. வேலையில பெர்பெக்ட்.. ஒருநாள் அவளே வந்து என்கிட்ட உங்கள பிடிச்சி இருக்குனு சொன்னா.. எனக்கு மறுக்க ரீசன் இல்ல சோ ஓகே சொல்லிட்டேன்..

 

குஹாசினி,” இது தான் உங்க லவ் ஸ்டோரியா?

 

ஆருத்ரன், “என்ன? புரியல..

 

குஹாசினி, “இல்ல.. இது தான் உங்க காதல் கதையானு கேட்டேன்..

 

ஆருத்ரன்,” ஆமா.. ஆக்ஷுவலி உனக்கே நல்லா தெரியும்.. இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்துறது.. அவங்களுக்காக வெயிட் பண்றது.. கண்ணோடு கண் பார்க்கறது.. ரொமேன்ஸ் பண்றது.. இதெல்லாம் எனக்கு செட் ஆகாது.. இன்பேக்ட் ஐ டோன்ட் ஹவ் எ டைம் பார் இட்.. நிவிதா என்கிட்ட லவ் சொல்லன்னா வீட்டுல பாக்குற யாரையாவது கல்யாணம் பண்ணி இருப்பேன் அவ்வளவு தான்.

 

குஹாசினி, “ஹம் ஓகே.. யூ ஆர் ரைட்.. இன்னொரு கேள்வி கேக்கவா?

 

ஆருத்ரன்,” கேளு..

 

குஹாசினி, “ நீங்க ஏன் மீடியால முகத்தை காட்டல? உங்களோட ஆப்போசிட் கம்பெனியில இருக்க எனக்கே நீங்க யாருன்னு அடையாளம் தெரியல.. நீங்க பேசினது கூட ஞாபகம் இல்ல.. ஏன் அப்படி? நீங்க தான் ஆருத்ரன்னு தெரிஞ்சா உங்கள கொல்ல ஆள் இருக்காங்களா? பழைய பகை உங்க அப்பாவுக்கு ஏதும் இருக்கா? அதனால தான் உங்கள வெளியே யாருக்கும் தெரியாம பொத்தி பொத்தி வளர்கிறாரா?

 

அவள் கேட்ட கேள்வியில் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் ஆருத்ரன்.

 

குஹாசினி, “ஹலோ கேட்டா பதில் சொல்லனும் சிரிக்க கூடாது..

 

ஆருத்ரன்,” நீ நிறைய சினிமா பார்ப்பியா?

 

குஹாசினி, “ஏன் அப்படி கேக்குறீங்க?

 

ஆருத்ரன்,” இல்ல சினிமா கதை மாதிரி பழைய பகை இருக்கா? என்னை கொல்ல ஆள் இருக்காங்களானு கேக்குறீயே!!

 

குஹாசினி, “அவ்வளவா இல்லை.. ஆனா பார்ப்பேன்.. சரி சொல்லுங்க

அடுத்த பக்கம்

Advertisements