உன்னில் மயங்குகிறேன் 4

உன் முகம் வாடினால்

என் மனம் கலங்குவது

ஏனோ? உன் கம்பீர பார்வையே

பார்த்து பழகிய எனக்கு

உன் கலக்க பார்வையை

எதிர்கொள்ள இயலவில்லை..

இது ஏனோ?

 

அவள் கலக்கத்தை கண்டவன் மனம் பொறுக்காது அவனையும் அறியாமல் அவளை ஹாசினி என்றான் மென்மையாக.. அவள் அருகில் சென்று அணைத்தவனின் பிடியில் காமம் இல்லை, காதல் இல்லை அதையும் மீறி பாதுகாப்பை உணர்ந்தாள்.. அனைத்தையும் மீறி இத்தனை நாள் எட்டி பார்க்காத பெண்மை தலை தூக்க அவன் முகம் காணாது தலை கவிழ்ந்து நின்றாள் குஹாசினி..

 

ஆரு, “ஹாசினி, என்ன பாரு..

 

அவள் அவனின் கண் நோக்கினாள்.. அதில் உள்ள உணர்வை இவளால் படிக்க முடியவில்லை.. என்னவென்று கண்களாலேயே வினவினாள்.. அதில் கிறங்கியவன்,

 

ஆரு,” இங்க பாரு ஹாசினி, கூப்பிடலாம் தானே?

 

அவள் சம்மதமாய் தலையசைத்தாள்

 

ஆரு, “ நான் பார்த்த வரைக்கும் நீ ரொம்ப தைரியமானவ தானே.. இப்ப என்ன உனக்கு.. இந்த கலகலன்னு பேசுற ஹாசினி தான் எனக்கு பிடிச்சி இருக்கு.. எப்பவும் உர்னு உராங்குட்டான் மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்க அந்த ஹாசினி வேண்டாம்.. இன்பேக்ட் உன்னோட அந்த அட்டிடியூட் தான் உன்னோட கம்பெனியால என் கம்பெனிய தோற்கடிக்க முடியலனு நினைக்கிறேன்.. நம்ம டீலர்ஸ் கிட்ட நாம கொஞ்சமாவது இன்முகத்தை காட்டனும்.. எப்பவும் உன்ன சுத்தி இருக்கவங்க எல்லாம் தப்பாவங்கனு நீ நினைச்சிட்டு இருக்க.. அது ரொம்ப தப்பு.. உன்னோட சுயத்தை இழந்து ஏன் இருக்க.. நம்ளோட குணத்தை யாருக்காகவும் எதுக்காவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மாத்திக்க கூடாது ஓகே..

 

ஹாசினி, “எல்லாம் சரி தான்.. பட் நடுவுல ஏதோ உராங்குட்டான்னு சொன்னா மாதிரி இருந்ததுதே?

 

ஆரு,” அப்படியா? நான் அந்த மாதிரி நல்லா விதமா உன்ன சொல்ல வாய்ப்பே இல்லையே… உன்ன போய் எப்படி அப்படி சொல்லுவேன்.. உராங்குட்டான் பாவம் என்றான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு..

 

ஹாசினி,” வாட்? அப்ப வேற என்ன சொல்லுவீங்க?

 

ஆரு, “நீ ஒரு புது விதமான ஜந்து.. அந்த ஆதிவாசி மக்கள் உன்னை பலியிட தலைய பிடிச்சி ஆடு மாதிரி கட்டி வச்சி இருந்தாங்கல அப்ப உன்ன பார்க்கவே காமெடியா இருந்தது.. உன் முகம் வேற மூஞ்சூறு மாதிரி இருந்ததுதா அந்த நேரம் முக்கை வேற உறிஞ்சிக்கிட்டு ஐய்யோ இப்ப நினைச்சா கூட சிரிப்பு வருது என்று அவள் முகம் போன போக்கை பார்க்காமல் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் ஆருத்ரன்..

 

ஹாசினி, “டேய் நெட்டகொக்கு என்ன சொன்ன? நான் உராங்குட்டானா, மூஞ்சூறா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? ஏதோ காப்பாத்தினனு மரியாதை கொடுத்தா ரொம்ப தான் ஓவரா பேசுற? (மரியாதையா அது எப்ப இவ குடுத்தா?) மவனே உன்ன என்ன பண்றேன் பாரு என்று அவனை அடிக்க வந்தாள்..

 

ஆரு,” ஏய் நீ எனக்கு மரியாதை குடுத்து பேசினீயா? இப்ப எப்ப நடந்தது? நீ மட்டும் என்ன நெட்டகொக்குனு சொன்னல? நான் உன்ன மூஞ்சூறுனு தான் கூப்பிடுவேன் போடி.. மூஞ்சூறு..

 

ஹாசினி,” என்னது டியா?

 

ஆரு, “ஆமாடிடிடி எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன்டி.. நீ என்ன பண்ணுவடி என்று வார்த்தைக்கு வார்த்தை டி சொல்லி அவளை வெறுப்பேற்றினான்.

 

ஹாசினி, “ போடா தாட்டான்.

 

அவன் புரியாமல் வாட் என்றதும்..

அடுத்த பக்கம்

Advertisements