உன்னில் மயங்குகிறேன் 3

ஆருத்ரன் இந்த பெயரை கேட்ட நொடி அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு நடுக்கம் பிறந்தது..

 

குஹாசினி, “ஆருத்ரன்னா நீ.. நீங்க ருத்ரா குரூப் ஆப் கம்பெனிஸ் ஓனரா? லீடிங் பிசினஸ் மேன் இன் தி வேர்ல்ட்.. யங் பிசினஸ் மேன் அச்சிவ்மெண்ட் அவார்ட் ஹொல்டர்? இதுவரை எந்த தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களில் கூட முகத்தை காட்டாதவரா?

 

ஆருத்ரன்,” எஸ்.. யூ ஆர் கரெக்ட்..

 

குஹாசினி,” நீங்க எங்கள எதிரியா தானே பார்ப்பீங்க? என்னை எதுக்கு காப்பாத்தினீங்க? ஒருவேளை அவங்களாம் உங்க ஆளுங்கள? நீங்க தான் வேணும்னே என்ன மாட்டி விட்டீங்களா? நீங்க எப்படி இங்க வந்தீங்க? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்? நாம இதுவரை மீட் பண்ணதே இல்லையே!! நான் இத்தனை கேள்வி கேக்குறேன் எங்கையாவது வாயை திறந்து பேசுறீங்களா? பதில் சொல்லுங்க

 

ஆருத்ரன்,” ஏய் ஸ்டாப் இட்.. எவ்வளவு கேள்வி கேக்குற? நீ கேள்வி கேக்குறத நிறுத்தினா தானே நான் அன்சர் பண்ண முடியும்!!

 

குஹாசினி,” சரி சொல்லுங்க..

 

ஆருத்ரன், ” சீ உங்கிட்ட நான் பேசினது இல்ல தான்.. பட் உன்ன பத்தின நியூஸ் படிப்பேன்.. ஏன்னு கேக்காத பதில் சொல்றேன்.. நீ என்னோட எதிரி கம்பெனியோட ஓனர்.. சோ உன்னோட ஒவ்வொரு மூவ்வையும் வாட்ச் பண்ணுவேன்.. அண்ட் உன்னோட அடுத்த கேள்வி.. அந்த ஆதிவாசி மக்கள் என்னோட ஆளுங்க இல்ல.. எனக்கும் உன்ன மாதிரி வேறுபட்ட மனிதர்களை பத்தி தெரிஞ்சிக்க பிடிக்கும்.. சோ இயர்லி ஒண்ஸ் இந்த மாதிரி எங்கையாவது வருவேன்.. எதேச்சையா தான் உன்ன பார்த்தேன்..

 

குஹாசினி,” அப்ப எப்படி நீங்க பேசறது அவங்க புரிஞ்சிகிறாங்க? நீங்க சொன்னத வச்சி என்ன விட்டாங்க..? என்னை பார்த்தீங்க சரி, எதுக்காக என்னை காப்பாத்தி கூட்டிக்கிட்டு வந்தீங்க?

 

ஆருத்ரன்,” லூசா நீ.. உனக்கு எப்படி அவார்ட் கொடுதாங்கனு தெரியலையே.. நான் இங்க வந்து மூனு மாசம் ஆச்சு.. அதனால அவங்க மொழி புரிஞ்சிக்க முடிஞ்சிது.. நான் அங்க வந்ததிலிருந்து என்னை நல்லா தான் பாத்துக்கிட்டாங்க.. நான் வரும் போது அவங்க மொழி தெரிஞ்ச ஒருத்தர கூட கூட்டிக்கிட்டு வந்து பேசி பழகிகிட்டேன்.. அண்ட் அவங்களோட நரபலி பத்தி எனக்கு முன்னவே தெரியும்.. நீ அவங்க கிட்ட மாட்டுறதுக்கு முன்னாடி ஒரு பொண்ண புடிச்சி வச்சி இருந்தாங்க.. நான் தான் அவள காப்பாத்தி அனுப்பி வச்சிட்டு வந்தா நீ மாட்டிக்கிட்டு இருந்த.. அதனால தான் பொய் சொல்லி காப்பாத்தினேன் போதுமா? அங்க நீ இல்ல வேற யாரா இருந்தாலும் இத தான் செஞ்சி இருப்பேன்.. நீ என் எதிரி இல்ல உன்னோட கம்பெனிஸ் தான்..

 

ஆமா, நீ என்ன என்கிட்ட கிராணட் பிசினஸ் மட்டும் சொல்ற, புதுசா இருக்கறவன் கிட்ட ஏன் சொல்லனும்னு நினைச்சியா?

 

குஹாசினி, “ஆமா, பின்ன? இதுவே சொல்லி இருக்க மாட்டேன்.. பட் என் வாய் இருக்கே அது தான்.

அது அடங்கவே மாட்டேன்து..

 

ஆருத்ரன்,” புரிஞ்சா சரி.. நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லு..

 

குஹாசினி, “கேளுங்க..

 

ஆருத்ரன்,” எந்த நம்பிக்கையில என் கூட வர? ஒருவேளை நான் உன்னை கடத்திக்கிட்டு போய்ட்டேனா? இல்ல உன்ன ஏதாவது செஞ்சிட்டா என்ன பண்ணுவ? நான் தான் நீ சொன்ன ஆருத்ரன்னு உனக்கு கன்பார்மா தெரியுமா?

 

இதை எல்லாம் கேட்ட குஹாசினிக்கு தான் செய்த தவறு புரிந்தது.. அவன் சொன்னது போல் இவன் ஒருவேளை நான் நினைத்தது போல் இல்லாமல் இருந்தால்? ஐய்யயோ குஹா நீ நேரமே சரி இல்லடி.. இவன் வேற ஆளு பல்கா இருக்கானே!! நீ அடிச்சா அவனுக்கு மசாஜ் பண்றா மாதிரில இருக்கும்? ஆனா நடுவுல ஏதோ சொன்னானே!! ஹான் என்னை பத்தி எல்லாத்தையும் கரெக்டா சொல்றானே? அது எப்படி? ஒரு வேளை நம்மள பாலோ பண்ணி வந்து இருப்பானோ? என்று அவனை மேலும் கீழும் ஆராய்ந்தாள்..

 

அவன் உடை, அவன் தோரணை, அவன் பேச்சு, அனைத்தும் ஒரு வித கம்பீரமாய் இருந்தது.. அவன் கண்கள் இவளை பார்த்து கள்ளத்தனமாய் சிரித்தது.. அவன் தப்பானவன் என்று சிறு மனது நம்ப மறுக்கிறது.. இருந்தாலும்… குஹா ஓடு என்று அவனை விட்டு ஒட ஆரம்பித்ததாள்.. அதுவும் அந்த ஆதிவாசி மக்கள் இருக்கும் பக்கமாக..

 

இதை கவனித்தவன்.. ஏய் குஹாசினி நில்லு? எங்க போற? அந்த பக்கம் ஆதிவாசி மக்கள் தான் இருக்காங்க..

அடுத்த பக்கம்

Advertisements