உன்னில் மயங்குகிறேன் 24

யாரும் எதிர்பார்க்காத வகையில் குஹாசினியின் கழுத்தின் பின் பக்கமாக தாலியை கொண்டு வந்து இருந்தான் ஷ்யாம்.. அதை கவனித்து விட்ட குஹாசினி அவன் கையை அசையாதவாறு பிடித்து கொள்ளவும் சுதாரித்த ஆருத்ரன் ஷ்யாமின் கால்களை தட்டி விட்டான் அதில் நிலைதடுமாறி கீழே விழுந்தான் அவன்.

கீழே விழுந்ததும் அவன் கைகளில் இருந்த தாலியை பறித்தனர் சுற்றி இருந்தவர்கள்.. பறித்ததோடு மட்டுமல்லாமல் ஆருத்ரனிடம் கொடுத்து “சர் உங்க இரண்டு பேர் கண்களிலும் பேச்சிலும் காதல் பொங்கி வழிகிறது நீங்க இரண்டும் பேரும் சேருவது தான் சரி இவனை நாங்க பார்த்துக்கிறோம் நீங்க இவன் குறிச்ச அதே மூகூர்த்தல இவங்க கழுத்துல தாலி கட்டி உங்க மனைவியா கூட்டிக்கிட்டு போங்க அப்ப தான் இவன் அடங்குவான் இவன் நல்லவன்னு நம்பி இங்க வந்து தப்பு பண்ணிட்டோம் அதை திருத்திக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க”

ஆருத்ரன்,” பார்த்தியா ஷ்யாம் இவங்க எல்லாம் உனக்காக வந்தவங்க ஆனா உன்னோட உண்மையான முகம் தெரியவும் எங்களை சேர்த்து வைக்க பார்க்குறாங்க.. இனிமேலாவது திருந்துற வழியை பாரு.. சுற்றி இழந்தவர்களிடம் திரும்பி “உங்க பேச்சை கேட்க முடியாத நிலைமைல நாங்க இருக்கோம் உங்க அன்புக்கு மிக்க நன்றி ”

” ஏன் இப்படி சொல்றீங்க உங்க கல்யாணத்த பார்க்க நாங்க ஆசையா இருக்கோம் எங்களுக்காக.. ”

ஆருத்ரன் ,” இல்லங்க உங்க ஆசை புரியுது ஆனா இதுவரைக்கும் இவ என்னை லவ் பண்றாளா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது அதுவும் இல்லாம இதுக்கு முன்னாடி ஒரு தப்ப நாங்க பண்ணோம் அது எங்க உயிரை காப்பாற்றி கொள்ள பண்ணாலும் தப்பு தான்னு அப்பறம் தான் புரிஞ்சது அதனால நிறைய பிரச்சனை அது எல்லாமே தீர்க்காம இருக்கு அது எல்லாம் திர்க்கனும் அதுக்கு அப்புறம் தான் இது எல்லாம் ”

” சரிங்க சர் அப்பறம் உங்க இஷ்டம் ஆமா உங்க கூட வந்த அந்த போலீஸ்காரர் எங்க போனாரு? ”

ஆருத்ரன்,” ஆமா இவன் பண்ண அலப்பறைல அவனை மறந்துட்டேனே.. கதிர் கதிர் எங்க இருக்க? என்றதும் ஒர் அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் அங்கே சென்று பார்த்தான் அங்கே கதிர் இருக்கவும் அவனையும் ஹாசினியையும் அழைத்து கொண்டு கிளம்ப ஏத்தனித்தான்.. சிறிது தூரம் சென்று இருப்பார்கள் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்து ஆனால் பிரச்சினை ரவுடிகள் மூலமாக வந்தது.. சென்று கொண்டு இருந்தவர்களை பிடித்து இழுத்து வந்தனர் அவர்கள்.

“பாஸ் வாங்க பாஸ் வந்து தாலியை கட்டுங்க உங்கள அடிச்ச இவங்களை நாங்க சும்மா விடமாட்டோம் எழுந்து வாங்க பாஸ்”

சுற்றி இருந்த மக்களில் தடுக்க நினைத்தவர்களை கைகளில் இருந்த கத்தியை வைத்து கீறினர் அதை பாரத்த மற்றவர்கள் பின் செல்ல துவங்கினர்.

அதை பார்த்த ஷ்யாம் சிரித்து கொண்டே” பார்த்தியா ருத்ரா இவ எனக்கு தான்னு எழுதி இருக்கு போல நீ இவ்வளவு பண்ணியும் கடைசியில என்கிட்டயே வந்துட்டா பார்த்தியா” என்று சொல்லி கொண்டே குஹாசினியை நெருங்கி இருந்தான்.

அவளால் எவ்வளவு போராடியும் அவளை பிடித்து இருந்த ரவுடிகளின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை” ஷ்யாம் ப்ளீஸ் வேண்டாம் நான் ஆருவை தான் லவ் பண்றேன் “ஆரு நீங்க அப்ப கேட்டீங்கல நான் இப்ப சொல்றேன் ஐ லவ் யூ ஆரு ஐ லவ் யூ ” என்றதும் அவன் கண்களில் இருந்த கண்ணீர் வந்தது  இக்கட்டான நிலையில் தன்னவளை காக்க முடியாத நிலைமையில் இருக்கிறோமே என்ற எண்ணமே அதற்கு காரணம். தன்னை பிடித்து இருந்த ரவுடிகளை எவ்வளவு அடித்தும் தாங்கி கொண்டு அசையாமல் நின்றனர் கதிரின் நிலைமையும் அதே தான் அவன் எவ்வளவு அடித்தும் அவர்கள் வலியை பொறுத்து கொண்டு நின்றிருந்தனர்.

ஷ்யாம் தாலியை கட்ட வந்து கொண்டு அந்த சமயம் தன்னை நிலைப்படுத்தி கொண்டாள் ‘இவன் என் கழுத்துல கட்ட மாட்டான் அப்டியே நடந்தாலும் இதுக்கு பேர் கல்யாணம் இல்லை மனசுக்கு பிடிச்ச என் ஆரு கூட நடக்குறது தான் கல்யாணம் இது நடந்தா என் மனசு மாறுமா என்ன? இரண்டு மனசுக்கும் பிடிச்சு இருந்தா தான் கல்யாணம் தாலின்னு  இவன் கட்டினா அது என்னை பொறுத்த வரைக்கும் வெறும் கயிறு தான்’ என்ற எண்ணம் தோன்ற ஆருத்ரனை ஒருமுறை பார்த்தாள் அவனிடம் “ஆரு இவன் இந்த தாலியை கட்டினா அது கல்யாணமா? அவன் இல்லை என்று தலையாட்டவும்” நான் இதுக்கு அப்பறம் உங்க கிட்ட வந்தா இதே காதலோட என்னை பார்ப்பீங்களா? அவன் “கண்டிப்பா நீ எப்பவும் என் ஹாசினி தான் நான் இறக்கும் போது கூட உன்னை காதலிப்பேன்.. இவன் உன்னை கட்டாயப்படுத்தி தாலி கட்டினா அது என்னை பொறுத்த வரைக்கும் கல்யாணம் இல்லை மனசு இரண்டும் சேர்ந்து நடந்தா தான் கல்யாணம் நீ தைரியமாக இரு ஹாசினி” அதன் பிறகு திடமாக தான் எடுத்த முடிவை எதிர்கொள்ள தயாராகி கண்களை மூட நினைத்த அந்த நொடி குஹாசினி காதில் அம்மா என்ற அலறலும் கூடவே துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது.. கண் விழத்தவளின் எதிரில் கைகளில் ரத்தம் வழிய அழுது கொண்டு இருந்தான் ஷ்யாம் அவன் கைகளில் இருந்த தாலி கதிரின் கையில் இருந்தது அவனை பிடித்து இருந்த ரவுடிகளும் ஆளுக்கு ஒரு மூலையில் சுருண்டு இருந்தனர்.

என்ன ஆச்சுன்னு பார்ப்போமா?

அவன் குஹாசினியின் கழுத்தில் தாலி கட்ட போவதை தடுக்க எண்ணிய கதிர் தன்னை பிடித்து இருந்த ரவுடிகளை தான் அறிந்த வர்ம கலை மூலமாக சுருண்டு விழ செய்தான் அதன் பிறகு சிறிதும் தாமதிக்காமல் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து ஷ்யாமின் கைகளில் சுட்டான்.. “ருத்ரா இவனை நாம எவ்வளவு அடிச்சாலும் அவ்வளவு அடி வாங்கிட்டு திரும்ப எழுந்து வரான் இது சரிபட்டு வராது நீ இந்த தாலியை குஹாசினி கழுத்துல கட்டு அது தான் இவன் கிட்ட இருந்து தப்பிக்க வழி.. உங்க இரண்டு பேருக்கும் பிடிச்சி இருக்குல அப்பறம் என்ன உன்னோட பேரண்ட்ஸ் கிட்ட நான் பேசுறேன் அடிச்சா கூட நான் வாங்கிகிறேன் ஆனா இவனை மட்டும் விட மாட்டேன் குஹாசினி நீங்க இவன் மேல கம்ப்ளைன்ட்  குடுங்க ஸ்டேஷன் கூட்டிக்கிட்டு போய் என் கோபம் போற வரைக்கும் அடிச்சிட்டு தான் கோர்ட்க்கு கூட அனுப்புவேன்”

ஆருத்ரன்,” ஆனா கதிர்.. இது.. ”

அதுவரை அமைதியாக இருந்த ஹாசினி ஆருத்ரன் மறுப்பதை பொறுத்து கொள்ள முடியாமல்,

குஹாசினி,” ஏய் நெட்டகொக்கு என்ன நினைச்சிட்டு இருக்க நீ அதான் அவர் சொல்றாருல வந்து என் கழுத்துல தாலி கட்டு சும்மா தயங்கி நின்னுட்டு இப்ப நீ கட்டுறீயா இல்ல நான் உன் கழுத்துல கட்டவா ? ”

கதிர்,” இப்ப என்ன பண்ண போறீங்க சர்? ”

ஆருத்ரன், “சரி கட்டுறேன் ஆனா ஊரறிய உன்னை மனைவியா ஏற்றுக்கனும்னு நினைச்சேன் இப்ப.. ”

குஹாசினி,” இங்க பாருங்க இங்கையும் ஆளுங்க இருக்காங்க இல்லை உங்களுக்கு எல்லார் சம்மதத்துடன் தான் கல்யாணம் நடக்கனும்னு நினைச்சிங்கன்னா அடுத்து அமர் வருவான் அவனும் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா நீங்க தான் சொன்னீங்க அவன் என்ன பண்ணுவான்னு தெரியாது அவன் ஏதாவது செய்ய போய் நீங்க அவன் கூட போராடனும் இதுக்கு எல்லாம் ரெடின்னா நீங்க பொறுமையா பிரச்சனையை முடிச்சிட்டு வாங்க நான் வெயிட் பண்றேன்.. இறந்தது என் அப்பா எனக்கும் என் அப்பாவை கொன்னவங்கள கண்டுபிடிச்சி நாலு அடி அடிக்கனும்னு தோணுது.. சரி அதை விடுங்க இப்ப முடிவா என்ன சொல்றீங்க? ”

அடுத்த பக்கம்

Advertisements