உன்னில் மயங்குகிறேன் 20

தன் நண்பனின் உடல்நிலை கண்டு ஆருத்ரன் அழுது கொண்டு இருக்க அவனுக்கு முன்னால் ஒரு பெண் அந்த ஐசியுவின் வாசலில் நின்று அழுது கொண்டு இருந்தாள்..சத்தம் கேட்டு யார் என்று பார்க்க அங்கே லாவண்யா மட்டுமே நின்றிருந்தாள்..

‘இந்த பொண்ணு ஏன் இங்க அழுதுகிட்டு இருக்கா?’

ஆருத்ரன், “ஹலோ மிஸ் நீங்க நர்ஸ் தானே?” அவள் ஆம் என்று தலையாட்டவும்” நீங்க ஏன் இங்க நின்னுட்டு அழுதுகிட்டு இருக்கீங்க? இங்க என் பிரண்ட் தான் இருக்கான் ரூம் மாற்றி வந்து நிக்குறீங்களா?”

லாவண்யா, “சர் நான் மித்துக்காக தான் இங்க இருக்கேன்”

ஆருத்ரன், “மித்து அது யாரு?”

அவள் சொல்ல வருவதற்குள் மிதுனின் தாய் தந்தை அங்கு வந்து விட்டனர்.. வந்தவர்கள் நேராக ஆருத்ரனிடம் சென்று நடந்ததை விசாரித்து விட்டு லாவண்யாவை கட்டி கொண்டு அழுதனர்.. இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஆருத்ரனுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் இருந்த குழப்ப நிலையில் அவனால் எதையும் யோசிக்கவும் முடியவில்லை ஆனால்  குஹாசினிக்கு மட்டும் மிதுன் ஆருத்ரனுக்கு தெரியாமல் தன் வாழ்கையின் அடுத்த அடியை எடுத்து வைத்து இருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது..

குஹாசினி, “ஆரு என்ன ஆச்சு? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா?”

ஆருத்ரன், “இன்னும் இல்லை ஹாசினி இங்க பாரு இவங்கள உனக்கு நியாபகம் இருக்கா?”

குஹாசினி, “இருக்கு நர்ஸ் தானே இவங்க? அதுக்கு என்ன இப்ப?”

ஆருத்ரன், “இல்லை நான் அவனுக்காக அழுறேன்னா அவன் என்னோட பிரண்ட் இவங்க அவனோட அப்பா அம்மா ஆனா இவங்க? ”

குஹாசினி,” இந்த கேள்விய நீங்க மிதுனோட அப்பாவோட கேட்கலாமே!! நீங்களே ஏன் குழம்பிட்டு இருக்கீங்க? ”

ஆருத்ரன், ” எஸ் யூ ஆர் ரைட் “என்று மிதுனின் அப்பாவிடம் சென்றான் “அப்பா இங்க என்ன நடக்குது இவங்க நர்ஸ் தானே உங்களுக்கு இவங்கள தெரியுமா? ”

அதற்கு மிதுனின் தந்தை சத்யன், “இவ என்னோட தூரத்து உறவு ருத்ரா மிதுனுக்காக இவள கேட்டோம் ஆனா இந்த பொண்ணு இதுவரை சரியா பதில் சொல்லல விசயம் தெரிஞ்சி இங்க வந்து இருப்பா போல”

ஆருத்ரன், “அப்படியா? சரி அப்பா எனும் போதே டாக்டர் ஐசியுவில் இருந்து வெளியே வந்தார் அவரை பார்த்ததும் அலறியபடி ஓடினர் அனைவரும்.

சத்யன், ” டாக்டர் என் பையன் எப்படி இருக்கான்? அவனுக்கு எதுவும் இல்லையே?”

டாக்டர் அனைவரும் ஒருமுறை பார்த்து விட்டு அவருக்கு இன்னும் நினைவு திரும்பல அவர் கிட்ட பேசுங்க உங்க பேச்சு தான் அவரை இயல்புக்கு எடுத்துட்டு வரும் பார்க்கலாம்.. அப்பறம் லாவண்யா நீ அவருக்கு சொந்தமா? ”

சத்யன்,” ஆமா டாக்டர் எங்க சொந்தம் தான் ஏன் கேக்குறீங்க? ”

டாக்டர்,” உங்க பையன் இவங்க பெயரை தான் மயக்கத்தில் கூட புலம்புறாரு இவங்கள போய் பார்த்துட்டு வர சொல்லுங்க முதல்ல அவர் உடனடியாக ரியாக்ட் பண்ண வாய்ப்பு இருக்கு அதுக்கு அப்புறம் ஒருத்தர் ஒருத்தரா பேசுங்க நைட் அவர் கண் முழிச்சிட்டா நாளைக்கே நார்மல் வார்டுக்கு மாற்றிடலாம்.

அதன்படி முதலில் லாவண்யா உள்ளே சென்றாள் அவன் நிலை கண்டு கலங்கியபடி, “மிதுன் என்னை பாருங்க ப்ளீஸ் எப்பவும் போல என்கிட்ட வம்பு பண்ணுங்க நான் உங்களை எதுவும் சொல்லமாட்டேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் குடும்ப சூழ்நிலை அதனால தான் நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் மற்றபடி நான் உங்களை வெறுத்தது இல்லை நான் நான் உங்களை.. எனும் போது ஆருத்ரன் உள்ளே வந்தான்.

ஆருத்ரன், “லாவண்யா நீ பீல் பண்ணாதமா அவன் உன்னை லவ்லாம் பண்ணல வீட்ல சொன்னாங்க அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேனு என்கிட்ட ஒரு நாள் சொன்னான் அதனால நீ பீல் பண்ணாத ஏதோ சொந்தம் விட்டு போக கூடாதுன்னு சொன்னதாக நியாபகம்”

அவன் பேச பேச லாவண்யா எதுவும் புரியாமல் நின்றிருந்தாள் குஹாசினிக்கு மட்டும் ஏதோ புரிவது போல இருந்தது.

” நீ கவலைப்படாம இரும்மா அவன் என் ஆபீஸ்ல ஒரு பொண்ண லவ் பண்றான் அந்த பொண்ணு இன்னும் டச்ல தான் இருக்கா போல ”

லாவண்யா,” உண்மையாவா சொல்றீங்க? என்கிட்ட என்னை மட்டும் தான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்னு சொல்லுவாரே அப்ப அது எல்லாம் பொய்யா?”

ஆருத்ரன், “அட ஆமாம்மா இவனுக்கு நிறைய கேர்ள் பிரண்ட் இருக்காங்க ”

குஹாசினி,” ஆரு என்ன பேசறீங்க? ”

சத்யன்,” ருத்ரா என்ன இது ஏன் இப்படி பேசிட்டு இருக்க? ”

சுந்தரி,” ருத்ரா என் பையன பற்றி தப்பா பேசாத உனக்கு அவனை பற்றி தெரியாதா? ”

ஆருத்ரன்,” நல்லா தெரியும்மா அதனால தான் அவன் நடிக்கிறான்னு நான் கண்டுபிடிச்சேன் ”

சத்யன்,” என்ன நடிக்கிறானா?

ஆருத்ரன், ” ஆமா இவன் நடிக்கிறான் அப்பா பாருங்க நான் பேச பேச அவனுக்கு எவ்வளவு வியர்த்து போகுது டேய் இப்ப நீ கண்ணை திறக்கல நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது”

அதன் பிறகும் அவன் கண் திறவாமல் இருந்தால் தான் அதிசயம்.

அவன் கண் திறந்ததும் பளார் என்று விழுந்தது அறை சத்யன் தான் அடித்திருந்தார்.

சத்யன்,” என்ன விளையாட்டு மிதுன் இது நீ எங்களுக்கு ஒரே பையன்டா உனக்கு ஏதாவதுன்னா நாங்க எப்படி தாங்குவோம்னு யோசிச்சி பார்த்தியா”

மிதுன், “அப்பா அது வந்து..”

லாவண்யா, “என்ன வந்து போய்னு இழுக்குறீங்க? நாங்க எல்லாம் எவ்வளவு துடிச்சி போயிட்டோம் தெரியுமா? ஏன் இப்படி பண்ணீங்க? அடியே படாம ஏன் இப்படி பொய் சொன்னீங்க? ”

மிதுன்,” ஏய் அடிப்பட்டது உண்மை தான் ஆனா இங்க வர அளவு இல்லை என்னை ஆம்புலன்ஸ் இடிச்சப்போது நிவிதா நளன் கூட என்கூட இல்லை டாக்டர் தெரிஞ்சவர் அதனால உடனே அட்மிட் பண்ணிட்டு இவங்களே போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டாங்க ”

ஆருத்ரன்,” இங்க வர அளவுக்கு இல்லைன்னா அப்பறம் சிறிய காயத்துக்கு ஏன் இப்படி பண்ண? லாவண்யாகாகவா? ”

குஹாசினி,” இதை நீங்க கேட்டு தான் புரிஞ்சிக்கனுமா ஆரு.. மேடம் லவ்வ அக்ஸப்ட் பண்ணல அதான் சர் ப்ளான் பண்ணி டிராமா பண்ணி இருக்கார் இதுக்கு அந்த டாக்டர் வேற துணை ”

ஆருத்ரன், “டாக்டர எப்படி ஓகே சொல்ல வச்ச? ”

மிதுன்,” அதுவா நான் இவள லவ் பண்றத டாக்டர் கிட்ட சொன்னேன் இவ என்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன்றானு சொல்லி உதவி கேட்டேன் அவரும் இவள அவரோட மக மாதிரி பாக்கறதாகவும் அவ சம்மதம் சொன்னா ஓகே இல்லன்னா டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு போயிட்டாரு அதே மாதிரி என் மேல இருக்க லவ்வ சொல்ல வர நேரத்துல கரெக்டா வந்து ஸ்டாப் பண்ணிட்டியே பாவி அது சரி நான் நடிக்கிறேன்னு எப்படி கண்டுபிடிச்ச? ”

ஆருத்ரன்,” சிம்பிள் டாக்டர் சொன்னத என்னால நம்ப முடியல அதுவும் இல்லாம லாவண்யா உன்கிட்ட பேசும் போது நீ சிரிக்கறத நான் பார்த்தேன் அப்பவே தெரிஞ்சி போச்சி நீ நடிக்கிறேன்னு ”

அடுத்த பக்கம்

Advertisements