உன்னில் மயங்குகிறேன் 2

ஆதிவாசி தலைவர் இவனிடம் சொன்னதை கேட்டு நச்சரித்த குஹாசினி, விசியத்தை தெரிந்து கொண்ட பின்னர் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அதன்பிறகு சுதாரித்து இவனை ருத்ர காளியாய் முறைக்க ஆரம்பித்தாள்.

குஹாசினி, “ஏய் நெட்டகொக்கு என்ன நினைச்சிட்டு இருக்க நீ? என்ன காப்பத்த தானே பொய் சொன்னேன்னு சொன்ன, இப்ப அந்த வளர்ந்து கெட்டவன் சொன்னான்னு உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்ற.. நான் தான் எனக்கு ஆள் இருக்கான்னு சொன்னேன்ல.. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு தலையாட்டி சம்மதம் சொல்லிட்டு இங்க வந்து பாவமா முகத்தை வச்சிக்கிட்டு பிரச்சனைனு சொன்னா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கனுமா? நெவர்.. நான் செத்தாலும் பரவாயில்லை.. ஆனா உன்ன மாதிரி ஒரு சிடுமூஞ்ச கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்..

புதியவன், ” இங்க பாரு நான் ஒண்ணும் உன் மேல ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டு வரல.. நான் உன்ன காப்பாற்ற சொன்ன பொய்ய யாரும் முழுசா நம்பல.. நீயும் நானும் நடிக்கிறோம்னு எப்படியோ கண்டுபிடிச்சி கேட்டாங்க.. அதுக்கு நான் அப்படி எல்லாம் இல்ல, என்ன செஞ்சா நீங்க எங்கள நம்புவீங்கனு கேட்டேன்.

குஹாசினி, “போச்சுடா, அப்ப நீ தான் தலைய கொண்டு போய் வெட்டு வெட்டுனு சொல்லி இருக்க போலையே. அட கடவுளே இப்படி ஒரு லூச அனுப்பி வச்சி இருக்கீயே ஏன் இப்பிடி?

புதியவன்,” ஏய் என்ன லூசு மாதிரி ஒளறிக்கிட்டு இருக்க?

குஹாசினி, “நானா ஒளறிக்கிட்டு இருக்கேன், என் நிலைமைய நினைச்சி புலம்பிட்டு இருக்கேன். இங்க பாரு நேரே அவங்க கிட்ட போய் இந்த கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டு வா.

புதியவன், ” நான் போய் அப்படி சொன்னா சாக போறது நீ மட்டுமில்ல நானும் தான். அவங்க கிட்ட எங்களால கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொன்னா அப்பறம் நாம பொய் தான் சொன்னோம்னு கன்பார்ம் பண்ணிடுவாங்க. உன்னால நானும் சாகனுமா? இங்க பாரு இங்க நடக்க போறது என்ன பொறுத்த வரைக்கும் கல்யாணமே இல்ல, அவங்க முறைப்படி தானே கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க அது ஜஸ்ட் ஒரு சடங்கு தான். என்னை பொறுத்த வரைக்கும் கெட்டிமேளம் கொட்டி, திருமாங்கல்யம் கழுத்துல ஏறினா தான் கல்யாணம் புரியுதா? அது இல்லாம நான் வாழனும், இந்த உலகத்துல நான் சாதிக்க வேண்டிய விசயம் ஏராளமா இருக்கு. சோ அக்சப்ட் இட். இங்க இருந்து போன பிறகு நீ உன் வழிய பார்த்து போ, நான் என் வழிய பார்த்து போறேன். சாகற வரைக்கும் உன் கண் முன்னே கூட வரமாட்டேன்(அது நடக்க நான் விட்டுடுவேனா?) .. நீ உன் லவ்வர கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாம்.

குஹாசினி, “ஆனா கல்யாணம் பண்ணி என் கழுத்தில் தாலி கட்டினா நான் உண்மையாவே உங்க மனைவி ஆயிடுவேன்ல? அது உங்களுக்கு வேணும்னா சாதாரணமாக இருக்கலாம் ஆனா என்னை பொறுத்த வரைக்கும் கழுத்தில் தாலி ஏறினா கல்யாணம் தான். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது.

புதியவன்,” ஆர் யூ மேட்? இங்க நடக்க போறது கல்யாணமே இல்ல.. இவங்க வழக்கத்துல ஒரு பிளாக் கலர் மணி தான் தாலி.. நம்ம நாட்டில அது வெறும் மணி.. நீ வேணும்னா இங்க இருந்து கிளம்புன உடனே அதை கழிட்டி வச்சிடு தட்ஸ் ஆல் என்றான் தோளை குலுக்கியவாறு.

அதற்குள் ஆதிவாசி தலைவர் வந்து திருமண சடங்குகள் ஆரம்பித்தது என்று இவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு சென்று அவர்கள் வழக்கப்படி உடைகளை கொடுத்து உடுத்தி வர செய்தனர்.

அவன் மட்டும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் உடை மாற்றிக் கொண்டு வந்துவிட்டான். ஆனால் குஹாசினிக்கு மட்டும் ஏதோ ஒன்று தவறாகவே தோன்றியது.

குஹாசினி, “கடவுளே என்ன ஏன் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி விட்டு இருக்கீங்க? இங்க இப்படி ஒரு விசியம் நடந்தத அம்மா கிட்ட சொன்னா என்ன ஆகும்? இல்ல என் ஷ்யாம் தான் என்ன நினைப்பான்? நீ ஏன்டீ தப்பா நினைக்கிற? உன்னோட ஷ்யாம் உன்ன தப்பா நினைக்க மாட்டான்.. அந்த நெட்டகொக்கு சொல்றா மாதிரி இவங்க சம்ப்ரதாயப்படி தானே நடக்க போகுது? நம்ம நாட்டில இருக்கவங்களாம் தாலி கட்டினா தானே கல்யாணம் ஆச்சுன்னு ஒத்துப்பாங்க!! இது வெறும் மணி தானே..!! மனச லேசாக்கிகோ இது கல்யாணம் இல்ல, உன் உயிரை காப்பாத்த போற ஒரு சடங்கு தான்.. நீ வேண்டாம்னு சொன்னா அவன் உயிரும் சேர்ந்து போகும்.. உன்னால அவனும் சாக வேண்டாம்.. என்று ஒரு முடிவெடுத்தவாளாய் அவர்கள் வழக்கப்படி தோளால் ஆன ஆடை அணிந்து வெளியே வந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான் அந்த புதியவன்…

அவள் கார்குழல் அலை அலையாய் காற்றில் பறக்க அதில் அவர்கள் கொடுத்த பூக்களால் ஆன கீரிடம் அணிந்து, அவள் பால் நிலா தேகத்தில் கருமை நிற தோளிலான உடைகள் அதற்கேற்றவாறு பாசி மணிகள் என பார்ப்பவரின் கண்களை கவர்ந்து கொண்டிருந்தாள் குஹாசினி..

மெல்ல ஒரு தயக்கத்துடனே அவன் அருகில் அவர்களின் குல தெய்வத்திற்கு முன்னால் வந்து நின்றனர்..

அடுத்த பக்கம்

Advertisements