உன்னில் மயங்குகிறேன் 10 (3)

ஷ்யாம்,” ஓஓ உங்களுக்கு எங்கள விட அவன் முக்கியமா போயிட்டானா? அவன் இங்க இருக்கேன்னு சொல்லிட்டு போகும் போது பேசாம இருந்தீங்க இப்ப நான் அங்க போகலாம்னு சொன்னதும் என்னை விரட்டி விடுறீங்களா? உங்க பொண்ண என்னை தவிர வேற யாராவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்க அவள கொன்னுடுவேன் நியாபகம் இருக்கட்டும்” என்று மிரட்டி விட்டு சென்றான்.

 

சித்ரா குஹாசினியை தைரியமாக வளர்த்ததற்கு முக்கிய காரணம் ஷ்யாம் தான்.. சிறு வயதில் வீட்டில் உள்ளவர்கள் அவனுக்கும் குஹாசினிக்கும் திருமணம் செய்து வைத்தால் என்ன என்று அவ்வப்போது பேசி கொள்வார்கள் அதில் ஈர்க்கப்பட்டு குஹாசினியை சிறு வயது முதலே தன் மனைவியாக எண்ண துவங்கி இருந்தான்.. ஆனால் குஹாசினிக்கு அவன் மீது துளியும் அந்த மாதிரியான எண்ணம் வரவில்லை.. திருமண பேச்சு எழுந்த போது கூட தன் தாய்க்காக சம்மதம் சொன்னாலே தவிர மனமார சொல்லவில்லை என்று அவள் நடவடிக்கைகளில் சித்ராவால் உணர முடிந்தது.. அவரும் ஷ்யாமிடம் எவ்வளவோ பேசி பார்த்து விட்டார் அவன் இசைந்து கொடுப்பதாக இல்லை சரி தன் மகளிடம் அவனிடம் பேசி பார்க்க சொல்லுவோம் என்று அவளிடம் ஒரு முறை கேட்டதற்கு உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் நான் யாரையும் விரும்பல அதனால உன் எண்ணப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நான் ஷ்யாம் கிட்ட என்ன பேச போறேன் சின்ன வயசுல இருந்து பேசி பழகியவன் தானே விடுமா இப்ப லவ் வரல கல்யாணத்துக்கு அப்புறம் வந்துட்டு போகுது.. நீ கவலைப்படாம இரு ஆனா கல்யாணம் கொஞ்ச வருஷம் கழிச்சு தான் என்று சொல்லிவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்றவள், அதன் பிறகு அவள் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிய அதற்கு காரணம் என்னவென்று ஆருத்ரனை பார்த்ததும் தெளிவாகியாது.. அவன் தன்னை அவள் நண்பன் என்று சொல்லி கொள்கிறான் ஆனால் அவன் கண்களில் இருக்கும் அந்த வலி அது எவ்விதமான உணர்வு அது நட்பையும் தாண்டியது போல எனக்கு தோன்றுகிறதே என்று எண்ணி கொண்டு இருந்த நேரம் செவிலியரின் மிஸ்டர். ஆருத்ரன் நீங்க தானே குஹாசினியின் கணவர்? உங்கள டாக்டர் கூப்பிடறாங்க என்ற வார்த்தைகள் சித்ராவிற்கு அதிர்ச்சியையும் ஷ்யாமிற்கு கடும் கோபத்தையும் வரவழைத்தது.

 

இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த மிதுனுக்கு வயிற்றில் எலி உருள ஆரம்பித்தது..

Advertisements

மிதுன் மைண்ட் வாயிஸ் கடவுளே இப்ப தானே ஒரு பிரச்சினையை சமாளிச்சோம் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா நான் பாவம் தானே? இவங்க கொடுக்குற ரியாக்ஷனே சரி இல்லையே! அவனுக்கு பதில் என்னை பிடிச்சி அடிக்க ஆரம்பிச்சிடுவாங்களோ? ஐய்யயோ வெள்ளை ஓணான் வரானே (அவன் ஷ்யாம தான் அப்படி சொல்றான்) நீ மாட்டின இங்க இருக்காத தப்பிச்சி ஓடிடு என்று நினைத்து கொண்டு நகர போனவனை மிதுன் நில்லு என்ற சித்ராவின் வார்த்தை அவனை மேலும் நகர விடாமல் தடுத்தது..

 

மயக்கம் தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

உன்னில் மயங்குகிறேன் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

Advertisements