உன்னில் மயங்குகிறேன் 10 (2)

அதற்குள் நர்ஸ் வந்து கூட்டமாக நிற்காதீர்கள் என்று சத்தம் போடவும் அனைவரும் ஒவ்வொரு திசையாக பிரிந்து சென்று அமர்ந்தனர்..

 

ஆருத்ரன், “டேய் மிதுன் சாரிடா, அவன் இப்படியெல்லாம் பேசுவான்னு நான் நினைக்கல”

 

மிதுன், “பரவாயில்லை.. அது தான் அவன் கண்ணத்துல பளார்னு ஒன்னு வச்சியே அதுவே இந்த நேரம் அவனுக்கு பல்லு தெறிச்சி இருக்கும்.. அது போதும் என்றான் சிரித்தபடி..”

 

ஆருத்ரன், “ஏய் இன்னொரு விசியம் கன் ஷாட் ஆகி இருக்கு.. ஹாஸ்பிடல நம்மள போலீஸ் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டிங்களானு கேட்கவே இல்லையே? ஒரு வேளை போலி ஹாஸ்பிடலா இருக்குமோ?” (போலி ஹாஸ்பிடலா இது என்ன புது புரளியா இருக்கு)

 

மிதுன்,” அதெல்லாம் கேட்டாங்க சர் தான் குஹாசினிய பார்த்து புலம்பி கிட்டே இருந்தீங்களே அப்பறம் எப்படி அதெல்லாம் தெரியும்..? நான் நாம கார்ல வரும் போதே லோக்கல் இன்ஸ்பெக்டர் நம்பரை வாங்கி இன்பார்ம் பண்ணிட்டேன்.. அவர் பார்ட்டி நடந்த இடத்திற்கு போயிட்டு இங்க வரேன்னு சொன்னாரு மே பீ இங்க வந்துட்டு இருப்பாரு வெயிட் ஒரு கால் பண்ணி கேட்டுட்டு வரேன்” என்று அவன் அந்த இடத்தை விட்டு நகரவும் சித்ரா அங்கு வந்தார்.

 

சித்ரா,” என்னை மன்னிச்சிடுங்க தம்பி அவன் அப்படி பேசி இருக்க கூடாது, மிதுன் தம்பி என்னை பார்த்து தான் எழுந்து போனாரா? “

 

ஆருத்ரன்,” அய்யோ அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி, அவன் ஷ்யாம் பேசினத பெரிசா எடுத்துக்கல இன்பேக்ட் அந்த மாதிரி சீரியஸான ஆள் அவன் கிடையாது.. நீங்க ஓர்ரி பண்ணிக்காதீங்க “.

Advertisements

சித்ரா,” ரொம்ப நன்றி தம்பி.. நீங்க ரொம்ப உதவி பண்ணி இருக்கீங்க என் பொண்ணு தான் என் உலகம்.. கொஞ்ச நாளா தான் பழைய மாதிரி எல்லார் கிட்டயும் சிரிச்சி பேச ஆரம்பிச்சு இருந்தா அதுக்குள்ள இப்படி ஆகி போச்சி “என்று கலங்கியவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் இருந்தான் ஆருத்ரன்.

 

ஆருத்ரன்,” கவலைப்படாமல் இருங்க அவளுக்கு எதுவும் ஆகாது “.

 

சித்ரா,” தம்பி சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க ரொம்ப நேரம் ஆச்சி உங்க வீட்ல கவலைப்பட போறாங்க நீங்க வேணும்னா வீட்டுக்கு போயிட்டு தூங்கி எழுந்து வாங்க நான் பார்த்துக்கிறேன்”.

 

ஆருத்ரன், “இல்லை பரவாயில்லை.. நான் குஹாசினி கண் முழிச்சதும் பார்த்துட்டு கிளம்பறேன் ஏதும் பிரச்சனையில்லை “.

 

சித்ரா,” அதுக்காக இல்லை தம்பி நீங்க எங்களுக்கு உதவி செஞ்சது உங்க வீட்ல தெரிஞ்சா கோபப்பட போறாங்க.. நீங்க வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுங்க நான் அவ முழிச்சதும் தகவல் சொல்றேன் என்று அவனை அவ்விடத்தை விட்டு அகற்றுவதில் குறியாக இருந்தார்.”

 

அவர் அவ்வாறு சொன்னதும் கூர்ந்து நோக்கியவன்,” ஆன்ட்டி நான் இங்க இருக்க கூடாதுன்னு நீங்க நினைக்கிறது புரியுது தப்பா நினைச்சிக்காதீங்க நான் குஹாசினிய பார்க்காம இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் அவ என்னோட பிரண்ட்.. மே பீ உங்க கிட்ட சொன்னாளன்னு எனக்கு தெரியாது.. நாங்க இரண்டு பேரும் காட்டுக்குள்ள ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டோம் இன்பேக்ட் அவளுக்கு நான் அவளை காப்பாத்தின பிறகு தான் என்னை பற்றி தெரியும் அதுல இருந்து நாங்க நல்ல நண்பர்களாக இருக்கோம்.. இதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று அவர் பதிலை எதிர்பார்க்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் ஆருத்ரன்.

 

சித்ராவின் எண்ண ஓட்டம் எங்கையோ பயணித்து கொண்டு இருந்தது.. அவரையும் அறியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது கடந்த காலத்தை நினைத்து..

 

அந்த நேரம் அவ்வழியாக வந்த ஷ்யாம் இதை கவனித்து விட்டு “என்ன அத்தை பழைய விசியத்தை நினைச்சி கவலைப்படுறீங்களா? அவர் ஆமாம் என்று தலையசைக்கவும்,” இன்னும் எத்தனை வருஷத்துக்கு அதையே நினைச்சிக்கிட்டு இருக்க போறீங்க? ஏன் உங்களுக்கு நாங்க இல்ல? உங்கள வேண்டாம்னு ஒதுக்கின அவங்கள பத்தியே நினைச்சி உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க வாங்க நாம குஹாவ பார்க்கலாம்.. அவன் வேற அங்க நிக்கறான்..

 

அவனை தீர்க்கமாக பார்த்தவர்” நீ இங்கையே இரு ஷ்யாம் அங்க வந்தா தேவையில்லாமல் பிரச்சனை பண்ணிட்டு இருப்ப.. நீ உங்க அப்பா, அம்மாவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ, நான் காலையில தகவல் சொல்றேன்..

அடுத்த பக்கம்

 

Advertisements