உன்னில் மயங்குகிறேன் 10

ஆருத்ரனை குஹாசினி மட்டும் தான் அறிந்திருக்கவில்லை.. ஏனெனில் அவள் பொதுவாக ஆண்களிடம் பேசுவதை தவிர்த்திருந்தாள் அதற்கு காரணமும் உண்டு.. ருத்ரா குரூப் ஆப் கம்பெனிஸ் ஓனராக அவன் தந்தையையும் தாத்தாவையும் மட்டுமே சந்தித்திருக்கிறாள் அதுவும் முக்கியமான நேரங்களில் மட்டுமே.. ஆனால் சித்ரா, ஷ்யாம் எல்லாம் அவ்வாறு இல்லை தன் தொழில் முறையில் அனைவரையும் அறிந்து வைத்திருந்தனர்.. அதனால் தான் ஆருத்ரனிடம் சித்ராவால் சகஜமாக பேச முடிந்தது..

 

தன் மகளை நினைத்து கலங்கி கொண்டு இருப்பவரை தன்னால் முடிந்த அளவுக்கு சமாதானம் சொல்லி கொண்டு இருந்தவனை தீடீரென்று அடிக்க தொடங்கினான் ஷ்யாம்.. அதை கண்டு சித்ராவே ஒரு நொடி அதிர்ந்து போனார் தடுக்க வந்த மிதுனையும் அவன் அடித்த போது தான் ஆருத்ரன் தன்னிலை உணர துவங்கினான்..

 

அடுத்த அடி மிதுனை அடிக்க  ஓங்கியவனின் கரங்களை இறுக பற்றினான் அந்த அழுத்தத்தில் எலும்புகள் நொறுங்கிவிடும் வலியை உணர்ந்தான் ஷ்யாம்..

 

ஆருத்ரன், “ஏய் என்னடா நினைச்சிட்டு இருக்க? எதுக்கு இப்ப எங்கள அடிச்ச?”

 

ஷ்யாம், “உண்மைய சொல்லு நீ தானே குஹாவ சுட்ட?”

 

ஆருத்ரன், “உனக்கு என்ன மேல் மாடி காலியா? அவள நானே சுட்டு இருந்தா எதுக்காக காப்பாற்ற போறேன்? அப்படியே போகட்டும்னு விட்டுட்டு வந்து இருப்பேன்”.

 

ஷ்யாம்,” எங்களுக்கு நீ தானே அதிகமா தொல்லை கொடுப்ப.. உனக்கு வர வேண்டிய ஆர்டர் எங்களுக்கு கிடைச்ச போது என்னை அடிக்க ஆள் அனுப்பிவன் தான நீ!! உன்னை எப்படி நம்ப சொல்ற? பப்ளிசிட்டிகாக கூட நீ அவள இங்க கொண்டு வந்து இருப்ப.. “.

Advertisements

ஆருத்ரன்,” வாட் உன்னை அடிக்க நான் ஆள் அனுப்பினேனா? எப்ப? அந்த மாதிரி கீழ் தனமா நான் பண்ண மாட்டேன்.. “

 

ஷ்யாம்,” ஓஓ நல்லா நடிக்கிற ஆருத்ரன்.. வந்தவனை நான் அடிச்சி கேட்ட போது அவன் உன்னோட கம்பெனி ஆள்னு சொன்னான்.. அப்ப அது உன்னோட வேலை தானே?”

 

ஆருத்ரனுக்கு சிறிது விளங்க ஆரம்பித்தது..” உன்னை அடிக்க வந்தது எப்ப? என்னைக்கு? சமீபத்தில் நடந்ததா? சொல்லு ஷ்யாம் “.

 

ஷ்யாம், “இப்ப எதுக்கு இதெல்லாம் கேக்குற? ஏதாவது கதை சொல்ல போறீயா? “

 

ஆருத்ரன்,” சீ ஷ்யாம் உனக்கு நடந்த விசயத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. என் பேரை கெடுக்க அமர் தான் இந்த வேலையை பண்ணி இருப்பான்.. “.

 

மிதுன், “ஆமாம் ஷ்யாம், இதுக்கும் ருத்ராக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. அமருக்கு இவனை கண்டாலே ஆகாது.. அதனால தான் இவன் பெயரை கெடுக்க இந்த மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருப்பான்.. இப்ப அவன் இவங்க கூட இல்லை இருந்தும் தொல்லை கொடுத்துக்கிட்டே தான் இருக்கான்.. இப்ப குஹாசினிக்கு ஏற்பட்ட நிலைக்கும் அவன் தான் காரணம் “.

 

ஷ்யாம்,” ஏய் லுக் நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா? என் பெயரை சொல்லி கூப்பிட கூட ஒரு தகுதி வேணும்.. நீ ஆப்டிரால் ஆருத்ரன் கிட்ட வேலை செய்றவன் என்னை பெயர் சொல்லி கூப்பிடுறீயா? கெட் லாஸ்ட் ஐ சே “என்று பொரிந்து தள்ளினான்.

 

அதை கேட்ட மிதுனுக்கு முகம் வாட, ஆருத்ரன் அவனை அறைந்திருந்தான்..

 

ஆருத்ரன்,” யூ இடியட், யார பார்த்து என்ன சொல்ற அவன் என் நண்பன்.. அவனுக்கு இருக்க திறமையை பார்த்து கம்பெனி ஆரம்பிக்க சொல்லி நாங்க சொன்னோம்.. அவன் தான் வேண்டாம்னு சொல்லிட்டான்.. லீவ் இட் அதெல்லாம் தேவையில்லை பர்ஸ்ட் அவன்கிட்ட சாரி கேளு”.

 

ஷ்யாம், “நெவர், என்னால முடியாது “

 

சித்ரா,” ஏன் முடியாது? உனக்கு கீழே வேலை செய்தா அவங்க உனக்கு அடிமை கிடையாது.. அப்பறம் உனக்கு ஒன்னு நியாபகப்படுத்த விரும்பறேன்.. நீயும் எங்க கம்பெனில ஒரு ஸ்டாப் தான்.. சாரி கேளு “.

 

ஷ்யாமிற்கு அவமானமாகி போனது தனது அத்தை அவர் மகளை திருமணம் செய்ய போக இருக்கும் தன்னை அவமானப்படுத்தியதற்கும் அதற்கு காரணமாகிய ஆருத்ரனையும் பழிவாங்கிய தீருவேன் என்று மனதிற்குள் கறுவி கொண்டு மிதுனிடம் சாரி என்றான் வேண்டா வெறுப்பாக..

அடுத்த பக்கம்

Advertisements