உன்னில் மயங்குகிறேன் 1

இக்கதை முற்றிலும் என் கற்பனையே.. இது என் முதல் போட்டி நாவல்.. படித்து விட்டு கருத்துக்களை பகிரவும் நட்புகளே..

ஆப்ரிக்கா காட்டு தீவின் நடு பகுதி, சுற்றிலும் மரங்கள், செடிகள், கண்கவரும் வகையில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்கள், மயக்கும் ஜிவராசிகள், அச்சுறுத்தும் விலங்கினங்கள் என்று ஒரு சேர இருக்கும் இந்த காட்டில் தான் அத்தீவின் ஆதிவாசி மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென்று தனி சட்டம், தனி பழக்க வழக்கங்கள், என்று நாட்டில் வாழும் மக்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு இருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் நரபலி குடுப்பார்கள் அவர்கள் குல தெய்வத்திற்கு அதுவும் கன்னி பெண்னையே.. அவர்கள் இனத்தில் உள்ளவர்களை அவர்கள் பலியிட மாட்டார்கள் வேற இனப்பெண்களை மட்டுமே..

அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இருந்தால் நம் நாயகி குஹாசினி. அவள் 24 வயது இளம் தென்றல், பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் கண்ணிகை இவள். அவளுக்குள் இருக்கும் தைரியம் தான் அவளை இவ்வளவு தூரம் தனி ஒரு பெண்ணாக வர செய்தது. அவள் வேறுபட்ட மனிதர்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறாள்.அதில் பல தீவுகளுக்கு சென்று இருக்கிறாள், ஆனால் முன்னே சென்ற தீவுகளில் நரபலி கொடுக்கும் பழக்கம் இல்லை.. இங்கு வந்து பிறகு தான் இப்படி ஒரு தீவு இருப்பதையே அறிந்து கொண்டாள். பக்கத்து தீவில் உள்ள மக்கள் இவளை எவ்வளவு தடுத்தும் அவர்களை ஏமாற்றி விட்டு இரவில் தப்பித்து இங்கு வந்து வசமாக மாட்டி கொண்டிருக்கிறாள். அவள் ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் அவர்களின் மொழி ஓரளவிற்கு தெரியும் என்பதால் தைரியமாக அவளால் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தில் வந்தவளுக்கு அங்கு வந்த பிறகு தான் அது தவறு என்று உறைத்தது.

ஏன்னு கேக்குறீங்களா? அத்தீவின் ஆதிவாசி மொழி மற்ற ஆதிவாசி மொழிகளிலிருந்து வேறுபட்டு இருந்தது. அவர்களின் நடவடிக்கைகளை இரண்டு நாட்களாக மறைந்து இருந்து பார்த்து கொண்டு இருந்தவளுக்கு நேற்று இரவு உறங்க சென்றது மட்டுமே நியாபகத்தில் இருந்தது. காலையில் துயில் விழித்தவளின் கண்களுக்கு எதிரே கண்களிலும், முகத்திலும் கரு நிற மை இட்டு கொண்டிருந்தனர். அவர்களின் உடையில் வேறுபாடு, ஆண்கள் இடுப்பில் மட்டும் தோளால் ஆன உடை, பெண்கள் மார்பிலும் இடுப்பிலும் அதே போன்று தோளால் ஆன உடை. அவர்கள் பேசுவது ஒரு வார்த்தை கூட இவளுக்கு புரியவில்லை. இவளை கை காட்டி பேசி கொண்டிருக்கின்றனர் என்பது மட்டுமே புரிந்தது.

குஹாசினி மைண்ட் வாயிஸ் “அடப்பாவி அங்க இருந்தவங்க சொன்ன பேச்ச கேட்டு இருந்தா நீ இங்க வந்து மாட்டி இருக்க மாட்டியே!! உனக்கு கொழுப்பு, இது தேவையா? அம்மா எவ்வளவு சொன்னாங்க தனியா போகத உன் டீம் மெட்டஸயாவது கூட்டிக்கிட்டு போன்னு சொன்னாங்களே!!கேட்டேனா? அம்மா ஊருக்கு வந்த பிறகு உன் பேச்ச மட்டும் தான் கேட்பேன் என்று நினைக்கும் பொழுது அவள் இன்னொரு மனதோ லூசு அதுக்கு நீ உயிரோடு போனா தானே!,!

ஆதிவாசி தலைவர், “(அவர்கள் மொழியில்) இந்த பொண்ண கூட்டிக்கிட்டு சடங்குக்கு தேவையான முறைகளை செய்து கூட்டிக்கிட்டு வாங்க என்று ஆணையிட்டார்.

அதன்படி அந்த பெண்கள் இவளை கூட்டிக்கிட்டு சென்றார்கள்.

குஹாசினி,” ஐய்யோ என்ன விடுங்க என்னை எங்க கூட்டிக்கிட்டு போறீங்க? நான் யார் தெரியுமா? எனக்கு கராத்தே கூட தெரியும். உங்கள எல்லாம் அடிச்சி போட்டுட்டு போய்டுவேன் பாத்துக்கோங்க (ஏன்மா இப்படி? அவங்களுக்கு தமிழ் தெரியுமா? பயத்துல ஊளராம இரு)

இவள் பேசி கொண்டு வருவதை பார்த்த ஆதிவாசி பெண்களுக்கு இவள் பித்து பிடித்தவள் என்று எண்ணி கொண்டனர்(பின்ன இவ பேசுறது அவங்களுக்கு புரிஞ்சா தானே)

அவர்களின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டாலோ எண்ணவோ செய்கையில் பேச ஆரம்பித்தாள்.

குஹாசினி சொல்ல வருவது ஒருத்தருக்கு கூட புரியவில்லை என்பது தான் பரிதாபம்.

 

குஹாசினி, “அய்யோ கடவுளே!! எங்க கூட்டிக்கிட்டு வந்து மாட்டி விட்டு இருக்க? (ஏம்மா அவரா உன்ன போக சொன்னாரு?) நான் பேசுறது தான் புரியலன்னு பார்த்தா, செய்கை கூட புரியல. இவங்க கிட்ட இருந்த என்ன எப்படியாவது காப்பாற்றி கூட்டிக்கிட்டு போய்டுப்பா ஊருக்கு வந்ததும் உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்.

ஆதிவாசி மக்கள், இவள் செய்கை புரியாததால் அவளை தர தரவென்று இழுத்து கொண்டு கடலில் குளிக்க செய்தனர், அவர்கள் பாணியில் உடை உடுத்த சொன்னார்கள், இவள் மறுக்கவும் அவள் முன்னே நீண்ட கத்தியுடன் பயங்கரமாக ஒரு பெண், ஆதிவாசி தலைவி. அவள் முறைத்த முறைப்பில் நம் குஹாசினியின் வயிற்றில் எலி உருள ஆரம்பித்தது. அவர்கள் சொன்ன விதமே அனைத்தையும் செய்து முடித்த பின்னர் ஆதிவாசி குல தெய்வத்திடம் கொண்டு சென்றனர்.

அடுத்த பக்கம்

Advertisements