துளி தீ நீயாவாய் penultimate (4)

“சாருமதி வீட்டுக்குள்ள அண்ணா போறதை உனக்கு காட்டணும்ன்றதுதான் அன்னைக்கு ப்ளான். அவளை போல ஆட்களை பார்த்தாலே நீ நூறடி தள்ளி நிப்பன்னு நான் நினச்சிருந்தேன். நீ என்னடான்னா எதைப் பத்தியும் யோசிக்காம அவள பார்த்து இறங்கி ஓடுற. அவள பத்தி எனக்கு மட்டுமே என்ன தெரியும்? என் ஆள் ஒருத்தன வச்சிதான் இந்த நகை கொடுத்தது,  டீல் பேசி வச்சதுன்னு எல்லாம். எங்க அவ பாட்டுக்கு உன்னை பிடிச்சு எங்கயாவது வித்துட்டா என்ன செய்யன்ற பயத்துலதான் அங்க வேற வழி இல்லாம நான் வெளிய வரவேண்டியதாச்சு. அடுத்து நடந்த எல்லாமே கொஞ்சம் கூட நான் எதிர்பாராதது. உன்னை சாருமதிட்ட இருந்து சேஃப்கார்ட் செய்யணுமேன்னுதான் உன் கூடவே இருந்தேன். மதுவையுமே உன் மூலமாதான் அப்பதான் எனக்கும் தெரியும்” அவன் சொல்ல

ஒரு ‘ம்’ மட்டும் வருகிறது இவளிடமிருந்து.

“நீ பாட்டுக்கு அந்த லெட்டர அண்ணாட்ட காமிக்கப் போறேன்னுட்டு இருந்த, எனக்கு அதை டைஜஸ்ட் செய்யவே முடியல, நான் மாட்டிப்பேன்னு இல்ல, நிஜமாவே அண்ணாக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னுதான்”

“ம்”

“அதான் அடுத்த ப்ளானெல்லாம் அந்த லெட்டரை எப்படி  உன்னையவே டிஸ்கார்ட் செய்ய வைக்கிறதுன்றத பத்திதான்”

“ம் அதான் ஒரு ஸ்கூல் பொண்ணு மேல பழிய போட்டு, உன் சோலராஜனை தெருவுல வச்சு உன் கால்ல விழுந்து கதறவிட்ட இல்ல? ஸ்கூல் பொண்ணுன்னதும் மதுவுக்காக நான் பார்த்தது போல இந்த பொண்ணுக்கும் இரங்கி விட்டுடுவேன்னு நினைப்பு இல்லையா? அதில் நீ நினச்ச போலவே நான் ஏமாந்துட்டேன். உனக்கு அப்ப மீதியிலும் என்னை ஏமாத்தி கூட கூட்டிட்டுப் போய்டலாம்னு தோணியிருக்கும்” அவள் சொல்ல

“சாரி” என்ற வார்த்தையின் மூலம் அதை ஆமோதித்தான் அவன்.

பின் சின்ன இடைவெளியில் “சோலைராஜனுக்கு பொண்ணே கிடையாது” என வருகிறது அவனின்  முனங்கல் ஒன்று.

ஒரு நொடி சிரிப்பே வந்துவிட்டது இவளுக்கு. பின்ன எவ்வளவு பெரிய பல்ப்?! ஆனால் அடுத்த நொடியே கோபம் பற்றிக் கொண்டும் எரிகிறது. எவ்வளவு தூரம் இவள புரிஞ்சு, அதுக்கேத்த போல என்னமா திட்டம் போட்டு எப்படி ஒரு சீட்டிங்!

இவ அம்மாப்பா இப்படித்தான் யார் கால்லயும் விழுறாங்களோன்னுல்லாம் நினச்சு இவ இளகினாளே! அப்படி நினச்சு இவ இந்த விஷயத்தை விடணும்னு நினச்சிருந்தான்னா இந்த நரேன் எப்படிப்பட்டவன்?

“உங்களுக்கெல்லாம் ஒரு பொண்ணோட மனச எங்க குத்தினா எவ்வளவு வலிக்கும்னு மட்டும்தான் தெரிஞ்சிருக்குது. ஆனா லவ் பண்றோம்னு கிளம்பி வந்துடுறீங்க” கொந்தளிக்க நினைத்து தாளாமல் அழுகைதான் வருகிறது அவளுக்கு.

“ஹேய் ப்ளீஸ் ப்ளீஸ் அழாத வேணி. நீ எமோஷனலி ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. சாரி வெரி சாரி, உன்னை ஹர்ட் செய்யணும்னு நினச்சு எதையுமே செய்யல, அந்த லெட்டர் அண்ணாவுக்கு போயிடக் கூடாதேன்ற ஒரு தவிப்பில அதை செய்துட்டேன்” அவன் கெஞ்சலாய் சொல்லிக் கொண்டிருக்க,

வேணியோ அழுகையை விட்டு இறுக்கத்தை மட்டும் பிடித்துக் கொண்டாள்.

“மதுவுக்கு ஹெல்ப் செய்து என்னை இன்ஸ்பையர் செய்ற ப்ளான். அதுல மயங்கி நான் உன் கூட வர சம்மதிச்சிடுவேன்னு நினச்சிருப்ப. இதுல எதோ டைம்ல அது நிஜமாவே மது மேல கன்சர்னாகிட்டு” இப்போது தொடர்ந்தது அவள்.

“…..”

“என்னைப் பொறுத்தவரைக்கும் நீ மாற ஆரம்பிச்ச இடம் அதுதான். அதனால தான் இன்னைக்கு இங்க வந்து நிக்க மதுவுக்கு பணம் அனுப்ப நான் வேணும்னு”

“…..”

“மதுன்னு சொன்னா நான் கூட பணத்தை வாங்கிப்பேன்ற எண்ணம்”

“…..”

“ஆனா அதென்ன திடீர்னு இவ்ளவு ஞானோதயம். ஊரைவிட்டு போகணும்னு?” அவள் கேட்க,

“அண்ணா எனக்கு கொடுத்த டைம் போதும்னு முடிவு செய்துட்டாங்க போல” இது இவனது விடை. “பேங்களூர்ல என்னை அரெஸ்ட் செய்ய எல்லா ஏற்பாடும் செய்துருக்காங்க. ஆனா லாஸ்ட் மினிட்ல மது கண்டு பிடிச்சு அழவும் எனக்கு அண்ணா முதல்ல இருந்தே என்னை தெரிஞ்சிகிட்டேதான் இவ்ளவும் செய்துருக்காங்கன்னு புரிஞ்சிட்டு. நான்தான் கல்ப்ரிட்னு தெரிஞ்சும் என் மேல சந்தேகமே இல்லாதவங்க போல என்னை இவ்வளவு நம்ப வச்சு, மதுவுக்கு லோக்கல் கார்டியன்னு வரைக்கும் ஆக்கின்னு அவங்க கூட என்னை ஏமாத்தியிருக்காங்கன்னு இருந்துது” அவன் சொல்லிக் கொண்டு போக,

இவள் ஏதோ இடையிடப் போனாள்தான்.

“இல்ல, அதெல்லாம் என் நல்லதுக்காகத்தான்னு இப்ப நீ சொன்னியே, அதை நான் நம்புறேன்” என்றவன், “அப்போ அப்படி இருந்தது. நான் இங்க இவ்ளவு நாள் அண்ணா வீட்ட சுத்தி சுத்தி வந்ததே உனக்காகவும் மதுவுக்காகவும்தானே, மதுவ வேற ஊர் கொண்டு போயாச்சு, அவள சில வருஷம் கழிச்சினாலும் என்னால போய் பார்த்துக்கவும் முடியும், எப்ப அண்ணாக்கு நாந்தான் கல்ப்ரிட்னு தெரியுமோ அப்பவே நீ என்னை எந்த சூழ்நிலையிலும் ஏத்துக்க மாட்டன்னும் ஆகிப்போச்சு, மதுவேற சிலது சொன்னா, எப்படினாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நிம்மதியா வாழ வழியே இல்லைனு. ஏத்துக்க கஷ்டமா இருந்தாலும் அது நிஜம்ன்றப்ப என்ன செய்ய? அதான் உனக்கும் மதுவுக்கும் பினான்ஸியல் செக்யூரிட்டிக்கு வழி செய்துட்டு, என்னோட மீதி பணத்தையெல்லாம் எடுத்துட்டு எங்கயாவது தூரமா போய்டணும்னுதான் வந்தேன்” என மீதியையும் சொன்னான்.

அடுத்தும் எதோ சொல்ல வந்தான், ஆனால் ஒன்றும் சொல்லாமல் பேச்சை அப்படியேவிட்டு மௌனமாகிவிட்டான். சில நொடி அவன் பேசுவானா என காத்திருந்த வேணி,

“ஓ, அப்றம் இந்த சரண்டர் ப்ளான் எப்ப வந்துச்சு? இங்க வந்தப்ப கூட இருந்த போல இல்லையே!” என இதை துருவினாள். இவள் எத்தனை சாதாரணம் போல் கேட்க நினைத்து என்ன?

“ப்ச் தப்புன்னு புரிஞ்சுது, அதான்” என்ற பழைய பதிலே வருகிறது அவனிடமிருந்து. “Bye all means I’m sorry. இனி உன் வாழ்க்கைல எந்த வகையிலும் கஷ்டம்தர வரமாட்டேன். வேற எதாச்சும் பேசு வேணி” என்றவன் எழுந்தும் போய்விட்டான்.

வேணி எக்கசக்கமான கலவையான உணர்வோடு அவன் சென்ற விதத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஐயோ கடத்திட்டு வந்துட்டானே!! வீட்ல என்ன நிலைல இருக்காங்களோ? கடவுளே!!! என்னை இப்படில்லாம் பார்த்துட்டானே, ஐயோ பாவம்! சின்ன வயதில் என்ன பாடுபட்டு இருக்கான். கேடு கெட்ட கிரிமினல்!! என்ன மாதிரில்லாம் ப்ரவி சார, என்னையெல்லாம் மனுப்ளேட் செய்ய பார்த்திருக்கான், ஆனா திருந்திட்டானோ?!! அப்படி திருந்திட்டான்னா ரொம்ப நல்ல விஷயம்தான். அச்சோ அதனாலயே அவன யாரும் எதுவும் செய்துடக் கூடாதே! ஆனா இவன் நிஜமாவே மாறிட்டானா?? எதுக்காக மாறியிருப்பான்????? ஒரு வேள இதுவும் எதாச்சும் ட்ராமாவா? ஆனா நிஜமா ஃபீல் பண்ற போலயும் இருக்கு, விரக்தியா இருக்கான் போலயும் தோணுது! எதாச்சும் ஏடாகூடமா பண்ணிப்பானோ?!!! ஓ மை காட் எனக்கு ஏன் இவ்வளவு டயர்டா இருக்கு உடம்பு? இப்படி எல்லாம் இருந்தது அதில்.

சற்று நேரம் கழித்து திரும்பி வரும் போது அவன் கையில் இருந்த பெரிய குவளையில் இருந்தது பால்.

அடுத்த பக்கம்