TTN Final Part 1 (17)

இவளுக்குத்தான் ‘அவன் ஹர்ட் ஆகிருப்பானோ? அவன் ட்ரெச போடுறது எனக்கு அருவருப்பா இருக்குன்றாப்ல எதுவும் அர்த்தம் தோணியிருக்குமோ? ஆனா சட்டுன்னு அவன் ட்ரெச..?!! அதெப்படி நான் போட?’ என அது வெகு அன்யோன்ய விஷயமாய் பட, அதற்கு தயாராயில்லா மனம் தயங்கி அடித்துக் கொண்டு கிடந்தது.

இதில் இன்னும் அரை மணி நேரம் கரியாய் இருட்டிவிட்டது என்ற இந்த நிலையில், “இனி இந்த இடத்தயும் இந்த தண்ணியையும் நல்லா தெரிஞ்ச எங்க ஆட்கள் ஒரு ஏழெட்டு பேராவது வந்தாதான் எதுவும் செய்ய முடியும், போய் கூட்டிட்டு வரேன்” என படகு ஓட்டி நீந்தியே கிளம்பிப் போய்விட்டார்.

யாருக்கும் பயமாய் இருந்தது போல் தெரியவில்லை. வேணிக்கும் துளியும் பயமில்லை. சுற்றிலும் இருந்த நீர் பரப்புக்கும், இரவுக்கும், அனைவரும் அவளுடையவர்களாய் இருந்த பாதுகாப்பு நிலைக்கும், வானத்தில் தெரிந்த நிலா  வாசனைத் திறப்புகளை உயிருக்குள் பொழிவது போலிருக்க, இதெல்லாம் என்றாவது எளிதில் கிடைத்துவிடும் அனுபவமா என்ன? நொடி நொடியாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

“பயமா இருக்கா வேணிமா?” என அடுத்திருந்த நரேன் விசாரித்த போது,

“ஏன்? எதுக்கு பயப்படணும்? போட்ல கிளம்புறப்பவே நைட் இந்த ரைட் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்னு தோணிச்சு, அதை இப்பவே பார்க்க கிடச்சுட்டு, சூப்பரா இருக்கு” என இவள் பதில் கொடுக்க,

“அப்ப வெட்டிங் அப்றம் ஒரு ட்ரிப் ஆலபுழா போலமா?” என கேட்டான் அவன்.

மற்ற எந்த விஷயங்களையும் பேசுவது போல் ரொம்பவும் சாதாரண தொனிதான். அவளுக்கு பிடிக்கிறது எனத் தெரிந்த ஒன்றை வாங்கித் தர வரும் ஒரு விகற்பமற்ற ஆர்வம் என அதைக் கொள்ளலாம்தான். ஆனால் ஆலப்புழா போட் ஹவுஸில் இரவில் தங்குவது என்பது ஹனிமூன் ட்ரிப் தானே பொதுவாய்?

இவள் அடிவயிற்றில் பிறண்டெழுந்த தேனன்ன அவஸ்தை அமிலங்களில் நாணம் நாணம் என்ற குரலின் குழைவுகள்தான் விஞ்சிக் கிடந்தன.

இருந்தாலும் அவன் என்ன பொருளில் சொல்கிறான் என அறியும் உந்துதலில் நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். உள்ளே அடி ஆழத்தில் ஒழிந்து கிடக்கிறதோ மின்னல் ஒன்று?!

ஆக அவன் ஹனிமூனைப் பற்றித் தான் பேசுகிறான்! சைட் அடிக்க கூட மாட்டான்னு கொஞ்சம் முன்னால இவ நினச்சதென்ன? இவன் ஹனி மூன் ப்ளான் எல்லாம் போட்டுகிட்டு இருக்க வேகம் என்ன?

“இப்படில்லாம் பேசினீங்க, அப்டியே பிடிச்சு  தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவேன்” இதுதான் இவளது இப்போதைய பதில். சிணுங்கல் ஒன்றும் அதில் தொற்றி இருந்ததோ? அவளறியாள். அவன் முகம் காண சிணுங்கிய மனதின் நிமித்தம் மின்மினியின் வண்ணம் ஒன்று அவள் வதனத்தில் வெட்க ரூபமாய் பரவியும் கிடந்தது.

“ஏய் வாலு இதெல்லாம் இப்பவே ப்ளான் செய்தாதானே அரேஞ்ச் பண்ண முடியும்?” என அவனோ தன் செயலை நியாயப்படுத்தியவன்,

“ஆனாலும் பிடிச்சு தள்ளிடுவியா நீ? நான் உனக்கு வேண்டாமா?” என விளையாட்டாய் கேட்க,

“உள்ள தூக்கிப் போட்டாலும் சேதாரமே இல்லாம திரும்பி வருவீங்கன்னு நல்லா தெரியும், இதுல பிடிச்சு தள்ளிவிட்டா என்னவாம்?” என இவள் இலகுவாகி பதில் கொடுக்க,

இதற்குள் நிலவு மறைந்து அருகிலிருந்த நரேன் முகம் கூட இவளுக்குத் தெரியாத வகையில் மையிருட்டுப் பரவ, விழத் தொடங்குகிறது மழைத் துளிகள்.

“ப்ச்” என்றபடி நரேன் எழுந்து நிற்பதை இவளால் புரிய முடிகிறது.

அதுவரை இவளுக்கு மட்டுமே கேட்கும்படியான குரலில் பேசிக் கொண்டிருந்தவன், குரலை உயர்த்தி “அண்ணா என்னண்ணா இது? இப்ப என்ன செய்ய?” என கருணை நோக்கி சற்றாய் நகர்ந்தபடி கேட்டான்.

“மாப்பு, ப்ரவிட்ட ஏற்கனவே சொல்லியாச்சுல்ல, அவன் எப்படியும் ஆள அனுப்பிடுவான், இப்ப நாம அட்ஜெஸ்ட் செய்றத தவிர வேற எதும் பெட்டர் சாய்ஸ் இல்லை” என கருண் அங்கிருந்து பதில் தர,

“குட்டீஸ் இருக்குதேண்ணா, யார் மொபைல்லயும் சார்ஜ் வேற இல்லை” எனச் சொல்லிக் கொண்ட நரேன்,

இப்போது குரலை இறக்கி “நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரலாம்னு இருக்கு” என சொல்லிக் கொள்ள,

இது அவன் ஆதங்கத்தை சொல்லிக் கொள்கிறான் என அப்போது வேணிக்கு புரிந்த போதும்,

அடுத்த நொடி படகு பெரிதாய் ஆட, நீருக்குள் வேறு சளப் ப்ளப் என சத்தம் கேட்க, நரேன் உள்ளே இறங்கிவிட்டான் என்பதே இவளுக்கு அப்போதுதான் புரிய,

“ஐயோ நரேன், என்னப்பா நீங்க?” என அலறியபடி இவள் எழ,

இவள் எழுந்த வேகத்தில் கவிழப் போவது போல் இடமும் வலமுமாய் படகு இன்னுமே  வேகமாய் ஆட,

அதற்குள் ஆளாளுக்கு “நரேன் என்னாச்சு?” “தண்ணிலயா இறங்கிட்ட?” “முதல்ல மேல ஏறு” “வேணி நீ பதறாத, அவன் வந்துடுவான், நீ விழுந்துடாத” என பதற பதற கூற, ஓரிருவர் எழும்பவும் செய்ய,

“நான் எங்கயும் போகல, இங்கதான் இருக்கேன், படகு ஏன் ஆடுதுன்னு தெரியல” என எல்லோருக்குமாய் இப்போது வேக வேகமாய் பதில் சொல்லியபடி நரேன் இருளில் இவளைத் தேடி துளாவ,

அடுத்த பக்கம்