TTN Final Part 1 (16)

முதலில் வேணி வீட்டிலிருந்து வேணியிடம் பேசியது அவளது அண்ணன் மனைவிதான். மொபைலில் அவள் பேசத் துவங்கியதுமே வேணிக்குப் புரிந்த விஷயம் இவளது பெற்றோர் மீதுள்ள வெறுப்பில், அவர்களை கோபப்படுத்தும் செயலாகவே அவர்கள் விரும்பாத இவளிடம் பேசுகிறாள் என்பதே!

இவள் மீது துளி மரியாதை இல்லை இவளது அண்ணன் மனைவிக்கு. ஆனாலும் “குழந்தை இல்லைனு உன் அம்மா அப்பா எப்படி படுத்துறாங்க தெரியுமா?” என சொல்லும் போதே அவள் உடையத் தொடங்க, இந்த 7 வருடங்களில் அழுதபடி வரும் எத்தனையோ பேருக்கு ஆறுதல் சொல்லி பழகிவிட்டதே வேணிக்கு, அது போல் தன் அண்ணிக்கும் சொல்லி தேற்றியவள், “உங்களுக்கு சீக்கிரம் பேபி பிறக்க நானும் ப்ரே பண்ணிக்கிறேன் அண்ணி” எனச் சொல்லி, அப்போதே போனில் அவள் அண்ணிக்காக, குழந்தைக்காக என குட்டியாய் ஜெபமும் செய்து வைக்க,

சரியாய் அடுத்த மாதம் அதே தேதியில் அவளது அண்ணி கருவுற்றிருப்பது உறுதிப்பட, ஏதோ வகையில் அவளது அண்ணிக்கு இவளைப் பிடித்துப் போய்விட்டது. அதிலிருந்து அவ்வப்போது இவளை அழைத்துப் பேசுவாள். அதில் அன்பும் இருக்கும். “யார் வந்தாலும் வராட்டாலும் நான் வருவேன் உன் மேரேஜுக்கு, உங்க அண்ணாவும் வருவாங்கன்னுதான் நினைக்கிறேன், போகணும்னு அவங்கட்ட சொல்லிட்டே இருக்கேன்” என்று கொண்டிருக்கிறாள்.

இதையெல்லாம் இவளிடம் முழுமனதாய் விசாரித்தபடி, “எனக்கு உங்க வீட்ல எல்லோரும் வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு, அவங்க வந்து தங்கிப் போறதுக்கெல்லாம் ப்ராப்பரா ஏற்பாடு செய்து வைக்கணும்னு நினச்சிருக்கேன், கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் இருக்கப்ப  எல்லோருக்கும் ட்ரெஸ் எடுத்து கொண்டு போய் கொடுத்துட்டு வரணும்” எனச் சொல்லி,

தன் குடும்ப ஆட்களுக்கு இவர்கள் என்னவர்கள் என காட்டும்படியாய் எந்த விழாவுக்கும் புத்தாடை எடுப்பது திரவியம்பட்டி வழக்கம், அதை அவனே அறியாமல் இவளுக்கு நினைவுபடுத்தியபடி, அந்த வகையில் இவள் பெற்றோரை  இவன் தன் குடும்பம் போல் ஏற்கிறான் என உணர்த்தியபடி,

அந்த சுபாவத்தை ரசித்தவளாய் அவனை திரும்பிப் பார்த்த இவளின் ரசனையை காற்றில் சன்னமாய் கலைந்தாடும் கேசமும், கால்களில் சுருட்டிவிட்ட ஃபேண்ட்ஸும் வெற்று பாதங்களுமாய் அவனிருந்த கோலத்தால் அவன் பால் இடம் மாற்றியவனாய்,

சமீப காலமாய் இது அவ்வப்போது நேரும் தடுமாற்றம்தான், ஏதோ ஒரு பார்வை கோணத்திலோ, எதையோ பேசிக்கொண்டிருக்கும் போதோ சற்றும் இவள் அனுமதியில்லாமல் அவன் வசீகரித்தில் விழுந்து கொள்கின்றது இவளது நினைவு முனைகள்,

கள்ளம் புரிந்தவளாய் ஒரு குற்ற உணர்வில் அதை இவள் தாண்ட முனைவதும் நடந்தேறும், அப்படியான தடுமாற்றங்கள் அவனுக்கும் இருக்குமா என இப்போது ஒன்று இவளை இழுத்துச் செல்ல, இன்னைக்கு என்ன ஆச்சு எனக்கு என இன்னுமாய் இவளை பதறவிட்டவனாய்,

சே காதல் கத்தரிக்கான்னு சுத்தி வந்த அந்த 20 வயது காலத்திலுமே, நீ அழகா இருக்க வெள்ளையா இருக்கன்னு எதையுமே உருவம் சார்ந்து அவன் உளறியதில்லையே என நினைக்கவிட்டவனாய்,

மாலை கரை திரும்பவென படகில் ஏறிய சமயம், படகு துறை என எதுவும் இல்லாமல் தரையிலிருந்து தண்ணீருக்குள் நிற்கும் படகில் அப்படியே ஏற வேண்டி இருந்ததால், இவள் சற்றாய் தடுமாறிப் போக,  இவளுக்கு பின்னால் நின்ற அவன் சட்டென இவள் கையைப் பற்றி சமனப்படுத்த,

திருமணம் என்று முடிவான பின் அவனது முதல் தொடுகை, ஒரு கணம் அவன் அப்படியே நின்றது போல் தோன்றியதில் ‘என்ன பாராதிராஜா படம் போல பையனுக்கு பத்து வெள்ள ட்ரெஸ் பொண்ணுங்க லாலான்னு பாடிட்டு ஓடுற போல தெரியுதா?’ என இவள் விழிக்க,

அவனோ ‘படகுல ஏறக் கூட தெரியல, இதுல உனக்கு தனியா வேற உட்கார வேண்டியிருக்கா?’ என்பது போல் இவள் அருகில் வந்து அமர்ந்து கொள்ளவென,

இப்படி பல பல தருணங்களில் இவளோடு இருந்தான்.

மாலை நேரத்து அந்தப் படகுச் சவாரி முதலில் வெகு ரம்யமாக இருந்தது. ஒரு ஓரத்தில் மோட்டர் இணைக்கப்பட்டிருந்தாலும் மரத்தாலான பெரிய தோணி எனதான் அதைச் சொல்ல வேண்டும், உட்கார என எந்த ஏற்பாடும் கிடையாது, குறுக்கு குறுக்காக இணைத்திருந்த மரபலகைகளில் எந்த பிடிமானமும் இன்றி உட்கார்ந்திருக்க வேண்டும்.

இவர்கள் அனைவரும் இரண்டு படகிலாக கிளம்பி இருக்க, முதல் படகு எந்த தடங்கலும் இன்றி கரைக்குச் சென்றுவிட, ஒரு ஆறரை மணி அளவில் இவர்களது படகின் அடிப்பகுதி எதிலேயோ சிக்கிவிட்டதென நகராமல் நின்று போனது.

படகை செலுத்தியவர் எத்தனை முயன்றும் படகு அசையவேயில்லை. அடுத்து அவர் நிலையை பரிசோதிக்கவென நீருக்குள் இறங்கினார்.

சளப், ஸ்ப்ளாஸ்!!

அவர் என்ன செய்தாரோ? தண்ணீர் சளப்பென அள்ளி தெறித்தது, அது நேரடியாய் விழுந்த இடம் வேணி அணிந்திருந்த டாப்ஸ்.

முதுகுபக்கம் தொப்பலாய் நனைந்து போனாள் இவள். அந்த மாலை நேரத்துக்கும், இருந்த தட்பநிலைக்கும், அடுத்த இரண்டு நிமிடங்களிலெல்லாம் குளிரில் இவள் வெடவெடக்கவும் செய்தாள்.

சற்று நேரம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த நரேன், “வேற ட்ரெஸ் எதாச்சும் எடுத்துட்டு வந்திருந்தா மேல போட்டுக்கோ வேணி, கொஞ்சம் குளிர் கம்மியா ஃபீலாகும்” எனச் சொல்ல,

“இல்ல, அப்படி எதுவும் கொண்டு வரல” என இவள் தெரிவிக்க,

இப்போது தனது பேக்கை திறந்தவன், “என் டவல் ஏற்கனவே ஈரமாகிட்டு, இத வேணா போட்டுக்கோயேன்” என அவனது டிஷர்ட் ஒன்றை எடுத்து நீட்டினான்.

“அச்சோ” என்றாள் இவள். அதிலேயே அது இவள் வகையில் எத்தனை கஷ்டம் என அவனுக்குப் புரிய,

“ஏன்? ஒரு ட்ரெஸ்தான? அதுவும் குளுருதுன்னுதான?” என சற்று கண்டனமாய் இவள் செயலை அவன் சுட்டிக் காட்டினாலும், கட்டாயப்படுத்தாமல் அந்த டிஷர்ட்டை உள்ளே வைத்துவிட்டான்.

அடுத்த பக்கம்