TTN Final Part 1 (10)

மனைவி கணவனை அடிக்கிறதுன்னாலே அது ஜோக்னு கடந்து போயிடுற விஷயத்துக்கு பின்ன இப்படி ஒரு விளக்கம் இருக்கா?

என்ன ஒரு க்ளாரிட்டி ஆஃப் திங்கிங்!!! அவளை ஆராதிக்கவும் வருகிறது.

முன்பெல்லாம் பெண்களை பற்றிய இவனது புரிதல் பெரும்பாலும் திரைப்படம் சார்ந்ததுதானே, அதை இப்போது இவன் மாற்றி இருக்கிறானா என்றும் அவளுக்குத் தெரியாதே, அதனால் போலும் இந்த மூவி கேரக்டர் போல நானில்ல, உன்னைய மாதிரிதான் நான் என்ற பேச்சு! பேச்சுன்னு கூட இல்ல, இது செயல்ல காமிக்கிறது! என் கல்யாணத்தப் பத்தி நான் பேசுவேன், திருமண உறவுன்னு வர்றப்ப உன்ன போலதான் இருப்பேன் நானும்ன்றது போல!

ஆனால் பண விஷயம், மனுப்ளேட் செய்ற இவனது முற்கால பலவீனம் இதெல்லாம் பற்றி அவள் பேசவே இல்லை, அதாவது அதிலெல்லாம் இவன் மாறிவிட்டான் என முழு நம்பிக்கை இருக்கிறது அவளுக்கு.

அவளை புரியவும் செய்கிறது.

“எந்த விஷயத்திலும் இடது பக்கம் வலது பக்கம் சாயாம அந்த நடு புள்ளிய அடிப்பீங்க பாருங்கண்ணி, அப்படி யோசிக்க முடிஞ்ச பொண்ண எனக்கு பாருங்க, எனக்கு ஆஃபீஸ்ல இருக்க டார்ச்சருக்கு அது ரொம்ப முக்கியம்” பவியிடம் இவன் சொல்லி இருந்ததும், ‘பவியண்ணி ட்ரெய்னிங் தானே இவளுக்கும், அதான் அவங்கள போலவே யோசிக்கிறா’ எனவும், ஒன்று போல மனதிற்குள் கசகசக்கிறது சுக சுகமாய்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவள் சொன்ன கடைசி விஷயம் ‘உங்களை நம்புறது அனுபவமா என் மனசிலிருக்கும், கல்யாணத்துக்கு அப்றம் உங்கட்ட நான் நானா இருக்கு முடியும்’ என்ன சொல்லிவிட்டாள் இவள்?! ஆடிப் போகிறதுதானே இவன் உயிர்.

ஆனாலும் “என்னை அரெஸ்ட் பண்ணப்ப அண்ணா வேற எதுக்குமே என் மேல கோப படல தெரியுமா? உனக்காக மட்டும்தான் என்னை அடிச்சாங்க, அதுவும் உன்னை எதுக்குடா காப்பாத்தணும்? காப்பாத்றவன் வீட்டுக்கு கொள்ளி வைக்கவான்னு? கேட்டுட்டு, வேணிய என் தங்கைன்னு சொல்லி இருக்கேன், இருந்தும் உனக்கு அவ மேல கை வைக்க எப்படி மனசு வந்துச்சுன்னாங்க. அண்ணாவப் பொறுத்த வரைக்கும் நீ அவங்களோட சொந்த குடும்பம், என்னை அவங்க காப்பாத்தினதுக்கு நான் அவங்களுக்கு நல்லது செஞ்சேன்னு இருக்கணும், அது இல்லைனா கூட அவங்கள ஹர்ட் செய்தேன்னு இருந்தா நான் மனுஷனே இல்லன்னுதானே அர்த்தம். என்னால அண்ணாவ மட்டும் யாருக்காகவும் ஹர்ட் செய்ய முடியாது. ப்ளீஸ் இந்த மேரேஜ் ஐடியா வேண்டாமே..” என இவன் வெகு வெகுவாய் தாழ்ந்து போய் ஆனால் உறுதியாய் சொன்னான்,

முகம் ஒரு பக்கம் கனிய, பாச வீச்சோடு இவன் பேசுவதையே பார்த்திருந்த வேணி இறுதியில் “வாட்? என்றவள் சிரித்துவிட்டாள்.

“பாஸ் அப்ப உங்கள சேஃபா சரணடய வைக்கிறதுக்காக அண்ணா உங்கள ஃப்ரீயா விட்டா, நீங்க அவங்க வீட்டுக்குள்ளயே வந்து கிட்நாப் செய்துட்டீங்க, உங்க நல்லதுக்குன்னு பார்த்து என் சேஃப்டிய விட்டு கொடுத்த போல அண்ணாவுக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல, அதனால வந்த கோபம் அது. நான்னு இல்ல எந்த கேர்ள் மேல கைய வச்சீங்கன்னாலும் அந்த அடி விழுந்திருக்கும், மத்தபடி ப்ரவி அண்ணாவுக்கு நானும் ஒன்னுதான், நீங்களும் ஒன்னுதான், இன்ஃபேக்ட் நம்ம கல்யாண ப்ரபோசல் ஐடியவே அவங்களோடதுதான்” இவள் சொல்ல

சரியாய் அந்நேரம் சம்பந்தமே இல்லாமல் அது வரை இருட்டிக் கொண்டிருந்த வானம் சட்டென உடைந்தது போல் முதல் நொடியிலேயே கொட்டிக் கொண்டு ஊற்றத் தொடங்கியது.

இதில் நிமிர்ந்து வானத்தைப் பார்த்த நரேன் “ஹே கமான் கய்ஸ், சீக்கிரமா எல்லாரும் காருக்கு ஓடுங்க, ப்ரவிண்ணா எல்லோரும் மீரட்ண்ணா வீட்டுக்கு போய்டலாமில்ல? மழை கொஞ்சம் குறஞ்ச பின்ன ட்ரைவ் பண்ண வசதியாயிருக்கும்” என இவர்களில் மீதியானவர்கள் அமர்ந்திருந்த திசையைப் பார்த்து கத்தியவன்,

“மது நீ வேணியோட எதாவது ஒரு அண்ணா கார்க்கு போய்டு, என் கார்க்கு வராத” என தன் தங்கைக்கும் சொல்லிவிட்டு. கார் இருந்த திசையைப் பார்த்து ஓடத் துவங்கி இருந்தான்.

“இவன் எதுக்காக ஸ்பெசிஃபிக்கா கூட வராதன்னு சொல்றான்?” என்ற ஒன்று சுருக்கென்றாலும், வேணி எதையும் கேட்டுக் கொள்ளாமல் நின்றிருந்த கார்களைப் பார்த்து ஓடினாள்.

மீரட் வீட்டிற்கு சென்ற பின்தான் வேணிக்குத் தெரியும் நரேன் மட்டும் இவர்களோடு வந்து சேரவில்லை என. தனது காரில் அவன் தனியாய் போயிருக்கிறான்.

வீட்டு தாழ்வாரத்தில் நின்றபடி ‘இத்தனை மழையில் அவன் எங்கு போனான்?’ என பவி அவனை மொபைலில் அழைத்து திட்டிக் கொண்டிருப்பது காதில் விழவும், வீட்டிற்குள் போய்விட்டாள் வேணி.

மீரட் வீடு ஒரு பண்ணை வீடு போன்ற அமைப்புடையது. மரங்களுக்கும், மணல் மைதானத்துக்கும் நடுவிலாய் இருக்கும் அவ்வீட்டின் ஒரு பக்கம் முழு நீளத்துக்கும் தூண்கள் அமைந்த தாழ்வாரம் இருக்கும். அங்குதான் வந்தவர்கள் அனைவரும் அமர்ந்திருந்து மொக்கை அரட்டை அடித்துக் கொண்டிருப்பது.

டீ போடலாம் என உள்ளே வந்த மீரட்டின் மனைவி கிருபாவோடு வந்து நின்றிருந்த வேணிக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை.

திருமண விஷயத்தைப் பற்றி நரேனிடம் இப்படிச் சொல்ல வேண்டும் என முழுக்கவும் தயார் செய்து வைத்திருந்ததால், பிசிறின்றி அதை பேசிவிட்டாளே தவிர, இப்போதோ வெகு அழுத்தமான மனநிலை. கையெல்லாம் மரத்துப் போனது போல் சில்லிட்டு இருக்கிறது. இவள் கூற்றுக்கு அவன் என்ன பதில் சொல்வான் என இவள் யோசித்தே இருக்கவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது, ஆக அவனது இந்த பதிலின்மையை எப்படி எடுக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.

அவசரப்பட்டு தன்னைத் தானே அவமானப்படுத்திவிட்டாளோ? ஆனால் அப்படியும் உணர்ந்துவிட மறுக்கிறது மனம்.

மது பிறந்த நாள் இரவில் நரேன் கிளம்பிப் போன பின் பவி பேசியதை மனதில் ஓட்டியபடி நின்றிருந்தாள் வேணி.

ந்த பிறந்த நாள் இரவில் அனைவரும் தங்கள் தங்களது அறைக்குச் சென்று அடையவும், பவி வேணியை அழைத்துக் கொண்டு வீட்டின் மொட்டை மாடியில் சென்று அமர்ந்தாள்.

அடுத்த பக்கம்