துளி தீ நீயாவாய் Final 2 (8)

“அது தவிர சப்ளையர்ஸ் மத்தவங்களுமே இனி நம்மள நம்பி மெட்டீரியல் தர விரும்பாம விலகிக்கலாம், புதுசா யாரும் நம்ம நம்பி ப்ராஜக்ட் தர யோசிப்பாங்க, வில்லங்கம் பிடிச்சவங்க, எதுக்கு அவங்கட்ட போய் நிக்கணும்னு நினைப்பாங்க” வேறு என்னவெல்லாம் எதிர்காலத்தில் வரும் என்றும் சிந்தித்தான்.

“இது தவிர நீ, நம்ம பிள்ளைங்கன்னு எல்லோர் கூடயும் இந்த ந்யூஸ் டேக் ஆகும், ஒரு நேரம் இல்லைனா ஒரு நேரம் இதை நீங்க எல்லோரும் ஃபேஸ் செய்ய வேண்டி வரும். அப்படி ஆகிட கூடாதுன்னுதான் ப்ரவி அண்ணாவே இது வெளிய தெரியக் கூடாதுன்னு அவ்வளவு எஃபெர்ட் எடுத்து வாசிருந்தாங்க, ஸ்டில் இப்படி ஆகிட்டு” ஆரம்ப பயத்தையே வேறு வார்த்தைகளில் சொன்னான்.

இதில் அவனுக்கு எத்தனை வலி இருக்கிறது என மனைவிக்கு புரியாமல் இல்லை. பிள்ளைக்கு இந்த பெயர் சேரும் என்றது இவளுக்கே தாங்க முடியாதது போல் ஒரு திகீர் உணர்வுதான். ஆட்டிப் பார்க்கும்தானே! ஆனால் ஆமாம் எனக்கும் பயமா இருக்கு என அவன் மீது விழுந்து இவள் அழுவதால் என்ன ஆகிவிடும்?

“ப்ச், இப்படித்தானே யோசிக்காதீங்கன்னு சொன்னேன், நாம இதை ஹேண்டில் செய்றப்ப, இதை எப்படி ஹேண்டில் செய்யணும்னு பிள்ளைங்களுக்கும் சொல்லியே வளக்கலாம், ஒன்னும் தூக்கிட்டுப் போய்டாது” என இருவருக்குமாக சொல்லிக் கொண்டவள்,

“அதெப்படிப்பா சப்ளையர்ஸ் வித்ட்ரா செய்வாங்கன்னு நினைக்கீங்க, நாம இதுவரை அவங்களுக்கு ஒழுங்காதான் பேமென்ட் கொடுத்துட்டு இருக்கோம்ன்றப்ப அதைத்தான் அவங்க பார்ப்பாங்க, அதேதான் உங்க பழைய க்ளையண்ட்ஸும், அவங்க ரெஃபரென்ஸ்லதான உங்களுக்கு அடுத்தடுத்து ஆர்டர்ஸ் வருதுன்னா, அவங்கட்ட நீங்க நியாயமா இருந்திருக்கீங்கன்னு அர்த்தம், அதைத்தான் அவங்க இனியும் சொல்வாங்க” என திடம் சொல்லி,

“அந்த லாவி காரங்கட்ட வேணும்னா இப்ப நைட் ஒரு டைம் ரிமைன்ட் செய்ங்க, எப்படியும் உங்க ஃபோகஸ் அதுல இருக்குன்னு அவங்களுக்கு புரியும்ல,

அந்த G&S ட்ட முதல்ல நம்மளப் பத்தி ரெஃபர் செய்தது யார்? உங்க பழைய கஸ்டமர் யாராவதா? அவங்கள கூப்ட்டு ஒரு டைம் G&S ல பேச சொல்லுங்களேன்” என எல்லாவற்றிற்கும் தனக்குத் தெரிந்த தீர்வைச் சொன்னாள். உண்மையில் இது எல்லாமே நரேன் சராசரி சூழலில் யோசித்து விடும் சாதாரண தீர்வுகள்தான். ஆனால் இன்றைய நிலையில் அவனுக்கு  இதைச் சொல்ல ஆள் தேவை. அது கூட நீ தனியா இல்ல, நானும் இருக்கேன் உனக்கு என உணர்த்தத்தான்.

“நீங்கதானப்பா சொன்னீங்க, பெரிய நிலமைக்கு வர்றதுன்னா, அதிக பணம் சம்பாதிக்கும் நிலைக்கு வர்றது இல்ல, இன்னைக்கு நாம எடுக்குற முடிவுகள் நம்ம கம்பெனி எம்ப்ளாயீஃஸ் மற்றும் பலர்னு ஆயிரக் கணக்கானோர் பொருளாதாரச் சூழலை அவங்களோட வாழ்வாதரத்தை தீர்மானிக்குது. இதை நேர்மையா செய்வோம்னு நம்பி நம்மள இந்த இடத்துக்கு கொண்டு வர்றதுதான் அந்த பெரிய நிலைன்னு.

அப்படி அதுக்குன்னு அவ்ளவு ட்ரெயின் செய்து உங்கள இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துட்டு இப்பயாப்பா எல்லாத்தையும் கடவுள் கலச்சுப் போட்டுடுவார்? நீங்க உங்களால முடிஞ்சத செய்ங்க, மீதிய அவர் செய்வார். எல்லாம் நால்லாத்தான் நடக்கும்” அவள் பேசிக் கொண்டிருக்க,

சோஃபாவில் அமர்ந்திருந்தவள் மடியில் முகம் புதைத்து படுத்தபடி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

இந்நேரம் சிணுங்குகிறது இவளது மொபைல். இவள் வீட்டிலிருந்து அழைப்பு என்கிறது ரிங்டோன். “ப்ளீஸ் நரேன், நான் இப்ப பேசல, நாளைக்குப் பேசிக்கிறேன்” என இவள் சொல்லிப் பார்த்தாள்தான்.

“ப்ச் அவங்க என்ன டென்ஷன்ல இருக்காங்களோ, குடு நான் பேசுறேன்” என அவன் கை நீட்ட,

இதுக்கு மேல் சரியாய் வராதென இவளே இணைப்பை ஏற்றுவிட முடிவு செய்து எழப் போனால், அவனோ இடையோடு கை போட்டு இறுக்கிக் கொண்டான். அதாவது அவனுக்கும் தெரிய வேண்டுமாம் இவர்களது பேச்சு வார்த்தை.

மற்ற நேரமாய் இருந்திருந்தால் இந்த அவனது பிடிவாதத்துக்கு என்ன செய்வாளோ? ஆனால் இன்றைய நிலையில் அவன் என்ன செய்தாலும் அவன் இஷ்டத்துக்கு போவது மட்டுமே சரி என்ற மனோபாவத்தில் இவள் இருப்பதால், வேறு வழியின்றி இணைப்பை ஏற்றாள்.

“என்னடி இது? இப்படி ந்யூஸ் வருது? அப்பா வேற இங்க தங்கு தங்குன்னு குதிக்கார் திரும்பவும் இவ ஏமாந்துட்டாளான்னு” எடுத்ததும் இப்படி ஆரம்பித்தார் அவளது அம்மா.

ஒரு கணம் மூச்சை இழுத்து தனக்குள் ஏறி எழும்பிய அனைத்தையும் அடக்கிப் போட்டவள் “அப்படி என்னம்மா வந்திருக்கு? அவர் ஜெயில்ல இருந்தார்னு எவிடென்ஃஸ் காமிச்சிருக்கான் அதானே, என்ன தப்பு செய்துட்டு ஜெயிலுக்கு போனர்னு எதாச்சும் எவிடென்ஸ் கொடுத்துருக்கானா? இருக்காதே!

உங்க மாப்ளை அவரோட தங்கைக்கு அவசரமா ஒரு ஹெல்ப் தேவைப்பட்டுச்சுன்னு, அன்னைக்கு நிலமைல அவளுக்கு நாந்தான் ரொம்பவும் க்ளோஸ் ஃப்ரென்ட், அதனால என்னை ஒரு வேகத்துல அவர் கட்டாயமா கூட்டிட்டு போய்ட்டார். போன இடத்தில் எனக்கு எதிர்பாரா விதமா ரொம்ப உடம்பு சரியில்லாம போய்ட்டு. அடுத்து டாக்டர் என்னை ட்ராவல் செய்யலாம்னு சொல்றதுக்குள்ள மூனு நாள் ஆகிட்டு. அது வரைக்குமே நரேன் என்னை அவ்ளவு நல்லாதான் பார்த்துகிட்டாங்க, அதுவும் 100% கண்ணியத்தோட.

இப்படி நரேன் உதவி கேட்கதான் கூட்டிட்டு போனாங்கன்னாலும் ப்ரவி அண்ணாவுக்கு இது எப்படி இருக்கும்? என் வீட்டுப் பொண்ண என் வீட்லயே வந்து கூட்டிட்டு போவியான்னு அவங்க நரேன அரெஸ்ட் செய்தாங்க. ஒரு அண்ணான்னா இதை செய்யத் தானே செய்வாங்க!

அன்னைக்கு நரேன் செய்ததும் அவங்க தங்கச்சிக்காக, ப்ரவி அண்ணா செய்ததும் அதே தங்கச்சி பாசத்துலதான். உங்களுக்கு புரிஞ்சாலும் புரியலைனாலும் இதுதான் உண்மை.

அது எதையுமே நீங்க நம்பலைனாலும், அன்னைக்கு அரெஸ்ட் செய்த அதே ப்ரவியண்ணாதான் இன்னைக்கு எங்களுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கதும், அதுக்காகவாவது நீங்க நரேனை நம்பலாம். அதுக்கு மேல உங்க இஷ்டம்” என இவள் சொல்லி முடிக்க, உண்மையில் ப்ரவி நரேனை கைது செய்ததும், நரேனின் சிறை வாசமும் சட்டப்படி இதற்காகத்தானே,

அதன் பின் சற்று நேரம் பேசிவிட்டு இணைப்பை துண்டித்த இவளது அம்மா நரேனையோ ப்ரவியையோ எதுவும் குறைவாக பேசவில்லை. இவள் சொன்னதை நம்பினாரோ அல்லது இவள் பேசிய தொனியில் இவளுக்கு நரேன் மீது இருக்கும் பிரியம் புரிந்து பேச்சை சுமுகமாக்கினாரோ ஆனால் ஆறுதல் போன்றே பேச்சை முடித்தார்.

இவள் பேசியதோ அந்நேரம் அவள் வீட்டை சமாளிக்க மட்டுமே, ஆனால் இதற்கு அப்படி ஒரு பின் விளைவு இருக்குமென யாருக்குமே தெரியவில்லை.

அடுத்த பக்கம்