TTN End 8

இதில் சற்று நேரம் கலகலக்க, இன்னுமாய் சில பதார்த்தங்கள் எடுக்க என வேணியும் நரேனும் இடையில் கீழே இறங்க,

கிடைத்த அந்த தனிமையில், “வலிக்குதாபா” என அவன் இதழ்களை பரிசோதித்தாள். சின்னதாய் அடிபட்டிருந்தது.

எல்லோரும் காத்திருக்கிறார்களே என்ற அவசரத்தில், அவன் அந்நேரம் பிடித்த ‘நீதான் செய்தாதான் ஆச்சு’ என்ற பிடிவாதத்தை சமாளிக்கவென அவசரமாய் இதழில் இறங்கிவிட்டு ஓடி இருந்தவளுக்கு, இப்போது பரிதாபமாய் இருக்கிறது.

“வலிக்குதுன்னு பார்த்துட்டு சும்மா நின்னா எப்படி, மெடிசின் யார் போடுறதாமா?” என கேட்டு மீண்டும் விரும்பியதை அவளிடம் வாங்கிக் கொண்ட பின்,

“பைதவே, கீழ சுறா எப்படி இருக்குன்னு செக் பண்ணப் போனேன்ல, அப்ப லைட்டா இடிச்சிட்டேன், அதுதான் இது” என உண்மையில் அடிபட்ட காரணத்தைச் சொல்லி,

“ஆனாலும் நீ நம்பிட்டதான?” என்றெல்லாம் சீண்டி, தேவையான முறைப்புகளை, இன்ன பிறக்களை வாங்கிக் கொண்டே மாடிக்குத் திரும்பினான் அவன்.

அன்று இரவு விருந்தெல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்பியபின், இரவு உடைக்கு மாறிவிட்டு வேணி வரும் போது,  தூங்கும் தன் மகளை எடுத்து மார்பில் சரித்துக் கொண்டு இவர்கள் வீட்டு வரவேற்பறையில் படுத்திருந்தான் நரேன். வழக்கமாக அவன்தான் இரவு மகளைத் தூங்கப் போடுவான், இன்று வெளியே போய்விட்டானே, அதனால் போலும்.

“என்னதிது தூங்குற பிள்ளையப் போய்?” என கேட்க வந்ததை, இந்த கணத்தை அவன் அனுபவிக்கும் வகையைக் காணவும்,  கேட்காமல்விட்டு

அவன் அருகில் தானும் படுக்கப் போனாள்.

அவனோ தலைக்கு அடியில் மடித்து வைத்திருந்த நீட்டி வைக்கிறான், அவன் புஜத்தை இவளுக்கு தலையணையாக்க.

அவன் மார்பில் தலை வைத்து படுத்தபடி கதை பேசுவதுதான் இவள் வழக்கம் என்றாலும், இதுவும் பிடிக்கிறது.

ஆனால் படுக்கவுமே, “வலிக்கலியாப்பா?” என்றும் கேட்க வருகிறது.

“ம்ஹூம், இந்த பாரமெல்லாம் இல்லைனாதான் வலிக்கும்” அவன் பதிலில் பாசம் காதல் என்பதோடு ஆயிரம் உண்மையும் இருந்தது.

                                                       ***********முற்றும்**********ஃ

வணக்கம் ஃப்ரென்ட்ஸ்,

துளி தீ ஆரம்பிக்கும் போது வழக்கமான என் கதை போல இருக்காதுன்னு சொல்லிதான் ஆரம்பித்தேன். படிச்சு முடிச்சுட்டு வழக்க போல இல்லையேன்னு ஃபீல் வர்றவங்களுக்காக இதை இங்க சொல்லி வச்சுக்கிறேன்.

கதை ஆன் கோயிங்கில் இருக்கும் போது பெரிதும் விமர்சனமானது வேணி கதாபாத்திரம். கதையில் நான் எங்குமே வேணி செய்ததை சரி எனச் சொல்ல வரவில்லை. அவள் அதைச் செய்திருக்க கூடாது, செய்ததால் துன்புறுகிறாள் என்றுதான் பதிந்திருக்கின்றேன். ஆனால் அதற்காக அவள் ரோஹனைத் தான் திருமணம் செய்ய வேண்டும், இல்லை திருமணமே இல்லாமல் வாழ வேண்டும் என்ற வாதங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

இம்மாரிலிட்டியை நான் சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் மன்னிப்பை நான் முக்கியத்துவப் படுத்துகிறேன். நம்புகிறேன் அவ்வளவே!

கதையின் துவக்கம் முதல் இறுதி வரை பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி  கூறுகிறேன். பல பல யூகங்கள் மூலம் எனக்கு அத்தனை அத்தனை ஊக்கம் கொடுத்த ஒவ்வொரு நட்பிற்கும் ஆயிரம் நன்றிகள். Will Miss Those Days.

If it is God’s will விரைவில் இன்னுமொரு தொடரில் சந்திப்போம்.

அது கண்டிப்பா சீரியஸான கதையா இருக்காது!

துளித் தீ நீயாவாய் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி