TTN End 7

அவன் மண்டையில் ஒரு கொட்டு வைத்தபடி “நம்பிட்டேன்” என்றாள் அவள். ஆனால் அவள் சொன்ன தொனிக்கு சம்பந்தமே இல்லாமல் அவன் நெற்றியில் ஒரு முத்தம்.

“எல்லோரும் சேஃப் வேணிமா, ரொம்பவே நிம்மதியா இருக்கு” இது அவன்.

“எனக்கும்தான்” இது அவள்.

அவள் சொன்னதற்கும் இவன் சொன்னதற்கும் பொருள் வித்யாசம் உண்டு.

அவன் தான் காப்பாற்றப் போன அந்த சுரங்கத் தொழிலார்களை குறிப்பிடுகிறான்.

அவள் இவன் பாதுகாப்பாய் திரும்பி வந்ததைச் சொல்கிறாள்.

சரணடைந்ததிலிருந்தே நரேனின் நடவடிக்கைகள் மன ஓட்டங்கள் என எல்லாவற்றையுமே கவனித்துக் கொண்டு வந்த ப்ரவி, நான்கு வருடங்கள் கழிய, எந்த பின்மாற்றமும் ஏற்படாமல் வெகுவாக பொறுப்பாகவே இருக்கிறான் நரேன் என உறுதியான பின், அவனை மீண்டும் அந்த சுறாவை செய்யச் சொல்லிவிட்டான்.

வெகு ரகசியமாக உண்டாக்கப்பட்ட அது நாட்டின் நலப் பணிகளிலும், பாதுகாப்பு பணியிலும் வெகு ரகசியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது ப்ரவியாலும் நரேனாலும். அஃப்கோர்ஸ் கருணும் மீரட்டும் உண்டு இந்தக் குழுவில்.

தவறானவர் கையில் கிடைத்தால் அது பெரும் ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதால் இந்த ரகசிய கையாளல். ஏதோ சமூக விரோத அமைப்போ அல்லது பிற நாடோ கூட இது வேண்டும் என நரேனை குறி வைக்கக் கூடாதே என்ற கவனமும் எப்போதும் இருக்கும். ஆக யாரிடமும் இதைக் குறித்து தெரியப்படுத்துவதில்லை.

திருமணத்திற்குப் பின் வேணியிடமும் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறதுதான். ஆனால் அவளுக்கு  இதில் அவன் உள்ளிருந்து பயணிப்பது பயங்கர ஆபத்தாக தோன்றும். நிலத்தின் உள்ளே இருக்கும் போது, சின்னதாய் ஏதோ ஒரு பழுது, இயந்திரம் இயங்காமல் நின்று போய்விட்டது என்றால் என்னாகும் நிலமை என்பது இவளது பயம்.

ஆக ப்ரவியும் நிலத்திற்கு மேலிருந்து இதை ரிமோட்டால் பயன்படுத்தும் வகையில் மட்டுமே இயக்க வேண்டும் என சொல்லி வைத்திருக்கிறான். அவர்களது திட்டம் எல்லாமும் அந்த அடிப்படையிலே செய்து கொள்வதுதான்.

நரேன் அதை மீறுவதெல்லாம் இல்லை. ஆனால் மனைவியை இதிலெல்லாம் வம்பிழுக்காவிட்டால் எப்படி?

“சரி இப்ப சொல்லுங்க, இங்க என்ன வேலை உங்களுக்கு?”  ரிமோட் வைத்து எல்லாமே தரையிலிருந்து செய்திருக்க, இவன் எதுக்கு நிலத்தடிக்குப் போனான் என தெரிந்தாக வேண்டும்தானே! அதைத்தான் கேட்டாள்.

“அப்பதானே இப்படி என் வேணிப் பொண்ணு தனியா கைல மாட்டும்” அவன் பிடியின் இறுகலில் வேறு சில நிறங்களும் பிறக்கின்றன.

“வெட்டிங் டேன்னா வீட்டுக்காரன ஸ்பெஷலா கவனிக்கணும்னு என் பொண்டாட்டிக்கு தெரியவே இல்லையே” அவன் சொல்ல,

அடுத்த சில நிமிடங்களில் இவர்கள் வீட்டுக்கு மொட்டை மாடிக்கு படியேறும் போது,

“ஆனாலும் நீ ஓவர், லிப்ஸ் வலிக்குது” என இவளை சீண்டிக் கொண்டிருந்தான் அவன்.

இதில் அங்கு போய் மற்றவர்களுடன் உட்காரவும் வருகிறது “ஹேய் நரேன் என்னாச்சு? லிப்ஸ்ல அடிபட்டிருக்கு போல?” என்ற கேள்வி.

இதில் நரேன் இவளை ஒருவிதமாய் பார்க்க,

இவளுக்கோ அங்கே இருந்து அப்படியே குதித்து விட மாட்டோமா என இருக்கும்தானே!

“இதுதான் எங்கப்பன் குதுருக்குள்ள இல்லன்ற முழி” இவளுக்கு அடுத்திருந்த நரேன் இவள் காதுகடிக்க, அடுத்த பல்பும் இவளுக்கு.

ஆனால் எல்லோரும் இவளது அண்ணாமார் ஆகிற்றே, ஆக அடுத்தெல்லாம் இதைப் பத்தி யாரும் கிளறவில்லை.

“வெட்டிங் டேன்னா நீங்க ரெண்டு பேருமா எங்கயாவது அவ்ட்டிங் ப்ளான் செய்துருக்கலாமில்லையா?” ப்ரவி விசாரித்தது அக்கறையில்தான். நேரம் கிடைக்கிறதே பெரிய விஷயமா இருக்க, அதில் எல்லா நேரமும் கூட்டமாவே சுத்துறது குடும்ப வாழ்க்கைக்கு சரி வராது இல்லையா? என்ற அக்கறை.

“அதுக்கெல்லாம் ஒரு கட்ஸ் வேண்டாமா? வீட்டுக்காரி கூட தனியா வெளிய போறதுன்னா பயமா இருக்குல்ல? அடி பின்னிட்டா என்ன செய்ய?” கருண் வழக்கம் போல் கலாய்க்க,

வேணியோ “அண்ண்ண்ணா” என சிணுங்கலாய் முறைக்க,

“இதுல ஃபீல் பண்றதுக்கு ஒன்னுமில்ல கொடுக்கு, வீட்டுக்கு வீடு வாசப்படி, நான்லாம் தூங்குறப்ப லினி கைய பிடிச்சுகிட்டுதான் தூங்குவேன், இல்லன்னா தூங்கினதும் அவ நம்மள கும்மிடக் கூடாதே” அவன் இப்போது தன் மனைவியை வார,

“நான் ஏங்க நீங்க தூங்குற வரைக்குமெல்லாம் வெயிட் பண்றேன்?” லினியோ தன் கைகளை ஒன்றோடொன்று தேய்த்தபடி முறைக்க,

“தம்பிக்கே தர்ம அடி கிடைக்கும்னாலும் பொண்டாட்டி முன்னால வாயவே திறக்காம இருக்கான் பாருங்க இங்க ஒருத்தன், அவன்தான் அறிவுள்ள மனுஷன்” கருண் இப்போது ப்ரவியை வம்பிழுக்க,

இதற்கு பவி படீரென ஒன்று கருணுக்கு வைக்க,

“இதெல்லாம் தெரியப் போய்தான நாங்க சும்மா இருக்கோம்” இப்போது ப்ரவி கருணை ஆமோதித்து மறைமுகமாய் பவியைச் சீண்ட,

இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த நரேனோ, அவங்களுக்கெல்லாம் ஒரு “பிரச்சனைனா எனக்கு வேற போல பிரச்சனை” என வேணியிடம் மட்டுமாக முனங்கியவன், தன் இதழ் வலிப்பது போல் பாவம் காட்ட,

அவனது தொடையில் ஒன்று கிடைத்தது மனைவியிடமிருந்து. வேறென்ன? அடிதான்.

அடுத்த பக்கம்