TTN End 3

ஆனால் இனி ஒழுங்கா இருப்பேன்னு வேணி சொல்லிட்டு இருக்காளே, அதுக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லையா? இது மற்றொரு கேள்வி!

அப்படி எப்படி சொல்ல முடியும்? மது அப்படி ஒரு முடிவுக்கு வரவும் அடிப்படையிலேயே எவ்வளவு சந்தோஷமா மாறினா! அவ வாழ்க்கையும் கண்டிப்பா இனி நல்லாதான் இருக்கும். இவனே அதுக்கான எல்லாத்தையும் உயிர கொடுத்தாவது செய்ற நிலையிலதான இருக்கான். அந்த வகையில் அவள் மனமாற்றம் அவளுக்கு ரொம்பவும் ப்ரயோஜனமானதே!

ஆனால் வேணிக்கு ஏன் அப்படி இல்லை? இப்பவும் ஏன் இப்படி ஒரு பிரச்சனை?

இல்லை இந்த பிரச்சனை இப்போது ஆரம்பித்த விஷயம் இல்லை. இந்த பிரச்சனை முடிந்ததுதான் இப்போது.

அதுவும் எந்த வகையில் முடிகிறது?!

இப்போது வேணியை இந்த நேரத்தில் இவன் கையில் கொண்டு வந்து கொடுத்தது எது?

ப்ரவி பவி வேணியின் பிரசவம் பற்றி தெரிந்தாலும் அவர்களது மன்னிக்கும் சுபாவத்துக்கு அவளை ஏற்றுக் கொள்வார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்,

வேணி தங்களோடு தங்கி இருக்கிறாள் என தயாளனிடம் சகஜமாய் காட்ட முடியாமல் வேணியை பள்ளியில்தான் தங்க வைக்க வேண்டி இருந்த அவர்கள் சூழலுக்கு,

இதில் பிரசவமாகிறது எனத் தெரியாமல் வேணியை மருத்துவமனை கொண்டு போய், அங்கு வேணியை தன் தங்கை என ப்ரவி சொல்லி, அடுத்து வேணிக்கு பிரசவம் ஆகி இருந்தால் ப்ரவியும் பவியும் என்ன நிலையில் நின்றிருக்க வேண்டி இருக்கும்? அப்போது வேணியை அவர்கள் என்னவென்று பார்த்துக் கொள்ள முடிந்திருக்கும்?

அதையும் விட அவர்களை அப்படி நிறுத்தியதற்கு வேணியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? குழந்தை என்ற அதிர்ச்சி, அது இறந்துவிட்டது என்ற இழப்பின் வலி, அதோடு இப்படியும் ஒரு நிலை என்றால் அவள் தாங்குவாளாமா? அதன் பின் வேணி அவர்களிடம் நிற்பாளாமா என்ன?

ஆக வேணிக்கு முடிந்த வரை மன அமைதியை தரும் வகையிலேயே இது முடிந்து போயிருக்கிறது.

ஆக அவளுக்கும் காலம் ஆதரவு செய்யவே முயல்கிறது!

இது எல்லாவற்றையும் இவனிடம் வந்து காலம் துரத்தி துரத்தி காட்டிக் கொண்டிருக்கிறதே எதற்காம்? அதோடு மது, வேணி என அவர்களது இக்கட்டில் இவனை ஏன் நம்புகிறதாம் அந்த காலம்?

இவனை நேசிப்பதால்தானே!! இவனை புரிந்திருப்பதால்தானே!! இப்போதும் கூட இவனை நம்புவதால்தானே!!

இப்படியாய் இப்போது இவன் ஆவியில் ஒன்று காற்றிலும் மென்மையாய் குத்திட்டு எழுந்து உயிர் வரை உள்ளார்ந்து ஏற்றுக் கொள்ள விரியும் தாய்மை வண்ண அரவணைப்பின் கரங்களாய் திறந்து நிற்க,

அறியா திசைகளில் சிதறத் சிதற ஓடி களைத்திருந்தவன், தன்னை தேடி காத்திருக்கும் அந்த அநாதி சினேகத்தின் தோள்களுக்குள் மடங்கிச் சுருங்கி, முழுவதுமாய் புதைந்து கொள்ளவே விரும்புகிறான்.

தன் வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டும், சரணடைய வேண்டும் என அவன் முடிவு செய்தது இங்குதான். இங்கு சரணடைதல் என்பது காவல்துறையிடம் என்பதைக் காட்டிலும் இவனுக்கு திருந்த அவகாசம் கொடுத்து காத்துக் கொண்டிருக்கும் கடவுளிடம் என்பது சரியான பதமாயிருக்கும்.

காலமே என்னை நேசித்திடு!! தெய்வமே என்னை சேர்த்தெடு!!

அதட்டலுக்கு அடங்கிப் போன ஆழி போல இவனுக்குள் இதில் அடங்கி அமர்கிறது இதுவரைக்குமாய் போர் கண்டிருந்த புலன் தாண்டிய இவன் சுயங்கள் எல்லாம். ஆதரிப்பாய் சுரப்பது போல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் கடகடவென புரிகிறது.

5 மடங்காய் திருப்பித் தர நினைகின்றது ஆன்மமும், அறிவும், உணர்ச்சிகளும். அவனுக்கு அதுதான் சரின்னு அப்போதானே வேணி சொன்னா!

அதற்கு தடையின்றி ஒவ்வொருவரும் இவன் அசையாச் சொத்துக்களை அவ்வப்போதே பணமாய் தந்தே வாங்கிக் கொள்ள சம்மதிக்கவும் செய்கின்றனர். என்னதான் ரகசியமாய் இதை இவன் கவனமெடுத்து ஆட்கள் மூலம் செய்தாலும், இது எதுவும் இவனை வலை வீசித் தேடும் ப்ரவியிடம் சிக்காதது இவனுக்கு ஆச்சர்யமே!

ஆனால் இதிலும் முதலில் இவனுக்குள் ஒரு  பதறாத குதறாத பாய்ந்து பாய்ந்து குழம்பாத அமர்ந்த நிலை பாய்ந்தாலும், அனைத்து தொழிலும், சொத்தும் தொடத் தொட சுலபமாய் முடிந்து வருவதாலும் அதோடு அடுத்து என்ன என்ற கேள்வியிலும், எங்கே இவனுக்கே முடிவு சமீபிக்கிறதோ என்று இருக்கிறது.

‘போதும் வாழ்க்கையில நீ கஷ்டப்பட்டது’ என மரண தண்டனை கொடுத்து இவன் வாழ்க்கையை தெய்வம் இங்கு முடித்தே விடுமோ? அவன் இதுவரைக்கும் செய்து வச்சிருக்கும் வேலை ஒன்னும் சின்னது இல்லையே! ப்ராக்டிகலாவும் சிச்சுவேஷனை பார்க்கணும் இல்லையா? என்றெல்லாம் அது பயமாயும் மாறியது.

ஆனாலும் தன் முடிவில் பின் வாங்கத் தோன்றவில்லை அவனுக்கு!

இருக்கும் வரை நிம்மதியாய் இருந்துவிட்டு போவோம் என்ற நிலைக்கு வந்திருந்தான்.

இவனது அப்பாவின் இன்னொரு வடிவமாய் இவன் வாழ்ந்துதான் எதற்கு?! ஆம் என்னதான் காரணம் சொல்லிக் கொண்டாலும் இதுவரைக்கும் இவன் இவனது அப்பாவைப் போலத்தானே வாழ்ந்து வந்திருக்கிறான். அவர் சில குற்றங்கள் செய்தார் எனில் இவன் வேறு சில குற்றங்கள் செய்து கொண்டிருக்கிறான். இதில் இவன் எப்படி இவனது அப்பாவைப் போல இல்லை என்பது? என்ற ஒன்றும் இவனுக்குள் கடப்பாரைக் குத்தாய் நிற்கிறதுதான்.

நிம்மதி ஒரு பக்கம் இவனை சரணடையச் சொல்லி பிடித்தது என்றால், இந்த மேற்கூறிய வினா அந்த முடிவிலிருந்து மாறாமல் இவனை வேலி அடைத்தது.

இதில் மயக்கம் தெளிந்து எழுந்த வேணிக்கு அவளுக்கு பிரசவமானதே தெரியவில்லை என்பது இன்னுமொரு பெரும் உந்து சக்தி இவனுக்கு. மனமாற்றம் என்பது நிம்மதியை இயற்கைக்கு மீறிய வகையிலும் கூட கொண்டு வந்து தருவதாக ஒரு புரிதல்.

அவளுக்கும் தெரியவில்லை, இவனையும் அவள் சொல்ல விடவில்லை என்றதும் இவன் அப்போதைக்கு சொல்லாமல் விட்டவன்,

இந்த முறை அந்த மருத்துவரை அழைத்து  அவள் வயது, அவள் ஏமாற்றப்பட்ட விதம் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு, ஆரோக்கியம் சம்பந்தமாக இந்த பிரசவத்தால் அவளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும், அவள் எந்த மாதிரி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் விசாரித்த போது,

அவள் மீது இரக்கப்பட்ட அவர், இப்ப இந்த இந்த விஷயம் சரியாகிட்டுன்னா ஆரோக்கியம்ன்ற வகையில் எதிர்காலத்தில் இதில் பயப்பட எதுவும் இல்லை, இப்படி ஒன்னு நடந்ததுன்னு மறந்துட்டு, இனிமேலாவது ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க என்ற போது,

இந்த பிரசவ விஷயத்தை வேணியிடம் மறைத்துவிட முடிவு செய்துவிட்டான்.

அடுத்த பக்கம்