TTN End 2

கருத்தடை மாத்திரை பயன்படுத்தியிருந்ததால் குழந்தை என்ற கோணத்தில் சிந்திக்கவே முடியாமல் போனதாலும், பிரசவம் என்பது என்னதென அறிந்தவரும் சொல்லாமல், அனுபவிக்கும் செய்யாமல் யாருக்கும் புரியாதே, அந்த நிலையாலும், பள்ளிகூடத்தில் கழிவறையை பயன்படுத்த போன இடத்தில் குழந்தையை பெற்றெடுத்த பள்ளிக் குழந்தைகள் இருக்கிறார்கள். அதே நிலைதான் வேணிக்கும்.

அந்நிலையில்தான் இந்த நரேன் போய் அவளை கடத்தி வந்த காரியம் வேறு நடைபெற்றிருக்கிறது. அவன் வீட்டில் கழிவறைக்குப் போனவள் தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரியும் முன்னும் தாங்க முடியா வலியில், உடல் பலவீனத்தில் மயங்கி விழுந்துவிட்டாள்.

உள்ளே போனவளை காணோம் எனவும் நரேன் எவ்வளவு நேரம் காத்திருக்க? ஒரு கட்டத்தில் அவன் உள்ளே வந்து பார்க்க ரத்த வெள்ளத்தில் அவள்.

அவனுக்கும் இது பிரசவம் என்றெல்லாம் எடுத்ததும் புரியவில்லை. பொண்ணுக்கே புரியலையாம் அப்றம் அவனுக்கு எங்க புரிய?

அவளை தட்டி, தண்ணீர் தெளித்து என தெரிந்த வகையிலெல்லாம் எழுப்பிப் பார்த்தவன் அவள் அசையவே இல்லை எனவும் வேறு வழியின்றி  அவனுக்கு ஆன்லைனில் அறிமுகமாகி இருந்த மருத்துவரை தொடர்பு கொண்டான்.

அவன்தான் எப்பவும் fat suit போட்டு போலி கெட்டப்ல சுத்றவனாச்சே, இதில் உடம்பு சரியில்லாம வந்தா பக்கத்துல இருக்க டாக்டர போய் பார்த்துடவா முடியும்? அதான் எப்பவும் ஆன்லைன்ல மெடிசின் பத்தி கொஞ்சம் படிச்சு வச்சிருப்பான்றதோட, ஆரோக்கியம் பற்றி பேசிக் கலந்து கொள்ளும் முகநூல் குழுக்களிலும் அவன் பழக்கம் வைத்திருந்தான்.

அங்கு உண்மையான அக்கறையுள்ள மருத்துவராக காணப்படும் சிலரோடு மருத்துவ காரியங்களை பேசுவதும் உண்டு. அதில் அவனுக்கு நம்பிக்கை இருந்த ஒரு பெண் மருத்துவரின் எண்ணைத் தேடிப் பிடித்து,

என் ஃப்ரென்ட் ஒரு பொண்ணோட மலைக்கு ட்ரெக்கிங் வந்தோம், அவ வயிறு வலின்னு மயங்கி விழுந்துட்டா நீங்க ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் தயவு செய்து சொல்லுங்க, அடுத்து நான் ஹாஸ்பிட்டல் கொண்டு போய்டுறேன் என இவன் ஆரம்பிக்க,

வயிறு வலியா? இதைச் செய்ங்க, இதப் பாருங்க, இதா இருக்கலாம் என அந்த மருத்துவர் ஒன்று ஒன்றாக ஆரம்பித்து, ஒரு கட்டத்தில், இவன் பார்த்து பார்த்து சொன்ன காரியங்களை வைத்து, உங்க ஃப்ரென்டா இல்ல கேர்ள் ஃப்ரெண்டா? ப்ரெக்னென்டா இருக்காங்களா? இது டெலிவரியா கூட இருக்கும்! அந்த பொண்ணு வயசென்ன? நீங்கல்லாம் மனுஷந்தானா?” என வந்து சேரவே ஒரு பெரும் காலம் போக,

இவனை மரியாதையே இன்றி திட்டு திட்டென திட்டினாலும், அந்த மருத்துவர் உடனடியாக செய்ய வேண்டியதைச் சொல்லச் சொல்ல, அதற்கு மேலும் தாமதிக்க வழி இல்லை என்ற நிலையில்,

குறை பிரசவம் என்பதால் ஓரளவு எளிதாக வெளியே வந்திருக்க வேண்டிய குழந்தை, இறந்துவிட்டதால் கருப்பையில் இருந்து இறங்கி பிறப்பு வாசலில் நின்று போயிருக்க, குழந்தையை கண்டு வெளியே எடுத்தது இவன்.

இவனுக்கு பெண் உடல் தெரியாது, அதன் வலி வாதைகள் தெரியாது, பிரசவமும் தெரியாது. இதில் அவன் தனியாளாய், அவன் உயிராய் நேசிக்கும் ஒரு ஜீவனின் ஜீவ மரண போராட்டத்தைப் பார்த்துக் கொண்டே உள்ளே சிக்கி இருக்கும் குழந்தையை எடுக்க வேண்டும் என்பதெல்லாம் சாதாரணமா? கை நடுங்க, உயிர் நடுங்க கதற கதறத்தான் செய்தான்.

பிறப்புக்கும், மரணத்துக்கும் மனித மனதை அதுவரை கேட்காத கேள்விகளையும் நோக்காத நியாயங்களையும் காண வைக்கும் சக்தி உண்டே!  அறிவு, மனம் இரண்டையும் தாண்டி ஆத்மாவிலிருந்தும் ஆவியிலிருந்தும் கேள்விகளும் பதில்களும் பிறக்கும் தருணங்களல்லவா அவை?! இவனோ ஒரே நேரத்தில் இரண்டையும் கண்டு கையாள வேண்டிய நிலையில். அதோடு அந்நாளிலும் அதற்கு முன்பும் மதுவும், வேணியும் பேசிய விஷயங்கள் வேர் விட்டு நுழையத்  தொடங்கியிருந்ததே இவன் மனதின் பாறைப் பகுதிகளை. ஆக எத்தனையோ கேள்விகள் என்னவென்னாமோ விடைகள்!

எத்தனைதான் புத்திசாலித் தனமாக யாருக்கும் தெரிந்துவிடா வகையில் செய்தாலும் ஒரு குற்றம் அதன் கணக்கை நம்மிடமும், நம் தலைமுறையிடமும் கணக்கு தீர்க்காமல் செல்வதில்லை. இப்படித்தான் புரிகிறது இவனுக்கு.

முறையான திருமணம், அதில் கருதரித்தல் என்றால் முறையான மருத்துவம் உட்பட எத்தனை கவனிப்புகளுடன், அது எப்படி இருந்திருக்கும்? இப்படியா ஆகியிருக்கும்? குழந்தை உண்டாகி இருக்கும் இவனது பவியண்ணியை வீட்டில் எப்படி கொண்டாடுகிறார்கள் என இவனுக்கும் தெரியுமே!

ஏன் இவனே முன்பைவிட இப்போதெல்லாம் இவனது அண்ணியைக் காணவுமே கூட மனம் மென்மைப்படுவான். சின்ன சின்ன காரியங்கள் கூட  இலகுவாய் இருக்க வேண்டுமென பார்ப்பானே!

பவி என்று இல்லை எந்த கர்பிணியைப் பார்க்கும் போதும் பொதுவாக எல்லோருமே கவனம் கொள்வதும் சற்று கனிவதும் இயல்புதானே!

ஆனால் இந்தக் குழந்தைக்கு கிடைத்தது என்ன? யார் காரணம்?

ஆக ரோஹனின் குற்றமும், வேணியின் குற்றமும்தான் இந்த குழந்தையை இத்தனை நேரத்துக்குள் இப்படி இறந்து போக விட்டிருக்கிறது என்றால்,  இவன் தந்தை தாயின் குற்றம்தான் இவன் தலையிலும், பூனத்தின் தலையிலும் விடிந்தது போலும் என ஓலமிடுகிறது இவன் ஆன்மம்.

வேணியின் தந்தை மீதும் இவனுக்கு நல்ல எண்ணம் கிடையாதே, பெற்ற பிள்ளையிடமே இரக்கம் பாராட்டாத அவர் மற்றவரிடம் என்ன செய்தாரோ, அதில்தான் வேணிக்கு இப்படி ஒரு நிலையா? அப்படியென்றால் இவன் செய்து கொண்டிருக்கிறானே அதற்கெல்லாம் இவன் குழந்தைகள் பலி செலுத்துமா?!! இது முதல் கேள்வி!

நம் குற்றத்துக்கு நம் பிள்ளைகளே இத்தனை அனுபவிப்பார்கள் என்றால், நாம் எத்தனை அனுபவிக்க வேண்டி இருக்கும்?!!! இது அடுத்த கேள்வி!!

ரோஹன் என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என இவனுக்குத் தெரியாதுதான். ஆனால் வேணியின் பாடு இவன் கண்ணால் பார்த்துவிட்டான். இவன் தந்தை மட்டும் தெருவில் இருந்து கொண்டாடிக் கொண்டா இருந்தார்? எத்தனை உயரத்திலிருந்து இறங்கி பிச்சை எடுக்கும் நிலை? எத்தனை சூடு வாங்கினாரோ அடிமையாய்? இன்னும் என்னவெல்லாம் படுகிறாரோ? வேணியின் அப்பாவும்தான் உற்சாக ஊஞ்சலாடுகிறாரா என்ன? ஊரை விட்டே ஓடித்தானே போயிருக்கிறார்? இது அடுத்த கேள்வி!!

ஆக இப்போ இவன் வாழ்ந்துகிட்டு இருக்க வாழ்க்கைக்கு, இவனுக்கும் இருக்கு அடி! நேரம் வர்றப்ப செம்மயா தலைல வந்து விழும்தான்! தாங்க முடியாதபடி கதற கதறவிடும்!!

இது அவன் கண்டறிந்த பதில்.

அடுத்த பக்கம்