துளி தீ நீயாவாய் 25 (20)

“வேணிய கூட வச்சுக்கணும்னு பிடிவாதம் பிடிச்சது நான்தான் ப்ரவி, நீயில்ல” என்றாள் பவி. மன்னிப்புக் கோரல் அல்ல அது. கம்பீரமான ஒரு பாராட்டு மட்டுமே இருந்தது அவள் குரலில்.

“அன்னைக்கே நீ சொன்ன போல அவள வெளிய ஹாஸ்டல்ல தங்க வச்சிருந்தா, அவ நம்ம வீட்டுக்கு வந்த நரேன் கண்ல விழுந்திருக்கவும் மாட்டா, இன்னைக்கு இந்தப் பிரச்சனை அவ உட்பட நம்ம யாருக்குமே வந்திருக்காது. எப்பவுமே உன் இன்ஸ்டிங்க்ட், உன் கல்குலேஷன், உன் அப்ரோச் அதுதான் பெர்ஃபெக்ட். அது தப்பா போகாது” இந்த நிலையிலும் இவனைத் தேற்றுகிறாள் அவள் என்பது புரிகிறது இவனுக்கு.

“உன் ப்ளான் ஜெயிக்கும் ப்ரவி, நரேன் உன்ட்டதான் வருவான்” உணர்ந்தே சொன்னாள்.

“I’ll pray” அவள் முடிக்க,

“தேங்க்ஸ்டா” ப்ரவியின் இந்த டாவின் நிறம் காதல். இணைப்பைத் துண்டித்துவிட்டு இவர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் விகாஷை அழைத்தான்.

இன்று நரேன் கைதாகும் வரைக்குமே விகாஷ் இவன் வீட்டு வரவேற்பறையிலும், இன்னும் சில காவலர்கள் வீட்டைச் சுற்றியுமே இருக்கும்படி ஏற்கனவே செய்திருந்தான் ப்ரவி.

இங்கு விமான நிலையத்திலும் பால்கனியின் வெவ்வேறு ஆள்மாறாட்ட புகைப்படங்களை கொடுத்து இந்த நபர் வந்தால் உடனே தனக்குத் தகவல் தர வேண்டும், பயணிக்க அனுமதி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் ப்ரவி ஏற்கனவே சொல்லியும் வைத்திருக்கிறான்.

ஆனால் தான் விரும்புவர்களுக்காக எந்த எல்லையையும் தாண்டுபவன் நரேன் என்பதுதானே இவனது அடிப்படை நம்பிக்கையே! ஆக இவைகளை போதுமானதாக உணர முடியவில்லை ப்ரவிக்கு.

அதே நேரம் நெல்லையில் இவன் வீட்டில் பவி தன் அறையிலிருந்து எழுந்து வேணியைத் தேடி வருகிறாள்.

“பீரியட்ஸ் வரப் போகுது போல மேம், அதான் ரொம்ப வயிறு வலிக்குது” என சில மணி நேரமாக சுருண்டு கிடந்த வேணி, இப்போது தனது அறையின் குளியலறையில் இருக்கிறாள்.

அவள் குளிக்கும் போது அறைக் கதவை உள்ளே பூட்டிக் கொள்வது இயல்பென்பதால், பூட்டி இருந்த கதவுக்கு வெளியே நின்று

“வேணி ஒரு எமெர்ஜென்ஸி, கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி ஹாலுக்கு வா என்ன” எனச் சொல்லிவிட்டு பவி சென்று வரவேற்பறை சோஃபாவில் சென்று அமர்கிறாள்.

பாதத்திற்கு அடியில் தரை சற்றே சற்றாய் அதிர்கிறதோ? அல்லது இது பயந்து போய் இருப்பதால் வரும் ப்ரம்மையோ.

எச்சில் விழுங்கினாள் பவித்ரா.

பால்கனி இப்போதும் ஹோட்டலில் இருக்கிறான். அவன் இயல்பாய் ஷோவுக்கு கிளம்ப ஆர்வம் காட்டவில்லை, அதனால் எங்கு சென்னை திரும்பிவிடுவானோ என்ற புரிதலில்தான் ப்ரவி இங்கு இவளை அழைத்து எச்சரித்ததே. இதில் அடுத்த இரண்டு நிமிடத்துக்குள் அவன் எப்படி இங்கு வர முடியும்?

அதே நேரம் சுரீல் சுரீலென இடுப்பில் ஏதோ குத்தும் ஒரு உணர்வில் “அம்மா” என ஒரு அலறலோடு எழுந்து உட்காருகிறாள் வேணி.

தடதடவென அவளை தூக்கித் தூக்கி அடித்தபடி எதிலோ பயணம் செய்து கொண்டிருக்கிறாள் அவள்.

“சாரி வேணிமா, ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் இப்ப வீட்டுக்கு போய்டுவோம்” என ஆறுதல் சொல்கிறான் அருகில் இருக்கும் பால்கனி.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 26

 

துளித் தீ நீயாவாய் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி