துளி தீ நீயாவாய் 25 (13)

வயல்னுதான் பேர், உள்ள அத்தன அத்தன வேலை அதுவும் ஷிஃப்ட் போட்டெல்லாம் நடக்குது. அவ்வளவு ப்ளான் பண்ணி ஆர்கனைஸ்டா போய்ட்டு இருக்கு. அந்த நரேன் செய்திருக்க மெஷின்ஸோட நோக்கமும் வேகமா வேலை நடந்து உற்பத்தி அதிகமாகணும், நிறைய லாபம் வரணும்றது மட்டும்தான்.

நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா? உள்ள உள்ளவங்க எல்லோருமே அவ்வளவு வேலை செய்றாங்க. பொதுவா திருட்டு கும்பல்னா என்ன செய்வாங்கன்னா, எங்கயாவது போய் திருடுவாங்க, அது காலியாகுற வரை அதை அனுபவிச்சுட்டு அடுத்து திரும்பவும் திருட வருவாங்க. இந்த உடம்பு வலிக்க வேலை செய்றது, அதுவும் சின்சியரா சிஸ்டமேடிக்கா செய்றதெல்லாம் அவங்கட்ட வாய்ப்பே கிடையாது.

எனக்குத் தெரிஞ்சி இந்த ஆட்கள் எல்லாம் உண்மையான வேலையாட்கள்தானே தவிர கண்டிப்பா திருட்டு கும்பல் கிடையாது. எல்லோரும் உள்ளூர்காரங்க வேற. அவங்க செலவு செய்ற வகைய கண்காணிக்க ஏற்பாடு செய்தா இத நாம கன்ஃபார்ம் செய்துக்கலாம்.

அதோடு செய்றதெல்லாம் நரேன் தனியாளாத்தான் செய்றான்னு படுது. இந்த மெஷினரிஸ் டிசைன் செய்து வச்சுருக்க போல, சுரங்கம் தோண்டுறதுக்குன்னு வேற எதுவும் சோஃபீஸ்டிகேட்டடா,  எதுவும் செய்திருக்கலாம் இல்லையா?

கடந்தகாலத்தில் எதையுமே வெளிக்காட்டிக்க முடியாம இருந்த அவன் நிலைக்கும், இப்ப அவனுக்கு கிடச்சிருக்க  வகை ஃப்ரீடத்துக்கும், அவன் 20 வயசு தர்ற ஹார்மோனல் ஹைப்புக்கு, முன்னால வெளிக்காட்ட முடியாத உணர்ச்சிகளை இப்படி பெக்யூலியரா திருடி வெளிப்படுத்திக்கிறானோன்னு இருக்கு.

கத்துறதால எந்த வகையிலும் வலி குறையப் போறது இல்லைனாலும், வலிக்கிறப்ப கத்தி நம்மள சமனப் படுத்திகிறமோ அப்படி எந்த வகையிலும் அவனுக்கு தேவை இல்லைனாலும் சும்மா திருடிக்கிட்டு இருக்கானோன்னு எனக்குப் படுது. மனசுல உள்ளத ஷேர் செய்துக்க கூட அவனுக்கு இப்பவுமே யாருமே இல்லையே!

மத்தபடி பணம்றது அவனுக்கு ரொம்ப பிரதான விஷயமா இருக்குதுன்னாலும், அதுக்காக தீவிரவாதத்துக்கு ஒத்துக்கிறது, நாடே அழிஞ்சாலும் எனக்கு காசு வந்தா போதும்னு நினைக்கிற டைப்பால்லாம் அவனப் பார்த்தா எனக்குப் படல. சொசைட்டிய பழிவாங்க இப்படி செய்றான்னும் நினைக்க முடியல.

நரேன் விஷயத்தில் முதல்ல இருந்தே எனக்கு இது ஒரு கேள்வி இருக்கும், பொதுவா திருட வர்றவன் செக்யூரிட்டிய அடிச்சுப் போட்டுட்டு திருடுவான். இவன் அவருக்கு கஞ்சா கொடுத்து, அதுவும் கேட்க பாட்டு வேற காதுல மாட்டிவிட்டு போய் திருடுறான். இவன் மெஷினோட சத்தம் அவருக்கு கேட்க கூடாதுன்னாலும் அதுக்குன்னு ஒருத்தன் இப்படியா செய்வான்?”

அன்று இரவு பசிக்க பசிக்க வீட்டிற்கு திரும்பிய ப்ரவி சாப்பிடக் கிளம்பும் முன்னாகக் கூட தங்களறையில் தன்னவளிடம் உற்சாகமாய் பகிர்ந்து கொண்ட விஷயமிது.

அப்போதுதான் குளித்து முடித்து வெளி வந்திருந்தவன் தலைமுடிக்குள் விரல்களை செலுத்தி ஈரம் போய்விட்டதா?!!! என ஆராய்ந்து கொண்டிருந்த அவனவளோ, அவன் என்ன சொல்ல வருகிறான் என முழுதுமே புரிந்தாலுமே “ஏது கஞ்சா கொடுக்குறது ரொம்ப நல்ல விஷயம்னு சொல்வ போல?” என இப்போது சீண்ட,

“எப்படியும் மயக்க மருந்து கொடுத்து செக்யூரிட்டிய தூக்கிட்டுப் போய் தூங்கப் போட்டவன்தானே நீ? அப்ப இவன உனக்கு பிடிக்கத்தான் செய்யும்” என்று வேறு சொல்லிக்காட்ட,

“அடப்பாவமே விட்டா உன் வீட்டுக்காரனையும் கொள்ளக்காரன் லிஸ்ட்ல சேர்த்துடுவ போலருக்கே” என சிரித்துக் கொண்டாலும் ப்ரவி இதற்குமே ஒரு விளக்கம் வைத்திருந்தான்.

“உண்மைதான் பவிமா, உனக்கே நீ என்ன அவனை ஜஸ்டிஃபை செய்றன்னு கேட்க வருதுல்ல? இங்க யாரும் நரேன் செய்து வச்சுருக்க வேலைய ஈசியா எடுத்துக்கப் போறது இல்ல, ஏற்கனவே அவன் எங்க டிபார்ட்மென்ட்ட ரொம்ப நோகடிச்சுட்டான். சின்ன க்ளூ கூட எடுக்க முடியாம ஆரம்பத்தில் திணறிட்டாங்கல்ல. அவங்க கண்ல இவன் விரல்விட்டு ஆட்டுனது போல ஆகிட்டு.

அதையும்விட மீடியா, மினிஸ்டர்ஸ்ட்ட வாங்கி கட்டிகிறதுன்னு நிறைய ப்ரஷர் வேற.  எங்க ஹையர் ஆஃபீஷியல்ஸ் நிறைய பேருக்கு அவன் மேல எக்கச்சக்க எரிச்சல் இருக்கும்.

அதுக்கும் மேல அட்டாமிக் ப்ளான்ட் அட்டாக், டெரரிசம்னு பெரிய பெரிய ஹைப்லம் இருக்கு அவன் மேல.

இதுல இப்பபோய் அவன் வெறும் பட்டாணியையும் சுண்டலையும்தான் திருடினான், இது ஒரு குழந்த பிள்ள, நம்மளாலதான் அவன கண்டு பிடிக்க முடியலன்னு சொன்னா அதை ஏத்துக்க யார் ரெடியா இருப்பாங்க?” என நிலமையைச் சொல்லி சற்று ஆயாசப்பட்டுக் கொண்டவன்,

“தீவிரவாதின்னு குற்றம் சுமத்தபட்ட ஒருத்தன டிபார்ட்மென்ட் சப்போர்ட் இல்லாம நான் மட்டும் தனியாளா நின்னு அவன் வெறும் திருடன்தான்னு கோர்ட்ல ப்ரூஃப் பண்றதெல்லாம் குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதைதான்” என்க

அவன் சொன்ன வகையில் “ஏன் ப்ரவி அவன தப்பிக்க விடப் போறியா என்ன?” என தொய்ந்து போய் கேட்டாள் பவித்ரா. பால்கனி தீவிரவாதி என தண்டிக்கப்படுவதில் எத்தனை சம்மதமில்லையோ, அதே அளவு அவனை தப்பிக்கவிடுவதிலும் பவிக்கு சம்மதமில்லை என அவள் குரல் காட்டியது.

“ச்சே, இவனுக்கு கடந்த காலம் சரியா இல்லைன்றதுக்காக அதுக்கு கொஞ்சமும் காரணமில்லாதவங்க, அத்தன ரிஸ்க் எடுத்து, அவ்வளவு தூரம் இன்வெஸ்ட் செய்து, அத்தனை பேருக்கு வேலை கொடுத்து செய்துகிட்டு இருக்க பிஸினசை அழிக்கிற போல இவன் இப்படி திருடிகிட்டு அலையுறது தப்பில்லையா?

அடுத்த பக்கம்