துளி தீ நீயாவாய் 25

பால்கனியின் முகத்தில் விரிந்து வரும் அந்த அது புன்னகைதானோ? ரசனை, பாசம், ஒரு ஆராதிப்பு கூடவே அடக்கப்பட்ட வேதனை எல்லாம் அதில் கலவையாய் காணக் கிடைக்க, சட்டென தன் பேச்சை நிறுத்திவிட்டாள் மது.

“சாரிண்ணா ரொம்பவும் சாரிண்ணா, நிஜமா  உங்கள குறை சொல்லன்னோ குத்தி காமிக்கன்னோ எதுவுமே என் நோக்கம் கிடையாதுண்ணா, இப்பவும் எப்பவும் உங்க மேல உள்ள பாசம்  மரியாதை எல்லாம் அப்படியேதான் இருக்குது, இருக்கவும் செய்யும். இவ சின்ன பொண்ணு எதோ சும்மா ஃப்ளூக்ல எதையோ புரிஞ்சுகிட்டு உளர்றான்னு நீங்க நினச்சுடக் கூடாதேன்னு மட்டும்தான் விளக்கமா சொல்ல வந்தேன். இனி நான் அதுக்காக கூட நடந்து முடிஞ்சத கிளறல.

எல்லாத்துக்கும் மேல, நான் சொல்லித்தான் உங்களுக்கு உங்களப் பத்தி தெரியணும்னு இல்ல, ஆக உங்களுக்கு அப்படி ஒரு முகமும் இருந்தால் நான் சொல்ற இந்த விஷயங்கள கொஞ்சம் சீரியஸா யோசிச்சுக்கோங்கண்ணா ப்ளீஸ்.

SP சார் வீட்ல நான் அந்த V, N, CCன்ற ப்ளான் எல்லாம் பார்க்கிறப்ப இந்த செமினார் பத்தி எதுவுமே நமக்குத் தெரியாது. ஆனா இன்னைக்கு நானும் நீங்களும் Vல இருந்து Nக்கும் CCக்கும் போய்ட்டு இருக்கோம்னா, இது எல்லாமே பக்காவா SPசாரால அப்போவே ப்ளான் போடப்பட்ட விஷயம், அது அப்படியே நடக்குதுன்னு ஆகுது.

சார் cc ல அந்த திருடனை பிடிக்க ஏதோ ப்ளான் செய்து காத்துகிட்டு இருக்கார்னு வேற சொல்றீங்க, அப்படின்னா நீங்கதான் அந்த குடோன் ஆளா இருந்தீங்கன்னா SP சார் உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கார்னு அர்த்தம்.

ஏதோ ஒருத்தன் SP சார் தோட்டத்துல குண்டு வச்சி, உங்களுக்கு ஃபோன் செய்து மிரட்டினான்னு சொல்றீங்களே, அவன் ஏன் சாரோட ஆளாவே இருக்கக் கூடாது? ஏன்னா அவனாலதான் நீங்க இப்ப சார் திருடன எதிர்பார்க்கிற இடத்துக்கு போறீங்க.

நான் உங்களுக்கு சொல்ல வர்றதெல்லாம் இதான்ணா. சாரப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும், நான் வேணில்லாம் உலகம் ஏத்துக்கிற போல ஒரு வாழ்க்கை வாழ்ந்தவங்க இல்ல, ஆனா எங்கட்ட சாரோட குடும்பமே நல்லாத்தான் இருந்திருக்காங்க, நாங்க செஞ்சதுக்கு தண்டனை அனுபவிக்கணும்னு அவங்க யோசிச்சதில்ல, இனி வர்ற எங்க லைஃப எப்படி நல்லபடியா அமைக்கிறதுன்னு தான் பார்த்திருக்காங்க, அப்படின்றப்ப சாரோட ட்ராப்ல போய் நீங்க மாட்டிக்கிறதவிட நீங்களா சரணடைஞ்சிட்டீங்கன்னா கண்டிப்பா சார் உங்கள நல்லாத்தான் நடத்துவார்.

என்னோட சின்ன சின்ன சந்தோஷம் துக்கத்துக்கும் கூட எப்பவுமே உங்கட்ட எதிரொலி இருந்திருக்குது, இருக்குது, அந்த அளவுக்கு என்னை புரிஞ்சு வச்சுருக்கீங்க. அதுல கவனிச்சிருப்பீங்கதானே பொய் பித்தலாட்டம் செய்து நான் நினச்ச போல இருந்த காலங்களவிட அது எல்லாத்தையும்விட்டு நியாயமா நடந்துகிடுற நேரங்கள்ளதான் நான் ரொம்பவே சந்தோஷமா உணர்ந்திருக்கிறேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

அதனால கடந்த காலம் எப்படியும் இருந்துட்டு போகட்டும் இனி நியாயமா இருந்துக்கிறேன்னு ஒரு முடிவு மட்டும் எடுத்துப் பாருங்கண்ணா, அந்த சந்தோஷம் உங்களுக்குப் பிடிக்கும். அதுவும் மத்த எல்லா மனநிலைய விட அது ரொம்பவே பிடிக்கும்.

உண்மை பேசினா அழிஞ்சிடுவோம்னு அரிச்சந்திரன்  கதைய காட்டி  காலம் காலமா பயம் காட்டுறதும், சாணக்கியனா இருந்தா சாதிச்சுறலாம்ன்றதும் சும்மாண்ணா, அந்த அரிச்சந்திரன் ஆரம்பத்தில் அரசனா ஆளுகையில் இருந்துட்டு, இடையில்தான் கஷ்டப்பட்டான், அடுத்தும் அவன் கடைசியில குழந்தை, குடும்பம், அரசபதவி, ஆளுகைனு ரொம்பவே நல்லாதான் இருந்தான்னுதான் கதை முடியும்,

ஆனா சாணக்கிய வரலாறு தெரியும்ல, அவருக்கு மரண தண்டனை கொடுத்துதான் கொன்னாங்க. அவர் இடையில கொஞ்ச காலம் மட்டும்தான் ஜெயிச்சுகிட்டு இருந்தவர், ஆரம்பகால அவரோட வாழ்க்கையும் அவருக்கு கஷ்டம், கடைசிகாலமும் கஷ்டம். அவரோட வாழ்க்கை முறை அவருக்குத் தேடிக் கொடுத்தது அதைத்தான். அதாவது அரிச்சந்திரன் வாழ்க்கைக்கு அப்படியே நேர் எதிர் அவரது வாழ்க்கை, உண்மைக்கும்  பொய்க்கும் உள்ள வித்யாசம் அதுதான். அதுவும் சாணக்கியர் ஒன்னும் கதையில்ல 100% நிஜம்…

அடுத்த பக்கம்