துளித் தீ நீயாவாய் 24 (8)

“இங்க என் டீம் எல்லோரும் லால் பாக் போணும்னு நினச்சுருக்காங்கண்ணா, நைட் தானே ட்ரைன், அதுவரை அவுடிங் ப்ளான் செய்துருக்காங்க. இப்ப நான் காணோம்னதும் அலறி அடிச்சு பயந்து அழுதெல்லாம் தேடிட்டு நைட் ட்ரைன்ல வேற வழி இல்லன்னு கிளம்புவாங்க. அந்த பிள்ளைகளுக்கு இப்படி பெங்களூர் வர வாய்ப்பெல்லாம் ரொம்ப ரேர்ணா, அதை நான் எனக்காக கெடுத்தேன்னு இருக்கும், அதோட ராணி டீச்சர்க்கு ஹெச் எம்ட்ட இருந்து எவ்வளவு  திட்டு கிடைக்கும். அதனாலதான்ணா” என மது இவன் முகத்தை பரிதாபமாகப் பார்க்க,

“நம்ம எந்த பாய்ண்ட்லாம் வெளிய போனா பிரச்சனையாக வாய்ப்பிருக்குன்னு நினைச்சமோ அதை எதையும் நான் லீக் செய்யலண்ணா” எனவும் திடம் கொடுக்க,

எதிரில் அமர்ந்திருந்த அவள் தலையில் கை வைத்து சின்னதாய் ஆட்டினான் பால்கனி. ஒரு வித அமர்ந்த புன்னகை அவனிடம்.

“மொட்டை அடிக்கப் போறது உங்களுக்கு, அதுக்கு எதுக்கு என் முடிய கலைக்கிறீங்க”  என சிலுப்பிக் கொண்ட மது, “யாரங்கே, இங்க இருக்கதுல்ல காஸ்ட்லியான காஃபில்லாம் எதுவோ எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்கவும், எங்க அண்ணா பர்ஸ நான் காலி செய்ய வேண்டி இருக்கு” என்றபடி மெனுகார்டை எடுக்க,

அடுத்து  இவர்கள் இருவருக்குள்ளும் சூழல் இலகுவாகவே சென்றது.

பின் விடை பெறும் நேரம் நெருங்க “ஓகே மதும்மா, இப்ப நீ கிளம்பலாம், எதுக்கும் மனச போட்டு குழப்பிக்காத, ஜஸ்ட் டூ டேஸ்ல நான் அங்க உன்னைப் பார்க்க வரேன்” என பால்கனி இந்த சத்திப்பை முடிக்கத் தயாராக,

சிரிக்கச் சிரிக்க அதுவரை பேசிக் கொண்டிருந்த மது அதே சிரிப்புடன் “என்ட்ட எப்பவும் உண்மையத்தான் சொல்வேன்னு சொல்வீங்கல்லண்ணா?” எனக் கேட்டு இவனிடம் ஒரு மென்மையான புன்னகையைத் தோற்றுவித்தவள்,

“நீங்கதான் நம்ம எஸ்பி சார் தேடுற அந்த குடோன் திருட்டை செய்ற ஆளாண்ணா?” என்றாளே பார்க்கலாம்.

இவனுக்கோ இப்போதும் இவன் புன்னகை மறையவில்லைதான்,  “என்ன மது இது? ஜோக்கா? அந்த அவன் உன் கண் முன்னாலயே என்னை கால் செய்து மிரட்டினத பார்த்ததான?” என நிதானமாகவே விடை சொன்னான். ஆனால் அவன் புன்னகையின் ஜீவனின் வண்ணம் மறைகிறதோ!

“இதெல்லாம் செய்றது நீங்களாவே இருந்தாலும் எனக்கு உங்கள என்னைக்குமே பிடிக்காம போகாதண்ணா, என்னைக்கும் என் சொந்த அண்ணனா மட்டும்தான் உங்களப் பார்ப்பேன். அதை உங்கட்ட சொல்லணும்னு தோணிச்சு” என்ற மதுவின் முகத்தில் இப்போது சிரிப்பு மறைந்து நெகிழ்ச்சியான ஒரு தாய்மை பாவம் மட்டுமே!

இப்போது கை நீட்டி அவள் கன்னத்தில் ஆதூரமாய் இவன் தட்டியபடி “என்னாச்சு மதுமா இப்படில்லாம் போட்டு குழப்பிக்கிற?” என்க

தட்டிய அவன் கையைப் பற்றிக் கொண்டவள் “நான் உங்கள யார்ட்டயும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன், காட்டிக் கொடுக்கவும் மாட்டேன்ணா, என் அம்மாவுக்கே ஹெல்ப் செய்ய நான் எவ்வளவு ப்ளான் வச்சுருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்” என்றவள்

“SP சார் வீட்டுக்குப் போனோம்லண்ணா, அங்கதான் ஒரு சாயில் சயின்ஸ் புத்தகத்தில் இதைப் பார்த்தேன். V ல இருந்து ஒரு ஆரோ Nக்கு, அப்றம் Vல இருந்து இன்னொரு ஆரோ ccக்கு, அப்பல்லாம் இது ஒன்னும் தோணவே இல்லண்ணா, இப்ப அந்த செமினார் முடிஞ்சு வெளிய வந்தோமே அப்பதான் நீங்க கிளம்பிடுவீங்களேன்னு யோசிக்கிறப்ப சட்டுன்னு விஷ்வேஸ்வரைய்யா இன்ஷ்டிட்யூட்ன்ற V ல இருந்து நான் நாமக்கல் போறேன், நீங்க cc ன்ற சைனீஸ் சர்க்கஸ் போறீங்கன்னு ஸ்ட்ரைக் ஆச்சு.

நாம வேற சாயில் சைன்ஸ்லதான் ப்ராஜக்ட் செய்துருக்கோம்” என்றவள்  இவன் கண்களையேப் பார்த்தபடி இன்னும் ஏதோ சொல்லப் போக,

பால்கனி இடையிட்டு எதையோ இப்போது பேச வந்தான்.

அவனுக்கும் முந்திக் கொண்டு வருகிறது மதுவின் “இது மட்டும் இல்லண்ணா, இதுதான் என்னை யோசிக்க வச்ச புள்ளி, அப்றம் பார்த்தா நிறைய நிறைய இதுக்கு ஒத்துப் போகுது”

பால்கனி இப்போது மௌனம் காத்தான்.

“சாரப் பார்க்க நீங்க பொதுவா தவிர்க்கீறீங்க, அன்னைக்கு நம்ம ஸ்கூல்க்கு சார் சாப்ட வந்தப்ப கூட உங்களக் கணோம்,  வேற போலீஸ் க்ஷ்டேஷன் போய் எனக்கு லோக்கல் கார்டியன்னு கூட எழுதிக் கொடுக்கீங்க, ஆனா என்னை SP சார் தன்னைப் பார்க்க க்ஷ்டேஷனுக்கு வரச் சொன்னப்ப, அதுவும் அப்பதான் என் அம்மா காணாம போன பெக்யூலியர் இன்சிடென்ட்லாம் கூட நடந்திருக்கு, ஆனா நீங்க  என் கூட வரல, செம்ம அப்செட் நீங்க, ஆனாலும் என்னை தனியாதான் அனுப்பினீங்க, எதோ நம்ம உறவே முடியப் போற அளவு ஃபீல் செய்தீங்க, ஆனாலும் கூட வரல,  அந்த அளவு சாரா அவாய்ட் பண்றீங்க,

அதை இன்செக்யூரிட்டின்னு முன்னால நினச்சேன், ஆனா இப்ப அது பயமோன்னு தோணுது… எதோ ஒன்னு, ஆனா நீங்க சார செம்மயா அவாய்ட் செய்றீங்க,

ஆனா சார் வீட்ல இருக்க வேணியோட பெர்சனல் லைஃப் அதுவும் அவ்வளவு ஈசியா யாருக்கும் தெரிஞ்சிட முடியாத அளவு பெர்சனல் விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு,

இதில் வேணிக்கு அதுக்கு முன்னால உங்களத் தெரியவே தெரியாது.

அதாவது சார் வீட்ட நீங்க உளவு பார்க்கப் போனப்ப வேணி அந்த ரோஹன்ட்ட ஃபோன்ல பேசி அழுறத நீங்க கேட்டிருக்கணும், வேணி அந்த டைம்ல மாடிக்கு எதோ ஒருத்தன் வந்ததா சொன்னாங்க”

பால்கனியின் முகத்தில் இப்போது மலர்வதன் பெயர் என்ன? ரசனையோ?

தொடரும்..

 

துளி தீ நீயாவாய் 25

 

 துளித் தீ நீயாவாய் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி