துளித் தீ நீயாவாய் 24 (6)

“உருவத்துல என்னண்ணா இருக்கு? நீங்க நல்ல வளத்தி அதுக்கேத்த போல இருக்கீங்க, வேணி குட்ட, அதுக்கேத்த பொல மெல்லிசா இருக்காங்க, இதுக்கு போய் யாராச்சும் ஃபீல் பண்ணுவங்களா, யாராவது உங்கள பார்க்க நல்லா இல்லன்னு சொல்லிட முடியுமா? கண்ணு தெரியாம போனவன் கூட சொல்லிக்க மாட்டான்” என்றெல்லாம் இவள் புலம்பிப் பார்த்தாலும் அவனது இளைத்தல் தொடர்கதையாகத்தான் இருந்தது.

ஆனால் இன்று அவனது உடைத் தேர்வு காரணமோ? முன் எப்போதையும் விட ஒல்லியாய் தெரிந்தான். இளைத்திருக்கிறான் என சொல்ல முடியாது இதை. ஃபிட் என்பது போல இறுகிப் போய் இருந்தான்.

“என்னண்ணா? மேக்அப் எதுவும் சினிமாகாரங்கள வச்சு போட்டீங்களா? அண்ணி இல்லாத இடத்தில் இப்ப எதுக்கு இந்த கெட் அப்?” என்றது மது.

சொல்லச் சொல்ல கேட்காமல் அவன் இளைத்துக் கொண்டே போவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“நல்லா இருக்கா இல்லையா அதை முதல்ல சொல்லு” கேட்டான் அவன்.

“அதான் சொல்லியச்சே அண்ணி இல்லாத இடத்துக்கு இது தேவையே இல்லைனு” என வருகிறது தங்கையின் குரல்.

“ஹ ஹா அப்ப நல்லா இருக்குன்னு அர்த்தமா? நன்றி நன்றி” என அதை பாராட்டாய் ஏற்றவன் அடுத்து தான் அங்கு வந்திருக்கும் காரணத்தை சின்னதாய் சொல்லி வைத்தான்.

“அந்த நம்மள உன் ஃபோனை எடுத்தே கால் செய்து மிரட்டினான்ல ஒருத்தன், நியாபகம் இருக்கா, அவன் பயங்கர ஃபேமஸ் திருடன் மதும்மா, அவன் முகத்தையோ ஃபோட்டோவையோ யாருமே பார்த்தது இல்லையாம், அவன் என்ன சொல்றான்னா அந்த திருடனே நான்தான்னு நானே ஒத்துக்கிட்டு சரணடையணும்னு சொல்றான். சரியான கிறுக்கன் போல. அன்னைக்கு SP சார அவன் வந்து அவங்க தோட்டத்தில வச்சே குண்டெல்லாம் வெடிச்சு மிரட்டினான், அப்படி மிரட்டுறப்ப என்னை தவிர அங்க இருந்த எல்லோரும் சாரோட வீட்டாள்ங்க, இதுல சார் என்னையையும் திருடனையும் சேர்த்து ஒரே நேரத்துல பார்க்கவும் இல்ல, அதனால அவன் என்ன சொல்றான்னா அப்படி புல்லட்ல மாறுவேஷம் போட்டு வந்து மிரட்டினதே நான்தான்னு மாட்டி விடப் போறேன்றான். இது போல அவன் சம்பந்தப்பட்ட ஒன்னு ரெண்டு இடத்தில் அதே நேரம் நான் இருந்தேன்னு காமிச்சுட்டா போலீஸ் டிபார்ட்மென்ட் என்னைத்தான் திருடன்னு நம்பிடவும் செய்யும்தான்.

அதான் நான் என்ன ப்ளான் செய்துருக்கேன்னா அந்த திருடன் இருக்க இடத்தில் நம்ம எஸ் பி சார் கண் முன்னால் நானும் இருக்கணும், அதாவது ஒரே நேரத்தில் சார் என்னையையும் திருடனையும் பார்க்கணும், அப்படின்னாலே நானும் திருடனும் ரெண்டு வெவ்வேற ஆள்னு Sp சாரே நமக்கு சாட்சியாகிடுவார்ல.

இதில் அந்த திருடன் இங்கதான் ஒரு சர்கஸ்ல இருக்கதா தகவல் கிடச்சிருக்கு, இன்னைக்கு சார் அவன அரெஸ்ட் செய்றார் போல, அதான் அப்படி அரெஸ்ட் செய்ற டைம் நானும் இன்னைக்கு சார் கண்ணு முன்னால அந்த சர்கஸ்ல போய் இருக்கணும்னு வந்தேன். அதிலும் அந்த திருடனை பிடிக்க நானும் ஹெல்ப் செய்துட்டேன்னு வை, அதோட அந்த திருடன் தொல்ல நமக்கு முடிஞ்சிடும்” என்றவன்

ஒரு வேளை நான் டைம்க்கு அங்க போக முடியலைனு வை, ஏன்னா ஆடியன்ஸ் இல்லாத நைட் நேரம்தான் பொதுவா இந்த ட்ரிக் செய்து அரெஸ்ட் செய்ற ட்ராமால்லாம் இருக்கும்னு நானா நினச்சுகிட்டு இருக்கேன், ஆனா சார் வேற போல எதுவும் ப்ளான் செய்திருந்தார்னா நான் மிஸ் செய்துடுவேன்ல,

அப்படியும் SPசார் அந்த திருடனை  பார்க்கிற இந்த நாள் நான் எங்கெல்லாம் இருந்தேன்னு பக்காவா ரெக்கார்ட் ரெடி செய்துகிட்டேன்னா, அதுவே நானும் திருடனும் வெவ்வேற ஆள்னு காமிக்க போதுமானதா இருக்கும்” என இவன் சொல்ல

ஓ என மிரண்டு போய் கேட்டுக் கொண்டிருந்தது மது.

“கேர்ஃபுல்லா இருங்கண்ணா”  என அக்கறையும் பட்டது.

“வந்த டிக்கெட், ஹோட்டல் பில், கார் ரென்ட் பில்னு எல்லாம் பத்ரமா வச்சுருங்கண்ணா” என்றது இவன் வாடகை காரில் வந்த காரணம் புரிந்து.

“இன்னைக்கு உங்கள இங்க பார்த்ததா நிறைய பேரால நியாபகம் வச்சுருக்க முடியும்தான்” அவன் அழகு கெட்டப்பின் உள்நோக்கம் புரிந்து ஆமோதித்தது.  “செமினார் போகலாம்னா. அங்கயும் உங்க பேர என்ட்ரி போட்டு வச்சா ரொம்ப நல்லது”

“ஆனாலும் அவன் பெங்களூர்ல இருக்கான்னு தெரிஞ்சு நீங்க இங்க வந்தது எனக்கு திகிலா இருக்குண்ணா, எப்படியாவது எதையாவது செய்து அவன் மறஞ்சு இருந்துகிட்டு நீங்கதான் அவன்னு இங்க அவன எதிர்பார்த்துகிட்டு இருக்க சார்ட்டயே மாட்டிவிட்டான்னா என்ன செய்வீங்க, ஊர்ல இருந்தா ரிஸ்கே இல்லைல” என்றது.

“அவனும் நானும் ஒரே நேரத்துல அப்றம் எப்படி சார் கண்ல கிடைக்கவாம்? அது எல்லா விஷயத்தையும் சால்வ் பண்ணிடும்ல, சார் பயங்கர ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட்,  அவருக்கு தெளிவா நான் அந்த திருடன் இல்லன்னு தெரிஞ்சிட்டாலே போதும், யாரும் எந்த சூழ்நிலையிலும் என்னை அரெஸ்ட் செய்ய முடியாது, சாரே நமக்காக ஃபைட் செய்வார், அதான்” என்றவன்,

“இதை உன்ட்ட சொல்லி இருக்க கூடாது போலயே, பயந்துக்கதுக்கு ஒன்னுமே இல்ல” என்க

“ஆமா சாரல்லாம் அப்படி ஒன்னும் யாரும் ஏமாத்திட முடியாதுதான்” என சொல்லிக்கொண்ட மது,

“அப்படின்னா இங்க செமினார் முடியவும் நான் எங்க க்ரூப் கூட நெல்லையே போய்டவாண்ணா?” என விசாரித்தது.

அடுத்த பக்கம்