துளித் தீ நீயாவாய் 24 (4)

“போடி மனுஷன் நேரம் காலம்னு பார்த்து பார்த்துதான் கூப்ட முடியுது, அதைப் போய் நைட்னாதான் கூப்டுறன்ற, அடிச்சி பிடிச்சு உன்னை பார்க்க வந்தா, இதுதான் உனக்கு எப்பவுமான்னு எப்படி கேட்டுட்ட, அப்படியா இவ்வளவு நாள் இருந்துருக்கேன் நான் உன்ட,

என்னெல்லாம் என்னப் பத்தி நினச்சு இங்க இதே கட்டில்ல வச்சு ஆடு ஆடுன்னு ஆடிருக்க நீ?  எப்பவும் என் கேரக்ட்டர சந்தேகப்படுறதே உனக்கு வழக்கமாகிட்டு என்ன?” இதெல்லாம் யார் சொன்னதாம். பவிதான் ப்ரவி போல பேசிக் கொண்டிருந்தாள்.

“சாரி பாஸ் எனக்கு வெட்கமா வருதுடான்னு சொல்லத் தெரியாமதான் எப்பவும் இதானான்னு சொன்னனே தவிர  வேற எந்த அர்த்தமும் அதுக்கு இல்ல” என்று அவள் அடுத்து சொல்லும் போதெல்லாம் அணைப்பு என்றதெல்லாம் தாண்டி அவளவன் அவளிடம் திளைக்கத் துவங்கி இருந்தான்.

அடுத்த நாள் இரவில் பவி நெல்லையிலிருக்கும் தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாள். அவளோடு தயாளனும் வந்திருக்க, வேணி பள்ளியில் தங்குவது தொடர்ந்தது.

வீட்டிற்கு விகாஷ் போன்ற துப்பாக்கி பாதுகாப்பெல்லாம் இப்போது இல்லை. ஆனால் பள்ளியில் இருக்கும் வேணிக்கு மட்டும் அது இன்னுமே இருக்கிறதுதான்.

இதில் பெங்களூரிலிருக்கும் விஸ்வேஷரய்யா தொழில்நுட்ப யூனிவர்சிடியிலிருந்து ஒரு நாடு தழுவிய கருத்தரங்குக்கான அறிவிப்பை பள்ளிக்கு எடுத்து வந்தாள் பவித்ரா. பள்ளி மாணவ மாணவியர் எதாவது புதுவித டனலிங் சம்பந்தப்பட்ட கருவியை வடிவமைத்து அதன் வர்க்கிங் மாடலை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்களின் மேற்படிப்பு செலவை ஒரு நிறுவனம் ஏற்பதோடு அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருக்கும் நாசாவிற்கு ஒரு அறிவியல் பயணமும் அனுப்பி வைக்கிறதாம்.

பிசிக்ஸில் வெகு ஆர்வம் என்றாலும் சாயில் சயின்ஸ் மற்றும் டனலிங் பற்றிய புத்தகங்களை ப்ரவியின் மேஜையில் கண்டிருந்த மது உடனடியாகவே இதற்கு பெயர் கொடுத்துவிட்டாள்.

அவளுக்கு நாசா என்பதன் மீது ஒரு மயக்கமே உண்டு என்றாலும் அவளைப் பொறுத்தவரை ப்ரவி சார் விரும்பி படிக்கிற ஒரு சப்ஜெக்ட்ல செமினார், அதில் இவள் எதாவது செய்தாக வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

அதாவது இவள் என்றால் இவள் அல்ல, இவளுக்குத்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா இப்ப இவளோட அண்ணாதானே. எது இவளுக்குப் புரியவில்லை எனினும் கூகிள்ள தேடி விளக்கத்தோடு வந்து நிற்பது அவனது வழக்கம். முறையான கல்விதான் இல்லையே தவிர அவளது ஆசிரியர்களை விடவும் கூட அவளது அண்ணாதான் ஜீனியஸ் என்பது அவளது நம்பிக்கை.

இது ஒன்றும் காக்கைக்கும் தன் குஞ்சு கான்செப்டெல்லாம் கிடையாது. வேணி கூட ஒத்துக் கொண்ட விஷயம்தான்.

ஆம் வேணியை இவள் ஏத்திய ஏத்தில் அவள் 12ம் வகுப்பு திரும்ப எழுதுவதாக ஒத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வரும் பாட சந்தேகங்களை தன் அண்ணாவிடம் சொல்லி விடை தேடி வேணிக்கு தன் அண்ணா அறிவாளி என காட்டாவிட்டால் எப்படி? ஆக அது ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதுதான்.

பால்கனி இதிலெல்லாம் பாய்ந்து பாய்ந்து உதவவில்லை என்றால்தானே ஆச்சர்யம்?! வேணியிடம் அவன் பேசவில்லையே தவிர இந்த சப்ஜெக்ட் விடு தூதுவை அவன் வெகுவாகவே கொண்டாடினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆக வேணிக்கு வேப்பிலை அடித்த அதே டெக்னிக்கை SPசார்க்கும் யூஸ் செய்யலாம்ல? அதுக்கு இந்த செமினார்தான் பெஸ்ட் என முடிவு செய்து மது களம் இறங்கினாள்.

ஆனால் விஷயத்தைச் சொல்லவும் வேணிக்கு என்றால் விழுந்தடித்துக் கொண்டு வந்த இவள் அண்ணன் இப்போது ரிவர்ஸ் கியரில் என்னது அவ்வளவு பெரிய இன்ஸ்டிட்ட்யூஷன்ல படிக்காத நான் செய்ற ப்ராஜக்ட்டா? அசிங்கமா போய்டும் மது என 1000கிமீட்டர் ஸ்பீடில் தெறித்து ஓடினான்.

அப்றம் இருக்கவே இருக்கு, இப்படின்னா நீ எப்படி சார்ட்ட பொண்ணு கேட்ப? வேணியும் படிக்காங்க, அப்ப உன்னைப் பார்த்து சார் இம்ப்ரெஸ் ஆகணும்ல என்ற அடுத்த வசிய மருந்து.

கூடவே “அண்ணா இப்படி பெங்களூர் போறப்ப அங்க இருந்து என்னை நீங்க பார்த்திருக்க ஸ்கூலுக்கு அனுப்பிடலாம்ணா, அப்படி இல்லாம சும்மா ஒரு நாளில் நான் இங்க இருந்து கிளம்பிப் போனேன்னு வைங்க, காணாம போய்ட்டேன்னு இருக்கும், லோக்கல் கார்டியன்னு உங்களுக்குத்தான் பிரச்சனையாகும், நீங்கதான் ஏதோ செஞ்சுட்டீங்களாம்பாங்க. இங்க நடக்கிற நைட் ஸ்டடி பத்தி வெளிய ரொம்ப மோசமா ந்யூஸாகவும் வாய்ப்பிருக்கு. அது எத்தனை பேரை பாதிக்கும்னு யோசிங்க. ஆனா இப்பன்னா நான் பெங்களூர் போன இடத்தில் காணாம போய்ட்டேன்னு இருக்கும். உங்கள யாரும் டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க, நைட் ஸ்டடிக்கும் பிரச்சனை ஆகாது” என கடைசி ஆயுதத்தை இவள் வீச

அடுத்த பக்கம்