தனிமை கதவின் தாழ் நீக்கவா (5)

வணக்கம் அங்கிள் நான் நிவேதன் ஃப்ரெண்ட். அவன் சார்ப்பா பேச அவனை தவிர நான் இருக்கேன், அதான் பேசலாம்னு வந்தேன்.

அப்பா அம்மா இல்லனு தெரிஞ்சும் மாத்தவே முடியாத அதையே காரணமா சொன்னா எப்படினு நித்திலா யோசிக்கறாங்க, அவனை இப்போ எதாவது பேசிட்டு வாழ்க்கை முழுக்க அவனை பாக்கறப்போலாம் நீங்க இதையே நினைச்சு வருத்த பட கூடாதுன்னு நிவியும், அவன் வந்து பேசறதுக்கு முன்னாடி நான் வந்து பேசறது சரியா இருக்கும்னு நினைச்சாங்க. அதான் நான் வந்து இருக்கேன்.

எனக்கு நீங்க பேசின எல்லாமே ரொம்ப நியாயமான உங்களுக்கு புரிய வெக்க முடிஞ்ச விஷயங்களா தெரிஞ்சது. காதல்னாலே தப்பா இருக்கும்னு எடுத்ததும் சொல்லாம அவனை பத்தி நித்தி சொன்னதெல்லாம் காது குடுத்து கேட்டுட்டு உங்க காரணத்தை சொல்லி இருக்கீங்க . அதுவும் ஊருல இருக்கவங்களாம் என்ன பேசுவாங்க, என்ன இனமோனெல்லாம் இல்லாம ரொம்ப நியாயமாதான் பேசி இருக்கீங்க

யாரும் இல்லாத இடத்துல உன்னைய கல்யாணம் பண்ணி குடுத்துட்டு நாளப்பின்ன பிரச்சனைன்னு வந்தா யாரை கேக்கறது ,

இந்த காலத்துல அப்பா அம்மா இருந்து வளர்த்தர பசங்களே எப்படி இருக்காங்க என்ன பழக்கம் வழக்கம்னு தெரிய மாட்டேங்குது, இதுல இவன் எப்படி இருப்பானோன்னு கேட்டீங்கனு நித்தி சொன்னா.

அப்பா அம்மா இருந்து வளர்த்தற பசங்களே எப்படி இருக்காங்கன்னு தெரியறதில்லன்னு நீங்க சொன்னது 100% கரெக்ட்.

ஒருத்தன் கெட்டவனா மாற அவன் வளர்ப்பெல்லாம் தேவையில்லை. அவன் ஒருத்தன்தான் முழு காரணமா இருக்க முடியும். நல்லவனா ஒருத்தன மாத்த எப்படி எல்லாரும் முயற்சி பண்ணினாலும் அவன் முடிவு பண்ணாத்தான் மாறமுடியுமோ, அப்படி தான் கெட்டவனாகறதும். ஒருத்தரோட குணாதிசியங்களுக்கு அவங்களோட மனசும் சிந்தனை திறனும் தான் முழுப்பொறுப்பு. அம்மா அப்பா சரி இல்ல அதான் இவன் மத்தவங்ககிட்ட எல்லாம் இப்படி நடந்துக்கறான்னு சொல்றதெல்லாம் சும்மா ஒரு காரணம். அதுவும் அடிப்படையே இல்லாத காரணம் அவளோ தான்.

வளர்ப்பை தாண்டி, நீங்க கேட்ட பழக்க வழக்கம் எல்லாம் ரொம்ப நியாயம். இப்போலாம் யாரு தண்ணியடிக்காம இருக்காங்க, நீ இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்றன்னு பொண்ணுங்கள கேக்கற சொந்தகாரங்களை எனக்கு தெரியும் . அப்படி இல்லாம ரொம்ப சரியா இதெல்லாம் யோசிச்சுதான் கல்யாணம் பண்ணனும்னு நானும் நினைக்கறேன், உங்கள போலவே.

நிவி ஒரு அக்மார்க் நல்லவன் தான். ஆனா நான் சொல்றதெல்லாம் நீங்க அப்படியே நம்பணும்னு இல்ல. கண்டிப்பா நான் அப்படி சொல்லவும் மாட்டேன். நீங்க ஒரு மாப்பிள்ளை பார்த்தா, என்ன எல்லாம் விசாரிப்பீங்களோ அதெல்லாம் விசாரிங்க. அவனை பத்தி, அவன் வேலைய பத்தி, அவன் குடும்பத்தை பத்தி எல்லாத்தையும் விசாரிங்க. அவன் குடும்பம்னா என் குடும்பத்தைத்தான் சொல்றேன். நல்ல விசாரிச்சு ஒரு முடிவுக்கு வாங்க அதை தான் சொல்ல வந்தேன்.

அப்பறம் பிரச்சனைனா நீங்க வேற யாரையும் கேக்க வேண்டாம் நேரா அவன் சட்டையவே பிடிச்சு கேக்கலாம் அதுக்கான நம்பிக்கையை அவனே உருவாக்கிடுவான் உங்ககிட்ட.

அங்கிள்ன்னு ஆரம்பிச்சுட்டேன். ஆனா எனக்கு அது ரொம்ப அன்ஈஸியா இருக்கு எப்படிபார்த்தாலும் நித்தி எனக்கு தங்கச்சி தான் அதனால உங்கள அப்பானே கூப்பிடறேனே.

……………………………………………………………………………………………………………………………..

என்னடா இவன் நல்ல கதை கதையா சொல்லி இருக்கான். என்ன பண்ணி இருப்பான்னு யோசிச்சு இருப்பீங்களே.

நாங்க ரெண்டு பேரும் நினைச்ச போல கொஞ்சம் கொஞ்சம் விழுந்து வாரி புது ஸ்டைல் லைப்க்கு பழகி, அதுக்கு முன்னாடி இருந்த லைப் ஸ்டைல்ல எதெல்லாம் பிடிச்சதோ அதையும் முடிஞ்ச அளவுக்கு தக்கவெச்சு,

சமைக்கறது அது இதுன்னு புதுசா பழகவேண்டியத பழகி, எனக்கு 16 மணி நேரம் வேலை இருக்கப்போ அவ என்னைய புரிஞ்சு, ஒரு ஸ்டேஜ்ல அவளோட கேரியர்ற விட்டு அவ விலகி இருக்கறது எனக்கு சுத்தமா புடிக்காம அதுக்கும் அவளைய இப்போ பிளைட்க்கு அனுப்பின போல ரெடி பண்ணி, வி ஆர் எ சேம் டீம் அப்படிங்கற ஃபீல்ல தான் எல்லாத்தையும் எதிர்கொண்டுருக்கோம்.

Announcement “Thai airlines landing ”

வந்துட்டா, மறுபடி எதாவது ஒரு ட்ராவல்லுக்கு நானோ அவளோ வர வரை இந்த ட்ரிப் என்னைய அனுப்பிட்டேலன்னு சொல்லிட்டே இருப்பா.

என்ன டா கதை சொல்லி முடிச்சிட்டியா

நான் முடிச்சிட்டேன் நீ சொல்லு கல்யாணயத்துக்கு அப்பறம் லைப் காலி ஆகிடுச்சா எப்படி இருக்குனு.

நம்ம எப்படி எல்லாம் இருக்கோம்னு நமக்கு பிடிச்சவங்க, நம்மள பிடிச்சவங்க சொல்லுவாங்களே, அப்படி எல்லாம் நமக்கு ஒருத்தர் இருக்கணும்னு தோணுமில்ல. அப்படி தான் இருக்கு உன் கூட இருக்கப்போ. வி ஆர் எ சேம் டீம் ல சோ உனக்கும் அப்பிடித்தானே.


கதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

தனிமை கதவின் தாழ் நீக்கவா- Comments Thread