தனிமை கதவின் தாழ் நீக்கவா (4)

ஹாப்பி பர்த்டே நிவேத்.

தேங்க் யு நிலா.

இப்போ தான் எந்திரிக்கறீங்களா.

ஆமா. மனு இங்க வந்தானா நைட் விஷ் லாம் பண்ணி கொண்டாடி முடிஞ்சு தூங்க லேட்டாகிடுச்சு அதான். ஆமா இப்போ டைம் என்ன , ஆறரைய அடிப்பாவி இந்நேரத்துக்கு எழுப்பி விட்ருக்க.

அய்யயோ பிறந்த நாள் அன்னைக்குனாச்சும் காலைல எந்திரிப்பீங்கனு நினைச்சேன்.

…………………………………………………………………………………………………………………………………………….

ஏன்டா நித்திலாவ பிடிச்சு இருக்குல்ல அவக்கிட்ட சொல்லிடேன்டா

பிடிச்சு இருக்குனு எதுக்கு டா சொல்லணும்.

நீயா சொல்லிடு இல்ல அவ போன வாங்கி உனக்கு கால் பண்ணிடுவேன்.

அந்த ரிங்க்டோன்ன கேட்டா ஊருக்கே தெரியும்.

டேய் ராஜா நானே சொல்லிகறேன் ஆள விடு.

நித்தி… லா நான் உன்கிட்ட பேசனுமே.

நித்தி, “என்ன நிவேத், என்னைய எல்லா நேரமும் நிலான்னு கூப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா.”

நிவி, “செம்ம நானும் எப்படி எல்லாமோ ரெடி ஆனேன் நிலா ஆனாலும் இவளோ கரெக்ட்டா வரலை. நீயே சொல்லிட்ட.”

உன்னைய பார்த்ததும் லவ் பண்ணனெல்லாம் சொல்ல மாட்டேன்.

எங்க நீ அண்ணானு கூப்ட்ருவியோன்னு இருந்துச்சு. ஏன்னெல்லாம் இப்போவரை தெரியல. நீயும் கோவிச்சுக்கிட்டே உங்களையே கூப்பிடமாட்டேனு சொல்லிட்ட . ரொம்ப நல்லதுன்னு விட்டுட்டேன்.

அப்பறம் அப்போ அப்போ நீ பேசறது. எனக்கே தெரியும் நீ மனு கிட்ட பேசி இருக்க போல, என் பேமிலின்னு யாரும் இல்லனு தெரிஞ்சு தான் வீட்ல இருக்கவங்க பத்தி எல்லாம் கேக்காம இருக்கன்னு. மனு எப்பவுமே நான் தனின்னு யோசிக்க விட்டதில்லை. ஆனாலும் நீ வந்த பிறகு உன் கூட பேசறப்போலாம் அப்போ தான் ஒரு கம்ப்லீட் ஃபீல். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இங்கயும் அங்கயும் னு மனசு சுத்திட்டு இருந்துச்சா. அப்போ தான் பிறந்தநாள் அன்னைக்கு போன் பண்ண, டெய்லி காலைல உன் குரலுக்கு எந்திரிச்சி போற போல எனக்குள்ள ஒரு கற்பனை இருக்குனே அன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன். அதான் என்னையும் மீறி அன்னைக்கு பயங்கரமா  உளறிட்டேன். அப்போவே உனக்கு டவுட் தானே.

ஹா ஹா அப்போ கான்பார்ம்யே பண்ணிட்டேன்.

……………………………………………………………………………………………………………………………………………………..

இப்படியே போய் வீட்ல பேசற கட்டத்துல தான் மறுபடி நான் பேச வேண்டி இருந்தது.

“எங்க வீட்ல பேசிட்டேன். எங்க அப்பா ரொம்ப பேசறாரு. முடியவே முடியாதுனு சொல்லிட்டாரு.”

“அபியும் நானும் அப்பாவாவே இருந்தாலும் பொண்ணு லவ் பண்றேன்னு சொன்னா நீ டெல்லிக்கு படிக்க போனியா லவ் பண்ண போனியானு தான் கேப்பாரு. பொண்ணு லவ் பண்றேனதும் அதிர்ச்சி ஆகுமில்ல. பொறுமையா பேசி புரிய வைப்போம் இரு.”

எங்க வீட்ல ஒத்துக்கலைனா கல்யாணம் பண்ணிக்க மாட்டோமா என்ன நிவேத் இப்படி சொல்றீங்க.

ஹே உங்க வீட்ல மொதல்ல பேசி பாப்போம்னு சொல்றேன். உன்னைய ஒரு வட்டதுகுல்லையே, வீட்ல சொல்லிதறது மட்டும் தான் வாழ்க்கைன்னு இருக்காத வெளிய சுத்தி பாருன்னு சொன்னது நெறய விஷயம் நமக்கு தெரியாத அளவுக்கு சீரியஸ்ஸா இருக்குனு புரிஞ்சுக்கோங்கறத்துக்கு. அத நீ உன் அம்மா அப்பா சொன்ன ரீசன்க்கு சேர்த்து கொலப்பிக்கற. ரொம்ப சிம்பிள் அவங்க இன்னும் முடியவே முடியாது உனக்கு உடனே வேற மாப்பிளை பாக்கறேனெல்லாம் எதுவும் பேசலையே இப்போ தானே ஒரு முறை பேசி இருக்க உடனே சரினு சொல்லனும்னா எப்படி.

பொறுமை முக்கியம். எப்பவும் என் வீட்ல இருக்கவங்க எனக்கு கெட்டது நினைக்க மாட்டாங்கன்னு இருக்க உன்னோட நம்பிக்கையை அப்படியே வெச்சுறு அதை ஏன் மாத்திக்கற. கருங்கல்லை கற்பூரமா மாத்தறதுதான் காதல், நம்ம கிட்ட சரியா இருக்க விஷயத்தை குழப்பி விடறது காதல் இல்ல புரியுதா.

அப்போ இன்னொரு தடவை பேசி பாக்கவா.

இந்த முறை பேசறதுக்குனே அளவெடுத்து செஞ்சவன் ஒருத்தன் இருக்கான்ல உன் பாசமலர் அவன் வருவான்.

……………………………………………………………………………………………………………………………………………….

அடுத்த பக்கம்