தனிமை கதவின் தாழ் நீக்கவா (3)

தனிமை கதவின் தாழ் நீக்கவாஎப்படி பேசியே கல்யாணம் பண்ணேன்னு என் வைஃப் சொல்லி அனுப்பினாங்களா.

அப்படி பேசியே இன்னொரு கல்யாணமும் பண்ணி வெச்சு இருக்கேன். அந்த அனுபவம் தான் நல்லா பேசிட்டேன் போல.

என் ஃப்ரெண்ட் நிவேதன் என் பாசமலர் நித்திலா.

………………………………………………………………………………………………………………………………………………..

ஹாய் அண்ணா, தனியா சாப்பிடணுமோனு நினைச்சேன் நீங்க இருக்கீங்க அண்ணா.

டேய் நிவி இவங்க நித்திலா பைனான்ஸ் டிபார்ட்மென்ட்டோட புது ஜாய்னி.

நித்தி இது நிவி சாரி நிவேதன். என்னைய சகிச்சுக்கற வெகு சிலர்ல முக்கியமானவன் என் நண்பன்.

டேய் நிவி, இவங்க நித்திலா, பைனான்ஸ் டிபார்ட்மென்ட்டோட புது ஜாய்னி.

ஏங்க நித்திலா, ஆபீஸ் பாலிசி தெரியும்ல என்ன அண்ணானெல்லாம் கூப்பிடறீங்க.

சரி நான் உங்களை அண்ணா னு கூப்பிடல.

ரொம்ப நன்றி.

நிவி, “என்னடா பார்வை ஒரு மார்க்கமா இருக்கு.”

இல்ல எனக்கு ஒரு அப்பாவி நண்பன் இருந்தான் அவனை தான் தேடிட்டு இருக்கேன்.

நிவி, ” சும்மா கேட்டேன் டா அந்த பொண்ணு உடனே கோச்சுக்கும்னு எனக்கு எப்படி தெரியும்.”

மனு, “அப்போ இன்றைய நாள் வரலாற்றில் முக்கிய நாள். நீ ஒரு பொண்ணுகிட்ட சும்மா பேசி இருக்க.”

போடா டேய்.

……………………………………………………………………………………………………………………………………….

அடுத்த பக்கம்