தனிமை கதவின் தாழ் நீக்கவா(2)

என்னைய கல்யாணத்துக்கு ஒதுக்க வைக்க என் ஆபீஸ்ல ஷிப்ட் போட்டு பேசின அக்கறையான மக்கள்லாம் உண்டு . ஒரு குட்டி சாம்பிள் பாருங்க.

மனன்யா,“எனக்கு புரியுது நீங்க என் மேல இருக்க அக்கறைல தான் கேக்குறீங்க. நான் கல்யாணம் எதை எல்லாம் மாத்துமோ அது எல்லாம் பிரச்சனைன்னு சொல்லல.

இப்போ நானும் லத்திகாவும் தோணறப்போ வெளிய கிளம்பி போறோம். ஆபீஸ்ல கிளம்பற நேரத்துக்கு அப்படியே வெளிய போய் சாப்பிடறோம். எதுக்கும் முடிவெடுக்க டைம் எல்லாம் தேவையே படலை. இதெல்லாம் மாறும் அதனால கல்யாணம் வேணாம்னானு நான் நினைக்கல. என்னோட ஐடென்டிட்டிய மறந்திடனும். என் குடும்பம் என்னையும், நான் என் குடும்பத்தையும் யாரோவா பாக்கணும் இதான் எனக்கு செம்ம கடியா தோணுது கல்யாணத்தை பத்தி யோசிக்கறப்போ.

நினைக்கிற நேரத்துக்கு தூங்கி நினைக்கிற, முழிப்பு வரநேரத்துக்கு எந்திரிச்சுன்னு இருக்க முடியாது. இதெல்லாம் என் பிரச்சனை இல்ல.

எனக்கு தெரியும் வேலைல கூட அடுத்த லெவல் போறப்போ நாமா என்னலாம் புதுசா பண்ண வேண்டியிருக்கும் அப்போ வாழ்க்கையிலையும் அதெல்லாம் நடக்கும், அது ரொம்ப நியாயம் . ஆனா இருக்கறதை நாம விட்டுட்டு போகணும்னு சொல்ல முடியாதில்லை“.

ஜாய்ஸி, “என்னடா பன்றது நம்ம சொசைட்டி அப்படி தானே இருக்கு.“

மனன்யா , “ஜாய்ஸி, சொசைட்டி அப்படிங்கறதே நம்ம எல்லாரும் சேர்ந்து உருவாக்கறதுதான். அதுவா உருவாகி எப்படியோ இருக்க ஒன்னுத்துக்கும் உதவாத விஷயங்களை சொசைட்டி அப்படித்தான்னு ஏத்துகிட்டு போகணும்னு கண்டிப்பா இல்ல“.

பார்த்தீங்களா எப்படி நானே பக்கம் பக்கமா பேசறேன்ல. நானும் அந்த ஒரு நால எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எங்க வீட்ல இருந்து கூப்டு, மானவ் சார் கிட்ட பேசிப்பாக்க சொன்னாங்க .

மனன்யா , “ஹலோ, எங்க வீட்ல உங்க ப்ரொபைல் பாக்க சொன்னாங்க நிஜமாவே உங்களுக்கு தண்ணி, தம் பழக்கம்லாம் இல்லைனா , நாம மீட் பண்ணி பேசலாம்.“

ஓ பாக்கலாமே னு சொல்லிட்டு உங்க ஹாஸ்டல் எங்கன்னு கேட்டு அப்போ பெஸ்ஸி. உங்களுக்கு பக்கம் தானே ஸ்கேட் கிரௌண்ட் வந்துடறீங்களானும் கேட்டு.

என் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லி கிளப்பினேன். அவ அதுக்கு பேர் தான் ஒன்னு போல இருக்குன்னு பார்த்த என்ன சீனியர் பீச்சும் மேட்ச்சா இருக்குனு சொல்ல, ரசனைய விட எண்ணங்கள் முக்கியம்னு சும்மா அவளை கொழப்பிவிட்டு கிளம்பி போனேன்.

…………………………………………………………………………………………………………………………….

மானவ், “பீச் வாசல் வரை வந்துட்டு பீச்சுக்கு போகாம இருக்க முடியாது பீச்க்குள்ள போயி பேசலாமா.“

மனன்யா ,”ஓ பேசலாமே நானும் பீச்க்கு போயிட்டு தான் ரூம்க்கு போலாம்னு இருந்தேன்.”

மானவ்,“அப்போ உள்ள போயே பேசலாம். பீச் எப்பவும் எனக்கு ஒரு கம்ப்ளீட் பாசிட்டிவ் எனர்ஜி தான் குடுக்கும்.“

மனன்யா , “ஆமால இந்த உப்பு காத்து, இவளோ பெரிய கடல், விடாத அலை.”

மானவ், “வாழ்க்கை வெறுத்து போய் ஒருத்தன் தற்கொலை பண்ணிக்க வந்தா கூட மனசு மாத்தி அனுப்பிடும் இந்த இடம்னு தோணும் எனக்கெல்லாம்“.

கேட்டுட்டு இருந்த எனக்கு, நம்ம லத்திகா கூட பேசறதெல்லாம் பக்கத்துல எங்கயாச்சும் உக்காந்து கேட்டுட்டு இருந்த இருப்பானோன்னு இருந்தது.

அதுக்குள்ள என் பார்வையை பார்த்து சார்ரே என்ன ஒரு மாதிரி பாக்கறன்னு கேட்டாரு

இல்ல….. நான் இதே டயலாக் தான் என் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லுவேன் அதான் ஒரு அதிர்ச்சி.

மானவ், “ஓ அதான் நம்மள ஃபாலோவ் பண்ணி நம்ம டயலாக்லாம் கேட்ட போல பேசறானேன்னு பார்த்தியா.“

ஆமா அப்படி தான் யோசிச்சேன் போலனு நான் பார்த்துட்டு இருக்கும் போது தோடர்ந்து பேச ஆரம்பிச்சிட்டான் .

மானவ், “ஆனா நான் உன்ன இப்போ என் அப்பா போட்டோ அனுப்பினப்போ தான் பார்த்தேன். எங்கயோ பார்த்து இருக்கேன் போல இருந்தது. ஒரு வேலை ஒரே ஊரு ஒரே ட்ரெயின் அதனால எங்காச்சும் பார்த்து இருப்பேன் ஆனா நியாபகம் வரல எப்பவாச்சும் நியாபகம் வந்துடும் வந்ததும் சொல்றேன்.

போட்டோ பார்த்து எங்கயோ பார்த் தது போல இருக்குனு ரொம்ப வழக்கமான டயலாக் போல இருக்குல. ஆனா எனக்கு உன் கூட போன் பேசும்போது தான் நிஜமா நமக்கு நெறய சிமிளாரிட்டிஸ் இருக்கும்னு தோணிச்சு.

எனக்கு என்ன வேணுமோ அது சரின்னு தெரிஞ்சா நான் யோசிக்காம பேசுவேன். நீ என்கிட்ட, நிஜமாவே நீங்க தண்ணி அடிக்கிறது தம் அடிக்கிறது எல்லாம் பண்ண மாட்டீங்களானு கேட்டப்போ அப்படி தான் இருந்தது,. அப்படினா மீட் பண்ணலாம் இதெல்லாம் எனக்கு நெறய புடிச்சது. அப்போ பாக்கலாம்னு உன் கேள்விக்கு சுத்திட்டு வளைச்சு பதில் சொல்லிட்டேன்.

நேரடி பதில் எனக்கு ஸ்மோக்கிங் ட்ரிங்கிங் ஹாபிட் கிடையாது. என் நேரத்து மேல எனக்கு இருக்க ஆளுமையை குறைக்கற எதையும் நான் கூட வெச்சுக்கறது இல்ல. அப்படி தான் இதுல எல்லாம் இருந்து விலகி இருக்க தோணுது.

இந்த ஒரு என்ட்ரி லெவல்க்கு அப்பறம் என்னலாம் சொல்லணுமோ அதெல்லாமும் இப்படி நேராவே கேட்டினா பதில் சொல்ல எனக்கு ஈஸி.

நீங்க ஒரு ஃப்லொவ்ல பேசிட்டு இருந்தீங்க அப்படியே கன்டினியூ பண்ணுவீங்க. அடுத்து பேசலாம்னு வெயிட் பண்ணா உடனே என்னைய நோக்கி திருப்பிடீங்க.

மானவ், “நீ முதல்ல பேசிட்டா அப்பறம் நான் பேசறதை இன்னும் நல்லா கேக்கலாம்ல அதான் கேட்டேன் நானே நெறய பேசற போல இருக்க கூடாதில்ல அதான்“.

நான் பேசறதை நீங்க அப்படி தெளிவா கேக்க வேணாமா.

எனக்கு லிஸ்ட் போட்டு பேசறதுக்கு எதுவும் இல்ல கிட்ட தட்ட நான் ஒரு முடிவுல தான் இருக்கேன். அதனால நீ பேசறப்போ கேக்கறது தான் என் ஒரே வேலையா இருக்கும் அதான் நீயே பேசுனு சொல்றேன்

நான் எங்க இருந்து ஆரம்பிக்கனும்னு யோசிச்சாலே கல்யாணம்னாலே பாசிட்டிவ்வா தோணற விஷயம் எப்படினாலும் லைப்ல அடுத்த ஸ்டேஜ்.

கல்யாணம்னு யோசிச்சா நெறய நல்ல விஷயம் தோணனும்.

மண்டைகடி ப்ரொஜெக்ட்ஸ்லாம் பார்த்துட்டு புலம்ப ஆள் கொடூய இல்லாம வீடியோ கேம் விளையாண்டு தூங்கறதுக்கு பதிலா வந்ததும் என்ன பிரச்சனை என்னனு கேக்க ஒரு ஆள் இருப்பாங்க.

தீடீர்னு தனியா உக்காந்து வேலைய தவிர என்ன இருக்கு நம்ம டெய்லி வாழ்க்கையில என்ன இருக்குனு தனியா யோசிக்க வேணாம்.

வேலைக்குன்னு தனியா வந்த பிறகு இவளோ வருஷம் பழகிபோய் பல சுதந்திரங்களை குடுத்தாலும் எப்பவாச்சு தோணற என்ன வாழ்க்கை ரொம்ப காலியா இருக்குனு ஒரு வெறுமையை தர தனிமை எல்லாம் காணாம போய்டும் தான்.

ஆனா அதுக்காக இவளோ நாள் எனக்கு எல்லாமாவும் இருந்த நான் யாருக்கு எல்லாமாவும் இருந்தனோ அந்த குடும்பத்தை விட்டுட்டு வரணும் அப்படிங்கறது

ஒரு மாதிரி ஒரே ஷேப்ல இருக்குனு ஆரஞ்சு பழ சொலைக்கு நடுவுல பூண்டு வெச்ச மாதிரி இருக்கு.

அது தான் எனக்கு இந்த கல்யாணம்னா முதல நியாபகம் வருது.

அத இந்த சொசைட்டில ஏற்கனமே இருக்கறது தானேன்னு என்னால அப்படியே ஏத்துக்க முடியாது.

இதை தவிர எனக்கு மத்தபடி மேரேஜ் ஓகே பெரிய பிரச்சனை இல்ல.

ஹா ஹா ஆனாலும் ஓரளவுக்கு பிரச்சனை தான்னு சொல்ற.

வெரி குட். நானும் இதே போல தான் யோசிச்சு இருக்கேன். ஆனா நான் என் அம்மா அப்பாவை பார்த்துக்குவேன்னு உன் கிட்ட சொல்லி அதை உறுதிப்படுத்திக்கணும்னு நீ எப்படி நினைக்கலையோ அப்படிதான் எனக்கும்.

மத்தபடி நீ சொன்ன போல தான் கல்யாணம்னா நெறய ஆரஞ்சுசொலை ஃபீல் தான்.

ஆனா நீ இத மட்டும் தான் பேசுவன்னு நான் எதிர்பாக்கல.

நிஜமா அவ்ளோதானா.

உங்கள பார்த்தா வார்த்தைக்கு நடுவுலையும் கேக்கற லிஸனர் போல இருக்கு எதாவது எக்ஸ்ட்ரா கேட்டுச்சா.

இல்ல நீ சொன்னது போலவே சொல்றேன்னு நினைக்காத நீ பேசறது நெறய எனக்கு என்னைய பாக்கற போல இருக்கு.

என் குடும்பம் எப்பவும் என் குடும்பமாவே இருக்கும்னு நான் உன்கிட்ட சொல்ல வேண்டியது இருக்கலையோ அது போல தான் உனக்கும் இருந்து இருக்கனும்னு நினைக்கறேன், ஆனா நீயே சொன்ன போல திஸ் சமூகம் அப்படி இயங்கல, ஆனா நாம எல்லாரும் யோசிக்கிறதெல்லாம் சேர்த்துதான் சமூகம் மத்தபடி தனியா ஒன்னும் கிடையாது. நாம இப்படி யோசிப்போம் எனக்கு எதுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அதெல்லாம் உனக்கும் கிடைக்கணும், அதே போல வைஸ் வெர்ஸா . மத்தபடி நீயே சொன்னபோல இவளோ வருஷம் இருந்ததுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு லைப் ஸ்டைல். சிஸ்டம்ல ஒரு அப்டேட் பண்ணால பல குளறுபடி நடக்கும், லைப் அப்டேட்க்கும் அப்படி நெறய நடக்கும். ஒரே குறிக்கோளோடு இயங்கற ஒரு டீம் நாமன்னு எப்படியும் நம்ம கோல் நல்லதா இருக்கப்போ நல்லாத்தான் போகும்.

………………………………………………………………………………………………………………………………………………

“மேம் வி ஆர் கோயிங் டு லேண்ட்.”

நான் இப்போ போய்ட்டு என் கான்பிரான்ஸ் முடிச்சுட்டு வரேன். நீங்க எல்லாம் இன்னொரு பிளாஷ்பேக்க்கு ரெடி ஆகுங்க.

……………………………………………………………………………………………………………………………………………….

அடுத்த பக்கம்