தனிமை கதவின் தாழ் நீக்கவா

மனன்யா, “என்னை கல்யாணம் பண்ணும் போது என்ன சொன்ன நான் வேணாம்னு சொல்றதெல்லாம் என்னைய கட்டாயப்படுத்தி செய்ய வைக்க மாட்டேன்னு சொன்னியே“.

மானவ், “திருத்தம் உனக்கு புடிக்காதத பண்ண சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்னு தான் சொன்னேன். நீயே ஏத்துக்க முடியாத ரீசன் எல்லாம் சொல்லி தட்டிக்கழிக்கறதெல்லாம் ஒத்துக்குவேன்னு சொல்லல.“

மனன்யா, “நான் சொல்றதெல்லாம் உனக்கு நானே ஏத்துக்க முடியாத ரீசன் போலவா இருக்கு.“

மானவ், “ஆமா அப்படி தான் இருக்கு. நீயே சொல்லு என்னை பார்த்தா பசங்கள பார்த்துக்க முடியாத மோசமான அப்பா போல இருக்கா“ .

மனன்யா, “நான் சொல்லாதெல்லாம் ஏன் டா சொல்ற“.

மானவ், “நீதானே சொன்ன பசங்கள விட்டுட்டு எப்படி போவேன்னு அவளோ நாள் எப்படி விட்டுட்டு இருப்பேன்னு கேட்டேன்.”

மானவ், “அது உன் ஏரியா, உன் ப்ரெசென்டேஷன் அப்போ நீதான் போகணும். நான் என்னமோ மார்க்கெட்டிங் மீட்டிங்க்கு உன்னை போக சொன்ன போல ஃபீல் பண்ற. நீ சொன்னதுபடியே வரேன். நாமா கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பேசினோம். நம்ம ரிலேஷன்ஷிப்ல எல்லாமே மியூஷுவல்லா இருக்கணும்னு தானே பேசினோம். உனக்கு மட்டும் தனியா பசங்கள பார்த்துக்கற வாய்ப்பு கிடைக்கலாம் எனக்கு கிடைக்க கூடாதா .“

மனன்யா, “என்னது!!!!, டேய் நான் செம்ம குழப்பதுல இருக்கேன். ஆனாலும் சொல்லாம இருக்க முடியல. உன்னை பேச்சுல அடிச்சுக்கவே முடியாது awesome performance.

இப்போ என்ன உனக்கு குழப்பம். ரொம்ப சிம்பிள். இதுவே இது மார்க்கெட்டிங் கான்பெரன்ஸ்ஸா இருந்தா என்ன பண்ணுவோம். நான் கிளம்பி போவேன் நீ பசங்க கூட இருப்ப இப்போ கொஞ்சம் ரெவேர்ஸ். கொஞ்சம் சேன்சஸ் பண்ணனும் எப்பவும் நீ ஆபீஸ்ல இருந்து வர நேரத்துக்கு நான் வந்திடறேன்.இன்னும் கொஞ்சம் பெட்டர்ரா சமைக்க ட்ரை பன்றேன். மூனே நாள் தான். உன்னை போல 10 நாள் நீ இல்லாமலாம் சமாளிக்கறேன்னு நான் சொல்லல.

எப்படி எப்படியோ பேசி என்னைய கொண்டுவந்து ஃபிளைட் ஏத்திட்டு போய்ட்டான்ல. ஒரு பத்து வருஷம் முன்னாடி கல்யாணம்னா அதோட லைப் காலினு நம்பிட்டு இருந்த ஒரு ஆள் நான். என்னைய பார்த்த பர்ஸ்ட் நாளே பேசி பேசியே இதோ இப்போ சொன்ன உதாரணம் கேட்டீங்களா அது போல பேசியே, கல்யாணம் அவளோ கஷ்டம் இல்லன்னு நம்பி கல்யாணயத்துக்கு ஒத்துக்கவும் வெச்சிட்டான்.

……………………………………………………………………………………………………………………………………………………

அடுத்த பக்கம்