துளி தீ நீயாவாய் 9(4)

ப்ரவியுடனான முதல் சம்பவத்திலிருந்தே வேணிக்கு ப்ரவி மீது பயம் என்றாலும் வெகு ஆழ மரியாதையும் உண்டு. 17 வயதான இவளை பார்க்கும் ஆண்களின் பார்வையில் ஆசை, ப்ரமிப்பு, வக்ரம், இளக்காரம், அலட்சியம் என எதெல்லாமோ இவள் கண்டிருக்கிறாள். ஆனால் அறிமுகமே இல்லாத அவன், முதல் சந்திப்பிலிருந்து இப்போது வரை இவளை ஒரு சிறுமியாக மட்டுமே பார்த்து, தன் மாணவியை பேணும் கண்டிப்பான ஆசிரியையை போல மட்டுமே நடத்துகிறான் என்பது அப்படி ஒரு மரியாதையை உண்டு செய்திருந்தது.

இப்போதோ இந்த நிகழ்வில் இன்னுமாய் ஒரு அபிமானம் ப்ரவி மீது. கூடவே ‘பாவம் அவங்களுக்கு எதுவும் ப்ரச்சனையோ?’ என பவி மீதும் ப்ரவி மீதும் கரிசனையும் வருகிறது. ஆனால் அதைப் போய் பவியிடம் இவளால் எப்படி கேட்க முடியும்?

“அக்… மே… மேம் கூப்டீங்களா?” என்றபடி பவியிடம் போய் இணைந்து கொண்டாள் இவள்.

ன்றைய நாள் அடுத்து கடகடவென ஓடி இருந்தது வேணிக்கு. ப்ரவி அலுவகம் கிளம்பிச் செல்லவும் பவித்ராவும் வேணியுமாக பவியின் விளைநிலம் இருக்கும் திரவியம்பட்டி என்ற கிராமத்தின் கூட்டுறவு பண்ணை அலுவலகத்திற்கு சென்று வந்திருந்தனர். கூடவே இவளுக்கு தேவையான உடைகள் வாங்க என ஜவுளிக்கடை விஜயமும் நடந்திருந்தது. அதிலேயே பகல் முழுவதும் முடிந்து போக இரவு உணவை முடித்துக் கொண்டு வந்து தன் படுக்கையில் சாய்ந்த வேணிக்கு வெகுவாகவே களைப்பாக இருந்தது.

அரசிடமிருந்து எந்த ஒரு விவசாய உதவி/கடன் பெறுவதற்கும் ‘பத்துஒன்னு அடங்கல்’ என்ற அத்தாட்சி படிவத்தை அந்த விவசாய நிலம் சார்ந்திருக்கும் கிராமத்திற்கான கிராம அதிகாரியிடம் நில உரிமையாளார் பெற்றிருக்க வேண்டுமாம்.

அதற்காக அந்த கிராம அதிகாரி பவித்ராவை அந்த குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருக்க இவளை அழைத்துப் போயிருந்தாள் பவி. அந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் சிந்தித்துக் கொண்டு கிடந்தாள் இவள்.

முழு நேர விவாசயம் செய்ய அங்கு இப்போது மழையோ கிணற்று நீரோ தேவையான அளவு இல்லையாம், அதனால் கால்நடைப் பண்ணை போன்று வைப்பது லாபகரமாக இருக்குமாம். கூட்டுறவு கால்நடைப் பண்ணையான அங்கே தேவையான ஆலோசனைகள் மற்றும் கடன் உதவி கூட தருவார்களாம். பவித்ரா இதையும் அதையும் துருவத் துருவ இப்படி பல தகவல்கள் அவளிடம் பகிரப்பட, இவளும் அதை கேட்டபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது அது பற்றி தகவல் அடங்கிய சில குறிப்பு புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அதை வாங்கி பவி இவளுக்காக கொடுத்திருந்த கைப்பையில் வைத்திருந்தாள் இவள். அந்த நியாபகம் இப்போது வர,

இவளது மற்ற வலி வேதனைகள் எதுவும் மனதில் வந்துவிடக் கூடாதே என்பதற்காக மேலே குறிப்பிட்டவைகளை வலுக்கட்டாயமாக யோசித்தபடி படுத்திருந்தவள், அதே காரணத்துக்காக போய் அந்த பையை திறந்து அந்த குறிப்பு புத்தகத்தை எடுத்தாள்.

அந்த புத்தகத்தோடு இவள் கையில் வருகிறது இன்னொரு கடித உரை இதை இவள் வாங்கியது போல எந்த ஞாபகமுமில்லையே! பிரித்துப் பார்த்தாள். ஒரு கடிதம், கூடவே ஒரு புகைப்படமும் இருந்தது.

முதலில் இவள் புகைப்படத்தை எடுத்துப் பார்க்க, யாரோ ஒரு பெண்ணை இழுத்து அணைத்தபடி, அவள் காதில் தன் இதழால் கோலமிட முயன்றபடி ப்ரவி இருந்தான் அதில்.

தீ சுட்டது போல் தூக்கி வீசினாள் அதை “ஐயோ” என்ற அலறலோடு இவள்.

அடுத்த நொடிகளில் “வேணி!! என்னாச்சு வேணி?” என்றபடி இவளது அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 10

 

10 comments

 1. Sema mam….aana en neenga twist Oda stop panreenga….unga heroine brilliant kandippa anda photo lam namba matta…. waiting for next epi…seekiram kudunga…

 2. Vandhutennnnn! Pavi-Pravi a paka ododi vandha indha jeevana kadaisila kokki potu niruthiteengale…idhu adukkuma your Honour!!! 😪
  Pavi oru valiya thelinjuta, habaadaaa.. oru roadblock cleared!
  Abijith-Sindhi joint adichacha??? Semma semma! 🤩
  ‘En Aathukarar’ a.. idhena instant green signal? But idhuvum nama Jillupayanuku kulu kulunu irundhurukumla, pavam ensoy panatum 😂
  Unga heroes a pugazhndhu maazhala!!! Yenpa ivlo sweet a irukaanga???? My manasu kollai adichufied! ❤️
  Married life nra urimai irundha kuda Consent evlo important nu oru simple act la pachakunu catch panikura madhiri soliteenga.
  Society nama ena panalum, panalanalum vimarsanam panite dhan irukum. Nama mansatchikum aandavanukum nermaiya nadandhuta adhuve podhumenu soneengale– Rightly said ma’am🔥
  Veni a yen ma’am suthi suthi adikureenga??? Ava oru constant kelvi kuriyave irukale. Waiting for you to unravel the mysteries one by one. Pravi a noki adutha bullet paanjuruchu doi! Idha Pavi ponnu pakkuvama handle panumnu edhirparkuren. Fingers crossed ma’am 🤞

 3. Thool thool epi😀😀😀😀epad e epadi my attukarr😍😍😍😘😘😘😘😘jillluuu baby😘😘😘😘😘😘kandipa pravi apdi seya Matan.who s plotting against them😏😈 idiot goose…..pavi won’t trust that I am sureeee🤗🤗🤗thanks for the lovely update….next epiii seekrame venum😘ka

 4. Super sis , பவியின் குழப்பங்கள் தெளிந்து ப்ரவியிடம் காண்பித்த கோபம் நீங்கி; அன்பு ,பாசம் மேலோங்க அதை ப்ரவியும் அறிந்து கொள்வான் என்று பவியின் புரிதல் அதனால் அவளின் தவிப்பு.. then சிந்து – பவி நட்பு தோழியின் முகவாட்டம் கண்டு எதோ சரியில்லை என்று புரிந்து கொள்வதும் சரி செய்ய முயலும் அக்கறையும் 👏👏 அவள் தோழியிடம் கூட பவியை விட்டு கொடுக்காமல் பேசும் ப்ரவி; ஊர் என்ன சொல்லும் குழம்புவதும் யாரும் judge pannrathu பத்தி கவலை பட வேண்டாம் என்று Bible வாசகத்தை கண்டு மனக்குழப்பம் தெளிந்து இவளவன் என்று புரிதல் வருவதும் positive think பண்ணுவது super.அதை ப்ரவியிடம் தயக்கத்தோடு சொன்னாலும் ; உன்னை என்னைவிட நம்புறேன் தெளிவா சொல்லுது பொண்ணு wow! சிந்து தந்தையின் அதர்மத்தை வெறுக்கும் நேர்மை super. கடைசி twist பவி அதை நம்ப மாட்டாள்.ப்ரவி கண்ணியம் அவளுக்கு தெரியுமே..but yar ithai panra..avalai yar follow panra?

 5. Aha policekar pondatti manasula nala nangooram pottu ukarnthutar super.ipo enna puthu kulapam analum ithe pavi ponnu namba matanu thonuthu.enna pravi ya avaluku chinna vayasula irunthu theriyum avan ipidilam panna matanu.ithu enthe villain oda Vela.
  Unakum thamizhar thirunal nalvazhthukal pa.

 6. paviyin kuzhappangal, pravi yin samadhaanam ellame asathal. very apt wordings. pravi kku sindhu va love panna solli idea koduthu, stomach burning aana pavi, sindhu abijith love therinju eppadi muzhicu iruppa? ha. ha. ninaikkave sirppaa irukku.. photo vaithadhu phone party yin velaiyo.? eagerly waiting for next update.

  • Semma epi hei. Ana enna kutty ah mudinchiduchu.
   Pavi ottumothama thooki pravi thalaila pottachu. Very good.
   Veni ah veliya vara vekka ava pravi ah thappa ninaikanumnu alavuku avala assess panni vechu irukkarathu yaaru

Leave a Reply