துளி தீ நீயாவாய் 19(10)

இவள் இப்படி எண்ணெய் சட்டியில் தத்தளிக்கும் நிலையில் இருந்தபோதுதான் அறைக்குள் நுழைந்தான் ப்ரவி.

அந்த சந்தர்பத்தில் ஒருவன் கதவை தாழிடுவது எத்தனை இயல்பான ஒன்று, இங்கு அதற்கே ஒருத்தி கொலைவெறிக்கு போய்விட்டாள்.

இன்னுமே அவனுக்கு முதுகுகாட்டி நின்றவள், “என்ன நினச்சுகிட்டு இருக்க நீ?” என உறும,

ஏதோ இவன் மீது கோபத்தில் இருக்கிறாள் என்பதை இந்த நாளில் ஏற்கனவே புரிந்திருந்த ப்ரவி, அவன் இரண்டு வாரம் போல் இவளிடம் பேசவில்லை அல்லவா அதற்காக இருக்கும் என சின்ன அளவில் அதற்கு காரணம் யோசித்திருந்தவன்,

அவளை சமாதானப் படுத்தும் நினைவில் “உன்னதான் நினச்சுகிட்டு இருக்கேன், எல்லாத்தையும் பேசி இன்னைக்கு எப்படியும் என் பவிக்குட்டிய பழைய ஃபார்முக்கு கொண்டு வந்துடணும்னு நினச்சுருக்கேன், கூடவே இந்த ரெண்டு விரலாலையாவது உன் கன்னத்தை நிமிண்டி, அங்க சின்னதாவது ஒரு முத்தம் வச்சிடணும்னு நினச்சுகிட்டு இருக்கேன்” என்றான். மனதில் என்ன யோசித்திருந்தானோ அதை அப்படியே அவளிடம் சொல்லி வைத்தான்.

அவர்கள் உறவில் வந்திருக்கும் உரிமையில் திளைத்துக் கொண்டிருந்தவனுக்கு முதலிரவின் முதல் பேச்சு இதாய் இருப்பது தப்பாய் தோன்றவில்லை போலும், ஆனால் இங்கு பவியோ வெடித்துவிட்டாள்.

“துரோகி” இப்படித்தான் துவங்கினாள் அவள்.

“உன் அண்ணாவ நான் என் அப்பான்னு கூப்ட்டுருக்கனே, அப்பன்னா நீ எனக்கு யார்? நீ என்ன என்னதா நினச்சிருக்கணும்?” அடுத்த கேள்வியோ இப்படியாய். அதைக் கேட்கும் போதே அவளுக்கேத் தெரிகிறது அவள் மனதிற்கே இது ஒவ்வவில்லை, அவனை  தயாப்பா ஸ்தானத்திலெல்லாம் அவள் நினைத்ததும் இல்லை, இது அவனுக்கு வெகுவாக மனம் வலிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எறியப்படும் வார்த்தைகள் என. ஆனால் அதை நிறுத்தி வைக்கும் அளவு அவன் மீது இரக்கம்தான் வரவில்லை.

இப்படி ஒரு கேள்விக்குப் பின் ப்ரவி என்ன செய்வான்? உண்மையில் சுருண்டு போனான் அவன். அவன் மொத்த வாழ்க்கையில் இத்தனை அகோரமான நிலையில் அவன் இருந்ததே இல்லை என்றுவிடலாம். கோபத்தில் வந்து விழும் பொய் இதென யூகிக்க அவனிடம் என்ன வழி இருக்கிறது? இதை உண்மை என்றுதானே நம்புவான்.

“வளத்த கடனை அடைக்க வாய மூடிகிட்டு கல்யாணம் செய்துக்கலாம், ஆனா எதுக்காகவும் இந்த கண்றாவியெல்லாம் செய்ய முடியாது” இப்போது அவன் வாங்கிய கட்டிலுக்கு கிடைத்தது ஒரு உதை.

அடுத்து அதிலிருந்த பூக்களை அத்துப் போட்டுவிட்டு அதே கட்டிலில் குப்புற படுத்து ஒரு அழுகை.

அடுத்தென்ன தனிக்குடித்தனம் என நெல்லையில் அடுத்த மூன்றாம் நாள் அவர்களை குடியேற்றும் வரை இரவில் அவனிடம் தாட் பூட், பகலில் அனைவர் முன்னும் அமைதியின் சொரூபம் என்றானது பவியின் நடத்தை.

ப்ரவிக்கு அவள் தயாப்பா மேல் வந்த ஏமாற்றத்தைத்தான் இவனிடம் காய்கிறாள் எனப் புரிந்ததே வேணி முதன் முறை இவர்கள் வீட்டுக் கதவில் வந்து நிற்கும் போது பவி அவளிடம் இது எங்கள் வீடு எனத் துவங்கி இவனை தன் கணவனாக அவளிடம் காட்டிக் கொண்ட போதுதான்.

சொந்தக்காரர்கள் முன் பவி அப்படித்தான் அதுவரை நடந்து கொண்டிருந்தாள், ஆனால் அதெற்கெல்லாம் அப்போது வரை காரணம் அவளது தயாப்பா அங்கிருந்தார். ஆனால் இங்கு வேணியிடம் எதற்காம் என இவன் யோசிப்பான்தானே!

அதுவும் இவனை துரோகி என்ற அளவுக்கு சொல்லிவிட்டு, அடுத்தும் அவனை முன் பின் தெரியாதவரிடம் கூட துளி அளவும் விட்டுக் கொடுக்க முடியவில்லை அவளால் என்றால் அவளுக்கு பிரச்சனை இந்த திருமணமா அல்லது அது நடந்த விதமா என இவனுக்கு புரிய வரும்தானே!

அப்படி தொடங்கிய வாழ்க்கை, இப்போது இவன் மார் மீது முகம் வைத்து படுத்தபடி நமக்கு ஏன் ப்ரவி இப்படி ஆச்சு?” என கேட்கும் அளவிற்கு வந்திருக்கிறது.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 20

5 comments

 1. First firsttttuuu💃💃💃💃💃💃happy happie sweetheart ❤️
  Pavam pavi 🙄😏dayapa kuda pavam than…but pavi ninakra Pola enaikachum Karun pravi ta will he talk like this🤔
  Soooooo sad.

  All bcz of Malu and speaker la pota lusu anna😏😏

  One and half month wait akka.
  Thank you 😄😍💕♥️🤗

 2. Counting the days from April 18 for next update , ayyo rooommbbbbaaa long gap sissy ,But super update .Cho sweet pravi & pavi. Dhool karan…

 3. கிட்டத்தட்ட ப்ரவி, பவி கல்யாணம் இந்த மாதிரி தான் கெஸ் இருந்துது சிஸ். கருண் கல்யாணம் நின்னதுக்கு பவி காரணமா இருப்பா. அவளை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு ப்ரவிய கல்யாணம் செஞ்சு வச்சுருப்பாங்க. பவிய தயாகரன் போர்ஸ் பண்ணிருப்பார்ன்னு கெஸ் செய்து இருந்தேன். ஆனால் அவரோட தவறில் தான் இந்த கல்யாணமேன்னு படிக்கும் போது பவி உணர்வுகள் சரிதான்னு ஆயிடுச்சு. அதே சமயம் கோபத்தில் தான் நம்ம வார்த்தைகள் கவனத்தில் இருக்கணும் நு புரிய வச்ச எபிசொட். ஆனால் மொத்தத்தில் பாவம் ப்ரவிதான். கதையின் ஆரம்ப புள்ளிய தெளிவு படுத்திடீங்க. இப்போ அடுத்து என்ன?

Leave a Reply