துளித் தீ நீயாவாய் 5(6)

வழக்கம் போல் இவளை ஹாஸ்டலில் இருந்து அழைத்துச் செல்ல இவளது தயாப்பாத்தான் வந்திருந்தார். வழி நெடுக அவரிடம் ப்ரவியை கடித்து துப்பிக் கொண்டு இவள் வீடு வந்து சேர,

பின்ன வர முடியாதுன்னு ப்ரவி மட்டும் முதல்லயே சொல்லி இருந்தா ப்ளான் செய்து இவ கருணை கூட்டிகிட்டு ப்ரவியப் பார்க்க ஹைதரபாத் போயிருப்பாளே, இப்ப கடைசி நிமிஷத்தில் ப்ரவி வரலைனதும்தானே இந்த கருணும் வர மாட்டேன்றான்.

சற்று உர் என்ற முகத்தோடு கார் கதவை அடித்து மூடிவிட்டு அவளது வீட்டின் முகப்பு படிகளில் இவள் ஏற, ஆறு படிகள் இருக்கும் அந்த படிக்கட்டில் நான்காவது படியிலிருக்கும் போதே உள்ளே வரவேற்பறையின் வலப் பக்க தூணில் சாய்ந்தபடி நின்ற ப்ரவி கண்ணுக்குத் தெரிகிறான்.

இவளை முழுவதும் எதிர்பார்த்து கண்களில் சிறு குறும்போடு அவன்.

குமிழி குமிழியாய் உற்சாகம் அள்ளிப் பறக்க, தட தடவென அவனிடம் துள்ளலாய் ஓடியவள், போகிற போக்கில் பக்கவாட்டு மேஜையில் இருந்த ரூலரையும் எடுத்துக் கொண்டு ஓட,

“அடப் பாவி சர்ப்ரைஸ்ன்ற பேர்லதான் இப்படி என்ன ரெண்டு நாள புலம்பவிட்டியா? இருக்கு உனக்கு” சூளுரைத்தபடி முன்னேற,

வரும் விபரீதத்தை உணர்ந்த ப்ரவியோ அங்கிருந்த தூண்களைச் சுற்றி கோ கோ விளையாட,

“அட குத்துவிளக்கே, உனக்கு மட்டுமில்ல இது எனக்கும்தான் சர்ப்ரைஸ். இன்னும் ஒன் வீக் ஆகும்னு சொல்லிட்டு இருந்தாங்க, திடீர்னு இன்னைக்கு காலைல ரிலீவ் பண்ணிட்டாங்க” அவன் இவள் கையில் மாட்டாமல் விளையாட்டு காட்ட,

“தயாப்பா இவன் எனக்கு பட்டப் பேர் வைக்கான்” என குற்றப் பத்திரிக்கை வாசித்தபடி இவள் இப்போது இதற்காக துரத்திக் கொண்டிருந்தாள்.

அடுத்த அறைக்குள் சென்றிருந்த தயாளனிடம் இருந்து வருகிறது அவரது ட்ரேட் மார்க் ரிப்ளை “டேய் பொம்பிள பிள்ளைய போய் என்ன சொல்லிகிட்டு, நம்ம வீட்டு குத்துவிளக்கு அது”

இதில் ப்ரவி வாய் பொத்தி சிரிக்க,

ஒரு பக்கம் அவளுக்கே சிரிப்பு வந்தாலும் காத்து போன பலூன் போல் பவி முகம் சுருங்கிப் போக, “போங்க தயாப்பா” என அவள் சிணுங்கிக் கொள்ள,

அதே நேரம் அறையிலிருந்து இங்கு வந்த தயாளன் அவள் முகம் பார்க்கவும் “என்ன நான்தான் எதுவும் சொதப்பிட்டனா?” என நிலமையை புரிந்து கொண்டவர்,

“டேய் பிறந்த நாள்னுதான ஓடி வந்த, ஒரு டீரீட் கொடுறா நம்ம பவிகுட்டிக்கு” என வேறு விதமாய் சமாளிக்க முயல,

அதற்காகவே காத்திருந்தவன் போல் “ட்ரீட்தான செம்ம ப்ளான் இருக்கு, ஆனா அதுக்கு பெரிய தலைதான் ஒத்துக்கணும்” என ப்ரவி பிட் போட,

“நான் ஏன்டா ஒத்துக்காம போறேன்” என்றபடியே அவர் பவி முகத்தைப் பார்க்க, அதற்குள் அங்கு பத்து சூரியன் எட்டிப் பார்க்க,

“பவிய கூட்டிட்டு கருண போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன், அவனுக்கும் சர்ப்ரைஸ்” ப்ரவி இப்போது தன் திட்டத்தைச் சொல்ல,

“இதுக்கு ஏன்டா நான் வேண்டாம்ங்கேன், உங்க ரெண்டு பேருக்கும் லீவுதான போய்ட்டு வாங்க, பெங்களூரானுக்கும் நல்லா இருக்கும்” அவர் ஒத்துப் பாட,

“”ஆமா இப்படி திடுதிப்னா நாளைக்கு ஃப்ளைட்ல டிக்கெட் கிடைக்குமா?” அவர் சந்தேகம் கேட்க,

“அதுல என்ன சர்ப்ரைஸ் இருக்கு உங்க பவிக்குட்டிக்கு? நீங்க அவள கார், ட்ரெய்ன், ப்ளைட்ன்னு பொத்தி வச்சு வளக்கீங்களாம், பஸ்ல போறதுன்னா என்னதுன்னே தெரியாதாம் அவளுக்கு, புலம்பிட்டா போன டைம்,

எந்த டவுண் பஸ்ஸ பார்த்து எப்ப போதி மரம் தேடப்  போகுதோ நம்ம குத்துவிளக்கு” ப்ரவி சிரிக்க,

“டேய்ய்ய்ய்” என்றார் தயாளன்.

“அதுக்காக இங்க இருந்து டவுண் பஸ்லயேவா கூட்டிட்டுப் போகப் போற? நாலு நாள் ஆகிடாது அங்க போய் சேர?” ப்ரவி சொல்ல வருவது புரிந்து, அது முழு மனதாய் பிடிக்கவில்லை எனினும் பவியின் ஆசை எனவும் அவர்  கொஞ்சமாய் இறங்கி வர,

“அதெல்லாம் இங்க இருந்து சங்கரங்கோவில் வரைக்கும்தான் டவுண் பஸ், அடுத்து அங்க இருந்து கோவில்பட்டிக்கு ரூட் பஸ், கோவில் பட்டி டூ பெங்களூர் வொல்வோ, எல்லா பஸ்ஸையும் பார்த்தாப்ல இருக்கும்ல” ப்ரவி இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஐயோ ப்ரவி எப்படி நீ இவ்வளவு ஜில்லு பையனா இருக்க?” என பவி குதுகலிக்க,

அடுத்து தயாளன் எங்கு மறுத்துச் சொல்ல,

“டிக்கெட்” என அவர் துவங்கும் போதே

“எல்லாம் ரெடி, வர்ற வழிலே புக் பண்ணிட்டு வந்துட்டேன், இன்னும் ரெண்டு மணி நேரத்துல நீ ரெடின்னா நாம கிளம்பிடலாம் பவிமா” என முடித்துவிட்டான் ப்ரவி.

“இப்பதான் பிள்ளய மதுரைல இருந்து கூட்டிட்டு வந்து இறக்கிருக்கேன், வந்ததும் கூட்டிட்டுப் போறேன்ற” என முனங்கிக் கொண்டாலும், தயாளனும் எதுவும் தடுக்கவில்லை.

“ஆமா அவனும்தான் ஹைதரபாத்ல இருந்து ட்ராவல் பண்ணி வந்திருக்கான், அதை யோசிக்கீங்களா தயாப்பா நீங்க?” என இப்பொது குறுக்கே புகுந்த பவி,

“உனக்கு கஷ்டமா இல்லையா ப்ரவி? ட்ரெய்னிங்க் வேற பின்னி கழட்டிட்டாங்கன்னு சொல்வ? நாம வேணா இன்னொரு நாள் இந்த பஸ் ப்ளான வச்சுப்போமே” என தனக்காய் வந்து நிற்பவன் மீது கரிசனைப் பட,

“அதெல்லாம் இந்த ட்ரிப் எனக்கும் ஜாலியாத்தான் இருக்கும்” என்றுவிட்டு ப்ரவி அகல முனைய,

“ஆனாலும் ப்ரவி நீ ரொம்ப நல்ல நல்லவன்டா, இது மட்டும் அந்த கருண் எருமையா இருக்கட்டும் கதையே வேறயா இருக்கும்” என வாயைவிட்டது இவள்தான்.

“ஏன்டாமா அப்படிச் சொல்ற?” என இங்கு விசாரித்தது இவளது தயாப்பா.

“அது தயாப்பா முதல்ல நான் ரூலர தூக்கினதுக்கே என் கைய பிடிச்சு வச்சுகிட்டு, வலிக்குதுடா விடுறா விடுறான்னு என்னை ஐஞ்சு நிமிஷமாவது கெஞ்சி கதற விட்ருப்பான் அந்த எரும,

ஆனா நம்ம போலீஸ்காரர பாருங்க ஓடிகிட்டே விளக்கம் சொல்லுது” என்றபடி பவி தன் கையிலிருந்த ரூலரை போய் அதனிடத்தில் வைத்தவள்,

“பவி டயர்டா இருப்பான்னு நீங்க சொன்னதுக்கு, அப்ப எனக்கு மட்டும் டயர்டா இருக்காதா? எப்பனாலும் அவளுக்கு மட்டும்தான் இந்த வீட்ல செல்லம், பொம்பிள பிள்ளனா ரெண்டு கொம்பா?

நாடே பெண் சுதந்திரம்னுதான் பேசிகிட்டு இருக்கு, இந்த ஆண் சுதந்திரம், விடுதலை பத்திலாம் யாருக்காச்சும் தெரியுதா அப்படின்னு விவேக் வாய்ஸ்ல ஒரு அலப்பறை செய்துருப்பான்தான அவன், உங்களுக்கே தெரியுமே” என தயாளனிடம் கருண் போலவே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் காட்டியவள்,

“அதுவும் கடைசியில நான் சொன்னனே உனக்கு கஷ்டமா இல்லையா ப்ரவின்னு, அப்படி மட்டும் கருண்ட்ட கேட்டனோ, உனக்காக நான் எவ்வளவு தியாகமெல்லாம் பண்ணி இங்க வந்துருக்கேன் தெரியுமா,

அதுவும் பெரிய தலைட்ட பெர்மிஷன் வாங்குறதுன்னா சும்மாவா, அதனால இனிமே இருந்து என்னை மரியாதையா அத்தான்னு கூப்டு நீன்னு ஒரு சீன் போடுவான் பாருங்க, சகிக்காது” என முடிக்க,

“ஏன்டா பவிமா அவன்தான் அவ்வளவு ஆசைப்படுறானே அதுக்காகவாவது அத்தான்னு கூப்டுட்டுப் போய்டேன்” என இப்போது தயாளன் அந்த விஷயத்துக்குப் போக,

“ஐய, அவனையா? தப்பித் தவறி இந்த ப்ரவியவாவது சொன்னாலும் சொல்லிப்பேன், அவன நெவர்” என பவி சிலுப்பிக் கொள்ள,

தயாளனிடமிருந்து ஒரு அர்த்தமான “ஏன்?” வந்தது இப்போது.

அப்போதுதான் யோசித்தவளாய் புதிதாய் பிறந்த சுய புரிதலுடன் “ப்ரவியதான் எப்பவும் கொஞ்சம் மூத்தவங்க, நாம அவங்களவிட சின்ன பொண்ணுனு தோணும் தயாப்பா, ஆனா கருண என்னவிட பெரிய பையன்னே தோண மாட்டேங்குது, அவன் எனக்கு எப்பவும் ஈக்வல்” என சொல்லியவள்,

அதோடு “இப்படில்லாம் சொல்றேன்னு கருண் எருமைக்கு என் மேல பாசம் கம்மின்னு நினைக்கேன்னுல்லாம் நினச்சு குழப்பிக்காதீங்க தயாப்பா, நான் சொல்றது அவங்க ரெண்டு பேரும் பழகுற விதத்த மட்டும்தான்.

சும்மா பேச்சு வாக்கில கம்பேர் பண்ணா இப்படி சீரியஸா ஆக்கிடீங்களே தயாப்பா” என சற்று புலம்பலாய் சொல்லிக் கொண்டே உள் அறை வாசலை நோக்கி நகர்ந்தவள்,

ப்ரவியை கடக்கும் போது யாரும் எதிர்பாரா சமயம், “என்ன இருந்தாலும் ரெண்டு நாள் என்ன புலம்பவிட்டுட்டல்ல” என ஒரு குத்து அவனது police trained புஜத்தில்.

என்ன டேக்டிக்கா குத்தி என்ன, “போடா கை வலிக்குது உன்னால” என இவள்தான் உதறிக் கொள்ள வேண்டி இருந்தது.

அடுத்த பக்கம்

 

6 comments

 1. Lovely epi kutty pappa thoongura payana elupi keta parunga oru vilakam chance ila athavida athuku kavin kudutha explanation ha ha .

 2. Super ponga!! Kuthuvilaku ku ennama paanju paanju Pravi goal poduraru😂
  He is being too sweet and understanding, just like every one of your male leads.
  ‘singathuku seepu vachu seevi viduradhuku samam’– paaaaahh, chancey ila. Epdi dhan unga brain ipdi amsamana dialogues a asarama produce panudho 🔥
  So, elame close a irundhurukanga. Aanalum yen ipo muttal modhal? Karan-Pravi twins nu theriyum but identical twins a? Sorry, maybe i missed it in your narration.
  Karan oda marriage la edho kolapam vandhuruchu, adhuku Pavi ponnu reasono? Pravi-Pavi oda convos elame semma viru-viru! But Pavi-Karan oda convos la edho oru idhamana feel iruku, despite all the digs that they take at eachother. Vanjanai ilama vaarinalum, orutharuku onu na varinju katitu sandaiku nikura aalunga nu thonudhu. Love their characterisations🤩
  Bus la poi paka imbutttuuu aasaiya? Jab we met episode repeat a apo? 😉
  Waiting for the rest of the episode.

 3. ரொம்ப ஜாலி அப்டேட் சிஸ்.. சிங்கத்துக்கு சீவி விட்டது, போலீஸ்கார்க்கு பாடி கார்ட் குத்து விளக்கு.. எல்லாம் செம … ப்ரவி, கருண் , பவி மூணு பேருக்குள்ளே அந்த பாண்டிங் ரொம்ப அழகு.. நடுராத்திரி ரெண்டரை மணிக்கு எழுப்பி அது வருமா, வராதா, வராமா போயிட்டா என்ன பண்றது , வரதும் பிடிக்கலையே.. .. எப்பேர்பட்ட கேள்விகள். கருணா . உனக்கு எருமை பொறுமை.. அதனால் தான் இப்படி ஒரு ஜீவனை உன்னால் மேய்க்க முடியுது.. அடுத்த தொடர்ச்சியும் படிக்கப் போறேன்.. சிஸ்.

Leave a Reply