துளித் தீ நீயாவாய் 5 (2)

‘ஓ, அதாலதான் ப்ரவி அங்கயே படுத்துருக்கானா? மார்பிள் ஃப்ளோர்ல வெறும் தரையில் யாரால படுக்க முடியும்? இது தெரியாம என்னெல்லாம் யோசிச்சுட்டேன் ப்ரவியப் பத்தி’ என மூச்சுவிட்டு இறங்கியது இவள் இதயம்.

சற்று நேரம் நின்று யோசித்துப் பார்த்தால் உண்மையில் இவள் அறைக்குள் வந்திருப்பதே ப்ரவிக்குத் தெரியுமா என்றும் சந்தேகம் வருகிறது, அவன்தான் இவள் புறம் திரும்பவும் இல்லை அசையவும் இல்லையே!

கூடவே ‘ஐயோ இப்படி நான்  நின்னுகிட்டு இருக்றத பார்த்தா அவன் பாட்டுக்கு எந்திரிச்சு ஹால் சோஃபாவுக்கு போய்ட்டான்னா என்ன செய்ய?’ என்று குபுகுபுத்து கிளம்புகிறது பீதி.

‘அப்றம் அவனுக்கு பார்டிகார்ட் வேலை எப்படி செய்றதாம்?’ பய பாம் ஒன்று இவள் பால் மனதில் வெட்டி வெடிக்க,

அதே நேரம் ப்ரவி வேறு படுக்கையில் சற்றாய் அசைய,

அவ்வளவுதான் ஓடாத குறையாய் போய் படுக்கையின் அடுத்த ஓரத்தில் சுருண்டு கொண்டாள் இவள். அவன் எந்திரிச்சுட்டான்னா கூட இங்கயே படு ப்ரவின்னு எப்படி கேட்க?

இவள் முதுகுக்கு முதுகு காட்டி படுத்திருந்த ப்ரவிக்கு உள்ளுக்குள் சிரிப்பு அள்ளிக் கொண்டுதான் வருகிறது.

பவிப் பாவை உள்ள வர்றப்பவே ப்ரவி ஒன்னு தெளிவா முடிவு செய்திருந்தான் ‘இன்னைக்கு மட்டும் நீ தரைக்குப் போனியோ மவனே இன்னும் சில பல காலத்துக்கு உனக்கு தரைதான் சாஸ்வதம்’ என்பதுதான் அது.

அதனால் அசையாமல் படுத்திருந்தவனுக்கு இப்படி ஒரு பழம் நழுவி பாலில் விழும் மொமன்ட்.

அவள் இங்கு வந்து படுத்ததே இவனுக்கு போதுமானதாய் இருக்க, அதற்கு மேல் அவள் சின்னதாய் கூட தவித்துவிடக் கூடாதென அவள் புறம் திரும்பவே இல்லை அவன்.

பவியோ நொடி நேர சிந்தனையில் வந்து படுத்துவிட்டாலே ஒழிய, எப்படி உணர்கிறேன் என்றே புரியாத உட்ச பட்ச உதறல் நிலையில் இருந்தாள் சில பல நிமிடங்கள்.

ஆனால் சின்னதாய் கூட எதுவுமே அவள் செயலுக்கு எதிர்வினை இல்லை என்ற போது மெல்ல மெல்லமாய் ஓரளவு இறங்கி வந்தது அவள் மனோ நிலை.

அவளறிந்த ப்ரவிதான். ஆனாலும் அவனோடு ஒரே படுக்கையில் என்பது அவள் பெண்மைக்குள் இயல்பு நிலையை வர விடாமல் ஒரு படபடப்பை மட்டுமாய் மிச்சமாய் நிறுத்தி வைத்திருக்கிறது.

அதோடு எப்போதும் அவளுக்கு படுக்க இரண்டு தலையணைகள் வேண்டும், ஒன்று தலைக்கு மற்றொன்று குட்டியாய் குஷன் போல அவள் கைபோட.

இங்கு இரண்டே தலையணைகள் அதில் ஒன்றில் ப்ரவி படுத்திருக்க, இவளுக்கு இல்லாமல் போன குஷன் வேறு இன்னும் அசௌகரியத்தை கூட்டுகிறது.

இதில் எத்தனை நேரம் அசையாமல் படுத்திருக்க?

இதில் இப்போது எழுந்து போன ப்ரவி வாட்ரோபை திறந்து எதையோ எடுத்து வந்து இவள் முகம் அருகில் வைத்தான்.

அது என்னவென்று பார்வைக்கு புரியவும் சரேலென தாக்கிய தித்திப்பான ஒரு ஸ்தம்பிப்பில் அவள்.

அவளை மீறி ஆவலாய் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் முகத்திலும் நட்புத் தூரிகைகளின் வசந்த நிற கைவண்ணங்கள், நேர்மைப் பார்வைகள், கசியும் மனோகரம், இவளொத்த இலகுத்துவம்.

திருமணத்திற்கு முந்திய அவனாய் அவன்.

அதுவரை அவன் அருகாமையில் உணர்ந்த எல்லா படபடப்பு அசௌகரியம் எல்லாம் சட்டென மறந்து போனது பவிக்கு.

தளிர்த்து வரும் நொடிகளில் ஏனோ ஆளுயர விடுதலை பூக்கள் வட்ட வட்டமாய் அவள் மனவெளிகளில் மிச்சமின்றி மலர்கின்றன.

இவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ சிறு தலையசைப்போடு சென்று அவன் இடத்தில் முன்பு போலவே படுத்துக் கொண்டான் ப்ரவி.

அவன் தந்திருந்த அந்த மென் பஞ்சு பொம்மையின் மீது சென்று நிற்கிறது இவளது பார்வை.

பிங்க் நிற காட்டன் ஃப்ராக்கும், தங்க நிற நீள ரெட்டை சடையுமாய் நீள நீள கால் கைகளோடு பஞ்சு பஞ்சென சிறுமி உருவ பொம்மை அது.

முன்பு ப்ரவியோடு இந்த பொம்மையை தேடி அலைந்த அந்த பெங்களூர் பயணம் இவள் நினைவில் விரிகின்றது அதன் மந்தகாசம் மாறாமல்.

குஷன் மீது கை போடுவது போல் இந்த பொம்மையின் மீது கை போட்டுக் கொண்டு அந்தப் பயண நியாபகங்களில் மூழ்கியவளுக்கு மனம் எங்கும் ஒரு மருத சாரல்!

‘அப்ப ஆசைப்பட்டத இப்ப வரைக்கும் ஞாபகம் வச்சு வாங்கி வந்துருக்கான்’ இந்த வகை நினைவிலும்

‘எப்பவும் அவன் அப்படித்தானே அவ கேட்டு அவன் எதையாவது இல்லைனு சொல்லிருக்கானா என்ன?’ என்று வந்த நிறைவிலும்,

மெல்லமாய் அவன் புறம் இவள் திரும்பிப் படுக்க, இவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவன் கழுத்தில் பின் பக்கமாய் வந்து விழுந்திருந்த அவன் சங்கிலியின் பென்டென்ட் தெரிகிறது.

P என மட்டும்தான் முன்பு அணிந்திருப்பான். இப்போது அதனோடு இன்னொரு குட்டி P. இவளுக்கானது போலும். என்னமோ பெரிய Pன் பாதுகாப்புக்குள் அந்த குட்டி இருப்பது போல் மிகச் சின்னதாய் க்யூட்டாய்…

சட்டென இவள் மனதில் உதிக்கிறது ஒரு மின்னல்,

அடுத்த பக்கம்