துளித் தீ நீயாவாய் 5 (10)

பவியைவிட இவனுக்கு எந்தப் பெண்ணையாவது அதிகம் புரியுமா? பவி அளவுக்கு எந்தப் பெண்ணாவது இவனை நம்பக் கூடுமா?

அக்கறை அன்பு பாசம் எல்லாம் வேறு ஒரு பெண்ணால் பவி அளவு இவனுக்கு கொடுக்க முடியுமாய் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு பெண்ணைத்தான் கண்டு பிடிப்போம் என்று என்ன நிச்சயம்?

பவியை தூக்கி முன் பின் தெரியாத யாரோ ஒருவர் கையில் இவனால் கொடுத்து அனுப்ப முடியுமா?

இப்படி எதெல்லாமோ உள்ளே ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க,

இவள்தான் இவனுக்கானவளா என்ற ஒன்று சின்னதும் வண்ணமுமாய் பளீர் பளீர் என மின் கம்பிக் கோடுகளை தீண்டாமல் தீட்டி தீட்டி தித்திக்க தித்திக்க இழுக்கின்றது அவனாகிய அவன் அகம் புறம் எல்லாம்.

அதேநேரம் அங்கு பெரியம்மா ”எய்யா அப்படின்னா நம்ம கருணனுக்காவது…” என இழுக்க,

“இல்ல பெரியம்மா, வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் முடிக்க முன்ன பையன் கல்யாணத்த பேச எனக்கு மனசில்ல, எதுனாலும் பவி கல்யாணத்துக்கு அப்றம்தான்.

நான்தான் பவிக்கு ப்ரவிய பார்க்கணும்னு சொல்லிட்டு இருக்கனே தவிர, இதுல பிள்ளைங்க மனசு என்னதா இருக்கும்னு எல்லாம் எனக்கு தெரியாது.

பவி படிப்பு முடிஞ்சு அடுத்து இதெல்லாம் ரெண்டு பேர்ட்டயும் பேசி அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சா செய்து வைப்பேன், இல்லனா வெளிய இடம் பார்த்து பவிய செட்டில் செய்துட்டுதான் பசங்க கல்யாண விஷயத்த கைல எடுப்பேன்,

இதுல மணி மாமா மகள அது வரைக்கும் காத்துட்டு இருன்னு சொல்றது நியாயம் இல்ல, அந்தப்பொண்ணுக்கு நல்லதா நாமளே வரன் பார்ப்போம்” என தயாளன் முடிக்க

“உன் இஷ்டம்யா” என அந்த பேச்சை முடித்து அடுத்து எதோ பேசத் துவங்கினார் பெரியம்மா.

ப்ரவி இன்னும் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறான்.

மனமும் நினைவும் பணி புரிந்து கொண்டிருக்கும் சுழல் வேகத்திற்கும்,

சரீரமெங்கும் சாய்ந்தாட வரவா என்ற சதிரன்ன சர்க்கரை உணர்வை ‘உறுதியாய் தெரியாத ஒன்றில் ஆனந்திக்க அவசியமில்லை’ என்று அவன் தடை போட முனைந்த காரியத்திற்கும், அவன் அப்படி நின்றிருக்க,

அதே நேரம் நடந்த எதுவும் தெரியாமல் உள் அறையிலிருந்து உடை மாற்றி ப்ரவி இருந்த இடத்துக்கு வந்த பவி,

ஒரு வித தங்க மஞ்சள் நிற சல்வாரும் காப்பர் சல்பேட் ப்ளூவில் அதற்கு துப்பட்டாவுமான அவளணிந்திருந்த உடையை ஒரு சுற்று சுற்றி ப்ரவிக்கு காட்ட, அது அவன் ஹைதராபாத்தில் இருந்து வாங்கி அனுப்பி இருந்த உடை என்பதெல்லாம் இவனிருக்கும் இந்த நிலையில் ஞாபகம் இருக்கிறதாமா என்ன?

இவன் முன் வந்து அவள் சின்னதாய் தலையை அங்கும் இங்குமாய் அசைத்து காமிக்க,

இவன் எப்போதும் பார்த்து வளர்ந்த பவிதான், இப்போதும் அவள் முழு மொத்தமாய் மாறி தெரிகிறாள் என்று இல்லை, இருந்தாலும் சரம் சரமாய் அவளுக்குள் புதிதாய் எதோ இவன் மனதுக்கு.

என்றும் இவன் அறிந்த பவியாயும் சன்ன சலங்கை ஒலியாகவும் அவளேதான் இவன் மனதுக்குள் மாறி மாறி குத்தி நெய்ய,

இறுக்கி இழுத்து இதயத்துக்கு தாழ் போட்டான் இவன். இப்படி நொடி நேரத்தில் முடிவு செய்து கொள்ளும் காரியமும் கிடையாது இது. அதோடு இவன் மட்டுமாய் முடிவெடுக்கும் விஷயமும் கிடையாது.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதைக்கு முடிவெடுக்க வேண்டிய செய்தியே கிடையாது இது.

அதுவரைக்கும் ஒரு வித கூர்மையாய் பின் தீவிரமாய் இவன் முகத்தையே பார்த்திருந்த பவியோ மூக்கு சுருக்கி முகம் சுண்டி “போ நீ” என்றவள்,

பின்ன அவன் வாங்கி அனுப்பி இருந்த சல்வார் கம்மல் என எல்லாம் போட்டு வந்து காண்பித்தால் அவனுக்கு அது அடையாளம் கூட தெரியவில்லை என்றால் இவன் என்னத கவனிச்சு வாங்கி அனுப்பினான்னு இருக்குதுல.

பின் ஏதோ புரிந்தவளாய் “எதுவும் ரொம்ப முக்கியமான விஷயமா ப்ரவி? அந்த அத்தை எதையும் இழுத்து வைக்குதா?” என்றவள்,

“இல்லனா ஆஃபீஸ்ல எதுவும் இஷ்யூவா? ஒரு வேளை ரொம்ப டயர்டா இருக்கியா? இப்ப ஸ்ட்ரெய்ன் செய்துக்க வேண்டாம்னு சொன்னா கேட்கியா நீ?” என அதட்டல் தொனி நோக்கி அக்கறையில் போக,

“ஏய் வாலு போய் முதல்ல கிளம்பு, நான் இதோ இப்ப வந்துடுவேன்” என பேச்சை முடித்துவிட்டு தன் அறைக்குப் போனான் இவன்.

இன்று பாளையம்கோட்டையில்…

காலையில் பவித்ராவுக்கு திக்கி திக்கி விழுப்பு வரும் போது மெல்லத்தான் புரிகிறது தன்னை தோளோடு மெல்லியமாய் தட்டி யாரோ எழுப்ப முயன்றி கொண்டிருக்கிறார்கள் என.

அது புரியவும் திடுதிப்பென இவள் எழுந்து உட்கார,

“ஹேய் மெல்ல மெல்ல” என சமனப் படுத்தினான் ப்ரவி.

அவன்தான் தன்னை எழுப்பியதும், அவன் அறையில்தான் தான் தூங்கி இருக்கிறேன் எனவும் இவளுக்கு நியாபகம் வந்து கொண்டிருந்த நேரத்தில்

“சாரிமா நான் ஆஃபீஸ் கிளம்பியே ஆகணும் லேட் ஆகுது” என இவளை எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்ட ப்ரவி

“வீட்டுக்கு மெயிட் கேட்டிருந்தேன் வந்திருக்காங்க, வேலை எப்படி செய்றாங்கன்னு பாரு, உனக்கு திருப்தியா இருந்தா கன்டின்யூ செய்வோம்,

அடுத்து வேணி விஷயம், உன்ட்ட பேசணும், ஃப்ரீயா இருக்கப்ப கால் பண்ணு, இல்லனா நைட் கூட பேசிப்போம்” என்றுவிட்டு  போய்விட்டான்.

நேரத்தை பார்த்தால் ஏற்கனவே மணி பத்தை தாண்டி இருக்க, வீட்டு வேலை செய்யும் பெண்ணை போய் சமையலறையில் சற்றாய் கவனித்துவிட்டு அடுத்து இவள் குளித்து கிளம்பி வேணியோடு சேர்ந்து காலை உணவையும் முடித்துக் கொண்டு,

வேணியும் இவளுமாய் வீட்டிலிருக்கும் பலகாரங்களை பக்கத்தில் கொடுக்க ஆயத்தமான நேரம், இவர்களது வீட்டிற்கு வந்தான் அவன்.

அந்த கனி அண்ணாச்சி என அழைக்கப்படும் பால்கனி.

வேஷ்டி சட்டை. நுனியில் மட்டும் முறுக்கி விட்டிருந்த மீசை, தலைக்கு மேல் கை கூப்பி போடும் கும்பிடு. பின் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருப்பானாய் இருக்கும். ப்ரவியைவிடவுமே சற்று மூத்தவனாய் இருக்க வேண்டும்.

“அண்ணி நல்லா இருக்கீங்களா? பார்த்தே ரொம்ப காலமாச்சு, சின்ன வயசுல ஊர் பக்கம் வந்தப்ப பார்த்தது” என்றபடி உள்ளே வந்தான் அவன்.

அவனுக்கு பின்னால் இவனுக்கு கைத்தடி போலும் வீட்டுக்குள் வந்தார் இன்னொரு நபர். சாந்து சட்டி சைஸில் ஒரு தாம்பாளத்தை கையில் வைத்தபடி வந்திருந்தார். அதில்  சில வகைப் பழங்கள் வெத்தலை பாக்கு பூ என எல்லாம்.

வந்து அந்த தாம்பளத்தை வரவேற்பறையின் நடுவில் இருந்த டீ பாயில் அவர் வைக்க,

பெண் கேட்க வந்திருக்கும் அத்தனை தோரணையும் பொருந்தி நிற்க,

அந்த பால்கனியின் கண்களோ இந்த களபரத்தில் பவிக்கு அருகில் வந்து பாடிகார்ட் போல் விரைத்துக் கொண்டு நின்றிருந்த வேணியின் மேல் சென்று மொய்க்கிறது.

தொடரும்

துளி தீ நீயாவாய் 6

6 comments

 1. Nan first Pota cmnt load eh agala🙄😓 me only first ka..🤣😃sema sema episode….jute vituteenga…. awesome…the bond between Karun and pavi…ayooo avalo cute and sweet….Avaloo love…😍💕😊pravi inum neraya performance pananim😁😍analaum praviyoda care love lam softtt and sweet..such a caring jillluuu payan😁😍♥️♥️family bond lam semaya iruntha hu……ka….susithra enga is she not alive….ila…ipo Dayalan ku Vera Kalyanam Aki avanga yarna pavi ya hurt panangalooo..Ilana en Dayalan veetuku vara pora Mudhal ponnu nu alliance visayathula solanum….🙄epadiyo kudimbathai nala vacha saridhan ka..Jilu payan pravi kaha avala waiting…tamil avalo Azhagu..💕.kuthuvilaku than mass 💕♥️🤗hugs and kisses

 2. Super ud.aha pavi kovapadura mathiri namma policekar onnum chinna vayasula irunthu love pannala inthe kuthuvizhaku madam than thappa ninachitu irukangala.

 3. Semma vera level update. Athuvum paviya appadiye thooki innoruthanuku kuduthuda mudiuma ivanal. Pala varusam kalichu eppovo padicha ithe line ah ippo santhosama padikarenu avalo eee mode la iruken. Adei pavi rascal ivanachum unnaiya kalyanam panninane late panna manu naan santhoshathula iruken nee love vara koodathu varalana enna pantrathunu arachi ellam pannittu iruka.
  Yaar intha palkani mottamadi nu enna name ithu. Ivan second hero nu enaku thonalaiye. BTW Heroine twins hero twins rendukum kathai ezhuthitenga superu

 4. டீ போட சொன்னா.. டீதூள தரையில் போடற ஆளு.. செம ரைமிங் சிஸ். தயாளன் சொல்லும் விஷயங்கள் சரியாகத் தான் இருக்கிறது. போலீஸ்கார்க்கு பல்பு எரிய ஆரம்பிச்சு இருக்கு. ஆனால் பவியோ அது வருமா, வராதன்னு இன்னும் குழப்பத்திலேயே இருக்கா? வேணிக்கும் அந்த கனிக்கும் என்ன சம்பந்தம்? செகண்ட் ஹீரோ கருணா இருப்பானொன்னு நினைச்சேன்.. ஆனாலும் ப்ரவிய மட்டும் குறி வைக்கும் அந்த ஆளின் நோக்கம் ப்ரவியா? பவியா?

 5. So Dhaya appa koluthi potadhu Pravi manasula kolundhu vitu eriya, Pavi manasula kinjithum spark kuda agala pola. Idhunala dhan kolapama???!
  Pravi manasula adikura kaathu, andha realisation elame pakka!
  Kani dhan Veni ku jodi o?
  Apo nama annaatha Karun nra jaadi ku etha moodi, sorry jodi yaru??
  Kani ponnu paka vandhurukana? Ivan nalavana ilana ketavananu ganika mudiyalaye… That saandhu satti reference, semma 😂

Leave a Reply