துளித் தீ நீயாவாய் 22 (2)

“க்ஹும்” என ஒரு சிணுங்கலோடு அவனுக்குள் இன்னுமாய் புதைந்தவள் “ஆனாலும் பயமா இருக்கு ப்ரவி, நான் நல்ல டாக்டரா பார்த்து எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு, ப்ராப்பரா ப்ளான் செய்து ஒழுங்கா ப்ரிபேராகி.. அடுத்த வருஷம் போலதான் இதெல்லாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. இப்படி திடுதிப்னு அன் ப்ளான்ட்டான்னதும் நிஜமா பயமா இருக்கு” என தன் கலக்கத்தைச் சொல்ல,

“அதனாலென்ன இனி எல்லாத்தையும் டாக்டர்ட்ட கேட்டு பக்கவா உன்னையும் பாப்பாவையும் பார்த்துக்கலாம், எல்லாம் நல்லாத்தான் நடக்கும்” என இவன் ஆறுதல்படுத்த,

“ம்” என அவள் ஒற்றை எழுத்தாய் ஒத்துக் கொண்ட நேரத்தில்

“டேய் நான் எங்க கொத்து பரோட்டாவ பார்க்க உள்ள வரேன்டா” என ஒரு அறிவிப்போடு கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் கருண். அவன் கை நிறைய ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பல இனிப்பு பெட்டிகள். உள்ளே வரவும் பவியிடமாக அதை நீட்டினான்.

“என்னடா இது? இவ்ளவா வாங்குவ? இந்த ஒன்பது மாசமும் உட்காந்து சாப்ட்டா கூட இத காலி செய்துக்க மாட்டா அவ” என்ற ப்ரவியின் விசாரிப்புக்கு,

“போடா மாக்கான், எனக்கு எவ்வளவு பெரிய ப்ரமோஷன் வந்திருக்கு, அதுவும் நம்ம வீட்ல என்னத் தவிர யாருக்கும் வராத ப்ரமோஷன்… சித்தப்பா!! சொல்லவே சும்மா கெத்தா இல்ல.. அதுக்குன்னு ஹாஸ்பிட்டல்ல எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கலாம்னு நினச்சேன்” என கருண் ஆரம்பிக்க,

“அறிவு ஜீவி, குழந்தை பிறந்தாதான்டா கொடுப்பாங்க” என ப்ரவி சிரிக்க,

“ப்ச் அதத்தான்டா லினி அம்மாவும் சொன்னாங்க, அதான் சரின்னு எல்லாத்தையும் இங்க தூக்கிட்டு வந்துட்டேன், ஒரு ஃபோர் ஃபைவ் மந்த்ஸ்க்கு இதெல்லாம் வெளி ஆட்கள்ட்ட சொல்ல வேண்டாம், பவிக்கே அது கம்ஃபர்டபிளா இருக்கும்னு சொன்னாங்க” என்றபடி இப்போது இனிப்பு பெட்டிகளை அங்கு அருகில் வைத்த கருண்,

“ஆன்ட்டி இதை உன்ட்ட சொல்லச் சொன்னாங்க பவி, அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு எல்லாத்தையும் ஃபாலோ செய்ய ட்ரைப் பண்ணக் கூடாதாம், டாக்டர் என்ன சொல்றாங்களோ அதை மட்டும் செய்தா போதுமாம், ரிலாக்ஸா இருக்கச் சொன்னாங்க” என்றபடி இப்போது பவி அருகில் வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டவன்,

“லினி ஊரும் இங்க பக்கத்துலதான், இந்த வீக் எண்ட் வீட்டுக்கு வந்துருக்கா, உன்னை பார்க்க வரேன்னு சொன்னா, நாளைக்குன்னா உனக்கு ஓகேவா” என பவியை கேட்க,

லினி கருணுடன் இஞ்சினியரிங் கல்லூரி தொடங்கி அடுத்து MBA வரையும், உடன் படிப்பவள், நல்ல ஃப்ரென்ட். இப்போதும் இவனோடு ஒரே அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவள்.

கூடவே “இதான் அவளோட ரீசண்ட் ஃபோட்டோ, முடியெல்லாம் வளத்துட்டா, நான் இல்லாத டைம் வந்து நின்னானா பார்த்து உனக்கு அடையாளம் தெரியணும்ல” என தன் மொபைலிலிருந்து அவன் ஒரு ஃபோட்டோவையும் காட்ட,

“ஹேய் இது அந்த பாய்கட் பொண்ணாடா? இப்ப செம்ம க்யூட்டா இருக்கா! பேசாம நாம லினிட்ட அவ வீட்லயே உனக்கு ஒத்துவர போல எதாச்சும் பொண்ணு இருக்கான்னு பார்க்கச் சொல்லுவமாடா?” என பவியோ கண்கள் மின்ன இப்படி ஒரு சிந்தனைக்கு வந்திருந்தாள்.

“ஹான்?” என இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை வெளிப்படுத்திய கருண்,

இரண்டு நொடி யோசித்தவன், “நாட்ட பேட் ஐடியா கொத்துபரோட்டா, லினிக்கு சித்தப்பாஸ் மாமாஸ்னு ரொம்ப பெரிய ஃபேமிலி, நிறைய கசின்ஸ் உண்டு, சொன்ன வரைக்கும் அவ ரிலடிவ்ஸ் பத்தி எதுவும் நெகடிவா தோணினது இல்ல, நம்ம வீடு போலதான் இருப்பாங்க” என்றவன் “பாப்பா வரவும் பாரு உனக்கு கூட ப்ரெய்ன் எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது” என பவியை வம்பிழுப்பதிலேயே குறியாய் இருக்க,

“அப்ப எனக்கு லினி நம்பரும் அவளோட அம்மா நம்பரும் தா” என பவியோ லினியிலேயே கவனமாய் இருக்க,

“நீ ஏன் இவ்வளவு சுத்தி வளைக்க பவி? டேய் எரும அந்த லினியவே உனக்கு கேட்டா என்னன்னு கேட்கிறா பவி?” என தன் மனையாளை புரிந்து விளக்கம் சொன்னது ப்ரவி.

“ஓய்!!, என்னதிது?!” என்பதுதான் கருணின் முதல் வெளிப்பாடு.

“அவ எனக்கு நல்ல ஃப்ரென்டுடா, அவ்வளவுதான்” என அடுத்து கருண் ஆரம்பிக்க,

“நாங்க மட்டும் அவ உனக்கு எனிமின்னா சொல்றோம், உனக்கு அவ மேல ஒரு ப்ரதர்லி ஃபீல் இருந்தா டாபிக்க இதோட விட்டுடுவோம், இல்லன்னா இத்தன வருஷமா தெரிஞ்ச பொண்ணு, நல்ல குடும்பம்ன்றதால கல்யாணம்றது ஒரு மோசமான ஐடியாவா படல” என்ற ரீதியில் ப்ரவியும் பவியும் பேச,

சற்று நீண்ட பேச்சுகளுக்குப் பின்,

“லினிட்ட முதல்ல இதப் பத்தி நான்தான் பேசணும், வீட்ல உள்ளவங்களுக்கு சரியா வரும்னு தோணுறதால இது யோசிச்சு எடுத்த முடிவுன்னு தெளிவா அவட்ட சொல்லணும், அதுக்கு முன்னால நம்ம வீட்ல இருந்து அவ வீட்டுக்கு இந்த பேச்சு போச்சுதோ கொஞ்சம் கூட சரியா வராது. லவ் பண்ணேன் அது இதுன்னு எதாவது நினச்சுட்டான்னா ரொம்பவும் ஹர்ட் ஆகிடுவா, இந்த ப்ரபோஸல் பிடிக்கலைனா அடுத்து மொத்தமா என் கூட உள்ள ஃப்ரென்ட்ஷிப்ப அவ கட் பண்ணிடக் கூடாது, எனக்கு அவ ஃப்ரென்ட்ஷிப் முக்கியம்” என ஒரு முடிவுக்கு வந்திருந்த கருண் மறுநாள் லினி எனப்படும் மெல்லினா பவியைப் பார்க்க வரும்போது இதைப் பேசிக் கொள்வதாகத் தெரிவிக்க,

மறுநாள் காலை உணவு தடபுடலாய் தயாராகிக் கொண்டிருந்தது பவியின் வீட்டில். காலையிலேயே வந்துவிட்டுச் செல்வதாக தெரிவித்திருந்தாள் மெல்லினா. ஆக அவளுக்காகத்தான் இந்த பரபரப்பு.

தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்த கருணைப் பார்த்த பவி,  “ஆஹா புது ட்ரெஸாடா இது? ஆமால இன்னைக்கு உன்னைய மாப்ள பார்க்க வராங்கல்ல, ஒழுங்கா மாப்ளையா அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ” என ஓட்ட

அடுத்த பக்கம்