துளித் தீ நீயாவாய் 22

இந்த எப்பிசோடை படிக்கும் முன் நான்கு தினம் முன் பதிவாகிய முந்தைய எப்பியை படித்துவிட்டீர்களா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

துளித் தீ நீயாவாய் 21  இங்கிருக்கிறது. அடுத்த எப்பி கீழே தொடர்கிறது.

மருத்துவமனையின் அந்த அறைக்குள் ப்ரவி நுழையும்போது பவி அங்கிருந்த படுக்கையின் மேல் உட்கார்ந்திருந்தாள்.

அவளைப் பார்க்கும் ஆவலில், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவனின் முகத்தில் ஒற்றை உணர்வாய் காதல் மாத்திரம் அதன் முழு ரம்யத்துடன் வீசிக் கொண்டிருந்தது.

ஆனால் அவனை எதிர்நோக்கிக் காத்திருந்த அவன் மனையாளின் முகத்திலோ விரிந்து நிற்கும் பூரிப்பும், அதற்குள் கீற்றாய் மறைந்து நிற்கும் பெருமிதமுமாய், கூடவே சில கலக்கங்களுமாய் பல வர்ணம். அதில் இவனது இதழிலிருந்த புன்னகை ரகத்தைப் பார்க்கவும் போலும் வெட்கம் வேறு வந்து பிறந்து கொள்கிறது.

ஆனாலும் “போடா பக்கி” என எதையோ மறுப்பது போல் சிணுங்கலாய் கடிந்தபடிதான் இவனை எதிர்கொண்டாள்..

அத்தனை எளிதாய் அவனை டா போட்டுவிடமாட்டாள் என்பதால், இதிலே அவளது முழு நிலையும் இவனுக்குப் புரிந்து போக,  இதற்குள் அவளை அடைந்திருந்தவன் முதல் வேலையாக குனிந்து அவள் உச்சந்தலையில் இதழ் பதிக்க,

அமர்ந்திருந்த அவளோ அவனை இரு கைகளாலும் இடுப்போடு வளைத்து, அவனோடு ஒன்றி இவனில் தாய்மடி தேடினாள்.

கூடவே “ஏன் இப்படி ஆகிட்டு ப்ரவி?” என பரிதாபமாய் ஒரு கேள்வி.

அவள் தேடுவதை கொடுக்கும்படி தாய்மையாய் இப்போது அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டாலும்,

“நாம விளையாடின விளையாட்டுக்கு இது கூட ஆகலைனா எப்படி?” என விஷமமாய்த்தான் வருகிறது இவனது பதில்.

இதில் வெடுக்கென அவனிடமிருந்து உருவிக் கொண்டு நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள் பெண். “உனக்கெல்லாம் எல்லாம் விளையாட்டுதான் என்ன? உனக்கென்ன பாப்பா வருதுன்றது மட்டும்தான் விஷயம். ஜாலியா இருப்ப, ஆனா பிறக்கப் போறது எனக்குதான?!

நான் தான் ப்ரெக்னென்சி, டெலிவரி, அடுத்து பாப்பாவ பார்த்துக்கிறதுன்னு எல்லாத்துக்கும் கவலப் படணும்? கொஞ்சம் கூட ப்ளானே செய்யாம இப்படி திடுதிப்னு ப்ரெக்னென்ட்னா எனக்கு..” எனும் போதெல்லாம் இதற்குள் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது அவளுக்கு.

ஆம் பவி ப்ரவி குடும்பத்திற்கு அடுத்த நபர் உதயம். இது தெரியாத பவி, மது எழுந்து இருட்டில் போய் நிற்கவும், அந்த குடோன் திருடன் அன்று பள்ளியில் தன் கைவரிசையைக் காட்ட வாய்ப்பிருக்கிறது என முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி ஒரு மாணவி இருட்டில் போய் நிற்பதே சரி இல்லையே என  பதறிப் போய் அவளை எச்சரிக்க ஓட, கருவுற்றிருந்த உடல் அதைத் தாங்காமல் மயங்கி விழுந்திருக்கிறாள். அவ்வளவே!

ப்ரவிக்குமே இது தெரியாதே! என்னதான் துப்பாக்கி ஏந்திய காவலரை கட்டிட உயரத்தில் நிறுத்திவிட்டு யாரும் இவர்கள் அருகில் கூட வராத அளவுக்கு கண்காணிக்க விட்டிருந்தாலும், அதே போல இன்னொரு கட்டிட உயரத்தில் இருந்து யாராவது இவர்களை சுட முடியாது என சொல்லவா முடியும்?

பவி விழவும் இப்படி இவன் மனம் பதறிப் போக, பின்னே பவி விழுவதைக் காணவும் தன் காதையல்லவா பிடித்துக் கொண்டே மது அலறினாள், மதுவின் காதை உரசிக் கொண்டு வந்த ஒன்று அவளுக்கு நேர் எதிரில் இருந்த பவியை தாக்கி இருக்கும் என்றுதானே இவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்கத் தெரியும்?!

அடுத்து உடனடியாக பவியை மருத்துவமனை கொண்டு வர, என்னதான் அவள் உடனே விழித்துவிட்டாலும், காதில் எதோ உரசியது என மது அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க, அது எதாவது வண்டோ அல்லது பூச்சியாகவும் இருக்கலாம், அல்லது மருந்துள்ள ஊசி எதுவும் எறியப்பட்டு அது மயங்கிக் கொண்டிருந்த பவியின் மீது இறங்கி இருந்தால் என்ற ரீதியிலெல்லாம் யோசிக்கப்பட்டு… கையாண்டுகிட்டு இருக்க கேஸ் அப்படில்லாம் யோசிக்கச் சொல்லுதே! ஆக சில பல டெஸ்ட், மருத்துவ கண்காணிப்பென, இப்போதுதான் பவியை ப்ரவியிடம் அனுமதித்திருக்கிறார்கள். இந்த களேபரத்தில்தான் பவி தாய்மை அடைந்திருப்பதும் தெரிய வந்திருக்க,

அதற்குத்தான் பவியிடம் இப்படியான எதிரொலி. மெத்தப் பூரிப்பில் இருந்தாலும் அவள் வகையில் சற்றும் எதிர்பாரா இந்தச் செய்தியில் கலக்கமும் வந்திருந்தது அவளுக்கு.

அவள் கண்ணில் நீரைப் பார்க்க்வும், “என்ன நீ?” என்றபடி அவளால் உருவிக் கொள்ள முடியாதபடி சற்று முரட்டுத்தனமாகவே தன்னோடு அவளை இழுத்துச் சேர்த்துக் கொண்ட ப்ரவி,

“என்னது பாப்பா உனக்கு மட்டும் பிறக்குதா? அப்படின்னா டெலிவரி ஆனதும் என் வைஃப்க்கு குழந்தை பிறந்திருக்கு,  அது எங்க பவியோட பாப்பா அப்படின்னா சொல்லணும் நான்?” என சின்னதாய் அதட்டினான்.

“நம்ம குழந்தை அது, நமக்கு குழந்தை பிறக்கப் போகுது… உன் பெயின மட்டும்தான் பிசிகலி என்னால ஷேர் செய்ய முடியாது, மத்தபடி எல்லாத்தையும் நாம ஷேர் செய்துக்கலாம். நான்லாம் அந்த அளவு கூட விடுறதா இல்ல, உனக்கும் நம்ம குட்டி பவிக்கும் எல்லாத்தையும் நான் மட்டுமாதான் செய்வேன்” எனும் போதெல்லாம் அவன் குரல் கனிந்து போய் கிடந்தது.

கருவுற்றிருக்கும் செய்தியையும் சொல்லிவிட்டு, அவளை யாரையும் பார்க்கவும் விடாமல் தனிமையில் வைத்திருந்ததில் வெகுவாய் வறண்டு போய் இருந்த பவிக்கு இதுவே அத்தனை இதத்தைக் கொடுக்க, முன்பிருந்த கலக்கம் வெகுவாக குறைந்து போய் தோன்ற,

“என்னது குட்டி பவியா? கேர்ள் பேபின்னு முடிவே செய்துட்டியா?” என அவள் இப்படி விசாரிக்கப் போனாள்.

“ம்ஹூம் பாய் பேபினாலும் கேர்ள் பேபினாலும் பவி போல அது எனக்கு செல்லக் குட்டில்ல, அதான் குட்டி பவி” என அவன் இப்போது இப்படி ஒரு விளக்கம் கொடுக்க,

அடுத்த பக்கம்