துளித் தீ நீயாவாய் 21 (9)

திரைப்படம் திரையிட என அந்தப் பகுதி விளக்குகள் அணைக்கப் பட்டிருந்ததாலும் மற்றவர்களை இவர்கள் வெகுவாகவே விலகி வந்துவிட்டதாலும், பவியும் கருணும் அவர்கள் இயல்பிலேயே இப்படி துருதுருத்துக் கொண்டு வர,

மற்ற யாரும் இவர்களை கவனிக்கவில்லை எனினும் மதுவின் கண்கள் இவர்கள் மீதே இருந்தது. ‘அச்சோ அண்ணா வந்துட்டாங்கன்னா நல்லா இருக்குமே! சார் சாப்ட உட்கார்றாங்களே’ என ஒரு பரபரப்பு.

பால்கனியோ இன்னும் வந்த பாடில்லை.

‘சார் தம்பி சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டாங்க, நீங்க dessert போல எதாக்சும் வாங்கிட்டு வாங்க’ கனிக்கு மெசேஜ் அனுப்பினாள்.

இதற்குள் ஒரு மேஜை நாற்காலியை தூக்கி வந்து போட்டு, ப்ரவியை உட்காரச் சொல்லிவிட்டு, அருகில் கருண் நின்று கொள்ள, பவி பரிமாற, உட்கார்ந்து சாப்பிட்டது ப்ரவி என்றால் நின்றபடியே கருணும் அவ்வப்போது எதோ எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, தனியாக அவனுக்கு தட்டு வைத்திருக்கிறதா இல்லை ப்ரவியின் தட்டிலிருந்தே இவனும் எடுத்துக் கொள்கிறானா என்றெல்லாம் சரியாக புரியவில்லை மதுவுக்கு,

ஆனால் கருணும் பவியும் ப்ரவிக்கு அருகில் நின்ற வண்ணம் எதையோ சள சளத்துக் கொண்டே இருக்க என இங்கிருந்து பார்க்க ஒரு மௌன கீதமாய் அவள் மனதைப் போய் வருடலும் நெகிழதலுமாய் தொடுகை செய்கின்றன காட்சிகள்.

இப்படி ஒரு குடும்பம், அமைப்பு, நடைமுறை எல்லாமே இவளுக்கு முழுக்கவும் புதிது. விழுங்குவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள் இவள். ஒரு கட்டத்தில்  இப்படி ஆசையும் ஏக்கமுமாய் பார்ப்பதே கூட அவர்களை பாதித்துவிடுமோ என்ற ஒரு தவிப்பு வேறு சற்றாய் இவளைத் தட்டிச் செல்ல,

தான் அமர்ந்திருந்த கூட்டத்திலிருந்து எழுந்து கொண்டவள், ஓரளவு தள்ளிப் போய், பால்கனியை மொபைலில் அழைத்தாள் இப்போது. ‘சீக்கிரம் வாங்கண்ணா, சார் சாப்ட்டு முடிக்கப் போறாங்க’ எனச் சொல்லத்தான் இந்த அழைப்பு.

ஆனால் அதற்குள்ளும் ஏனோ பவி வேக வேகமாக இவளைப் பார்த்து வரத் துவங்கினாள். பவி வருவதைக் காணவும் இவள் பவியிடம் ‘எதாவது வேணுமா?’ என விசாரிக்க ஓடத் துவங்க,

எதோ ஒன்று இவள் காதோரம் விர்ரென்றது போல் இருந்தது, அதற்குள் இவளுக்கு நேரெதிரே வந்து கொண்டிருந்த பவி வேரற்ற மரம் போல் சட்டென தரையில் சரிந்தாள்.

ஐயோஓஓஓஓ!!” என்ற இவளது அலறலைக் காட்டிலும் பெரிதாகக் கேட்டது ப்ரவியின்

பவீ!!!

தொடரும்…

துளி தீ நீயாவாய் 22

வேணி எப்படி பவி வீட்ல இருக்க சம்மதிச்சா… பால்கனியால ஏன்  வேணியோட கடந்த காலத்தை எளிதாக கடந்து கொள்ள முடிகிறது, போன்ற கேள்விகளுக்காகத்தான் ஆரம்பத்தில் வந்த மது, பால்கனி உரையாடல்.  ஆக இனி நாம் கதைக்குள் மற்ற விஷயங்களைத் தேடி விறு விறுவென ஓடலாம் என்று நினைத்திருக்கிறேன்.