துளி தீ நீயாவாய் 18 (4)

“உங்க பெரியத்தான்ட்ட பேசினோம்மா, ரொம்ப தன்மையா பேசினாங்க, உங்கட்டயும் பேச சொன்னாங்க, எங்க பொண்ணு எப்படியோ அப்படித்தான் எங்க மொத்த வீடும் இருக்கும், அதனால அவட்ட பேசி உங்களுக்கு திருப்தியா இருக்கானு பாருங்க, அவளுக்கு பிடிச்சு இருந்தாதான் எங்க வீட்லயும் எல்லோருக்கும் இஷ்டம் இருக்கும். அதனால அவளும் உங்கட்ட பேசிட்டு சொல்லட்டும், அடுத்து என்னனு பார்ப்போம்ன்றாங்க” என்றனர் அவர்கள்.

தயாப்பா ப்ரவியிடம் கூட பேசச் சொல்லாமல் இவளிடம் பேசச் சொன்னாரா? என்ற அதிர்ச்சியைத் தாண்டி எதையும் சிந்திக்க நேரமில்லாமல், பின்ன லைன்ல இருக்கவங்கட்ட பேசணுமே!

என்னவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் சொல்லி, எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கேட்டு முடிக்கும் முன் திணறித்தான் போனது பவிப் பொண்ணு.

இதில் வேணியின் முன் எல்லாவற்றையும் பேசி இருக்கவில்லை என்றாலும் அழைப்பின் துவக்கம் வேணியின் முன்தானே! ஆக அவளுக்கு இது எதைப் பற்றிய அழைப்பு எனத் தெரியவும் ஒருவிதமான குஷி மன நிலை. அதோடு கருண் கல்யாணம் என்றதும் பவியின் திருமணம் வரை மனம் பாய்ந்திருந்ததால்

பவி பேசி முடித்து ஒரு புன்னகையோடு வரவும், “மேம் உங்க மேரேஜ் ஆல்பம் கூட நான் பார்த்தது இல்ல மேம், காமிப்பீங்களா?” என இயல்பான ஆசையுடன் கேட்டாள் வேணி. பவிக்குத்தான் என்ன சொல்லவெனத் தெரியவில்லை.

ஆல்பம் இன்னும் இவர்கள் கைக்கு வந்திருக்கவில்லைதான், ஆனால் அது வந்தாலும் கூட வேணியிடம் காட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். போஸ் கொடுக்கச் சொல்லிய நேரங்களில் வேறு வழி இன்றி இழுத்துப் பிடித்து இவள் சிரித்தது போல் காட்டி இருப்பாளாக இருக்கலாம். ஆனால் மற்ற நேரங்களில் இவள் முகத்தின் சோகம் அப்பட்டமாய் தெரியும்தானே!

இந்த தயாப்பாவின் செயலும் வேணியின் கேள்வியும் அன்று இரவு படுக்கையில் தன்னவன் மேல் கை போட்டபடி “நமக்கு ஏன் இப்படில்லாம் ஆச்சு ப்ரவி?” என தீவிரமாக யோசிக்கவிட்டிருந்தது பவித்ராவை.

ஒரு மாதம் முன்பு

பவித்ராவுக்கு அன்றுதான் இறுதிப் பரீட்சை. இதோடு இஞ்சினியரிங் படிப்பு முடிகிறது. மதியம் பரீட்சை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வரும் போதே தூரத்தில் தெரிகிறது மொட்டை வெயிலில் மொபைலும் கையுமாக நிற்கும் கருணின் கோலம்.

பின்ன இது கூட இல்லாமலா? சும்மாவே அப்படித்தான். இதில் நாளை கருணுக்கு நிச்சயதார்த்தம் என்றால் என்ன செய்ய மாட்டான்? ஆம் இவளது கரண்டி செம்மயா சிக்கிட்டே போன மாசமே!

அப்போது இவளுக்கு ப்ரீட்சைக்கு படிக்கவென விடுமுறைக்காலம். வீட்டில் விழுந்து புரண்டு படித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் ஏதோ தூரத்து உறவினர் என தயாப்பாவை பார்க்க வந்தவர்கள்தான் மாளவிகாவின் குடும்பம். குடும்பம் என்றால் அம்மாவும் மகளும் மட்டும்தான். மாளவிக்கு அப்பாவோ உடன் பிறந்தவரோ இல்லை.

அடுத்த பக்கம்