துளி தீ நீயாவாய் 16(6)

“நீ அண்ணி வீட்ல இருக்கிற காலம்மட்டும் உன்ன அண்ணி முன்னயோ இல்லனா உன் SP சார்  முன்னாலயோத் தவிர நான் உன்னை மீட் பண்ணவே மாட்டேன்” ஓரிரு நொடிகளுக்குப் பின் அதே முகபாவத்தோடு வந்து விழுகிறது அவனது வாக்குறுதி.

இதில் அவள் கொஞ்சமாவது இளகுவாள் என அவன் நினைத்திருந்தால் 100% ஏமாற்றமே!

“கூடவே இன்னொன்னையும் சேர்த்து ஞாபகம் வச்சுக்கோ, எந்த காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் இன்க்ளூடிங் மதுவுக்காகவும் ஒரு சின்ன பொய், புரட்டு, ஏமாத்துன்னு எந்த கோல்மாலுக்கும் நான் ஒத்துக்க மாட்டேன். இதுதான் நான். இப்படித்தான் இருப்பேன், இத வச்சு மதுவுக்கு என்ன செய்ய முடியுமே அதைச் செய், இல்லனா போய்கிட்டே இரு, மதுவுக்கு எப்படி ஹெல்ப் பண்றதுன்னு எனக்குத் தெரியும்” அறைந்தாடும் பிடிவாதத்துடன் அவள் ஒரு பேய்தன உறுதியுடன் பேச,

“இங்க வா நீ” என்றபடி இப்போது இவன் விறு விறென நடந்தது விழா நடந்த கூடத்திற்கு.

அங்கிருந்த பவியிடம் நேராகச் சென்றவன்,

“வணக்கம் அண்ணி, நல்லா இருக்கீங்களா?” என முறையான குசல விசாரிப்புக்குப் பின்,

“அண்ணி நானும் இந்த போட்டியில வாலண்டியரா சேர்ந்துக்கிறேன் அண்ணி, எனக்கும் எதாவது ஒரு டீம் தாங்க” எனக் கேட்டான்.

ப்ரவியை எப்படி வேலி அடைத்து, இந்த வேணியை எப்படி கைப் பிடிப்பது என்பதற்கான முழு திட்டமும் அவனிடம் உதயமாகி இருந்தது.

இப்படியாய் ஆடெனவும் தெரியாமல், புலி எனவும் புரியாமல் சென்று இவன் ஆடு புலி ஆட்டத்தில் அகலக் கால் வைக்க, அங்கு விஷயம் கேள்விப் பட்ட ப்ரவியின் முகத்தில் ஒரு போலீஸ் புன்னகை. புலிப் புன்னகையோ?!

வயலுக்கு வந்து போன அந்த புல்லட் புலி பிஸ்டல்காரனோ இவை அனைத்தையும் அறியவும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான். ‘Welcome abode Mr.Attukutty!’ என்றபடி.

தொடரும்..

துளி தீ நீயாவாய் 17

8 comments

 1. Balcony konjam nalavan irudnhalum selfish motive jasthi pola…he uses people’s psychology. Balcony enaku pidichadhu but andha payanuku it’s irukunu Sona aniyaaya poi 🙄😏enada iapdi adichu vidrura pakki. .. Veni solrapola…ana. Veni mela apdi ena interest ivanuki….pravi paya y da sirikaraaa…thanks for the epi KA…next epi udane plzz…Madhu scene super narration but andha ponnu lusu pola…avangamma nala blackmail panra pola…emotional ah…pavam China ponnu LA…avaluku amma Thane sari thapu solitharanum…🙄🤔 Ena Da game idhu…Puli vaall nu neku purila..
  Next episode plzzz😍

  • Paal kani velai antha paiyanukku eppadiyum tharanumnu thaanpa ninaikiraan… avana emaathura ideavey avanukku kidaiyaathu…avanukaga office open seyyalaamndra alavukku…avan mind alavil ready thaan.. bt athai appadiye sonna antha paiyanukku namba mudiyaathennu ivan yosikiraan… athaan ipdi present seythurukaaney thavira…paiyana emaathura nokkam avanukku kidaiyaathu…still its a manupulationand a lie….15 yrs la oru ponnu ava ammavai muzhusaa namburathu iyalbu thaaney… veniya paalkani en mrg seyya ninaikiraannu seekiram vanthudum.. game mudiyurappa ella kulapamum sari aakidumnu namburen..Thanks sathyama

 2. Ayyo inthe veni pavi ya vida mosam pa.paviavathu paravaila pravi a etho konjam seekiram manichu rasiagita ana inthe ponnu balcony a pottu padatha padu paduthuthu. Pavam manushan.ipidi pravi um balcony um mathi mathi enna thitam poduranga ithula villain ku enna happy manda kaithu po.balcony oda peru attukutty a.

 3. வேணிய என்னனு சொல்ல? அவள் நினைக்கிறத பால்கனி செய்யனும்னு எதிர்பார்க்கிறா .. ஆனால் அதை அவளுக்காக செய்யரான்னும் ஆகக் கூடாது.. இது என்னவிதமான மனநிலை. ஆக பால்கனிதான் குழை … குழை ய எடுக்க வர ஆட்ட ப்ரவி புலி வேட்டை ஆடப் போகுதோ? ஆடுக்கு கண்ணு குழை மேலேன்னா, பால்கனி கிட்டே இருக்கிற எந்த ஒரு விஷயம் ஆட்டுக்கு தேவையா இருக்கு? அதில் பவியோட நிலம் பால்கனி நிலத்துக்கு பக்கத்துலே இருக்குன்னா, அந்த ரெண்டு நிலத்துக்குள்ளும் என்ன இருக்கு? btw பால்கனியோட அணுகுமுறை மது, அந்தப் பையன் ரெண்டு பேர்கிட்டேயும்.. சூப்பர் ..வேணி அதை பால்கனியின் சுயநலமா எடுத்துகிட்டாலும், அதுக்கும் ஒரு நல்ல எண்ணங்கள் வேணும்..

 4. Ada palkani dhan villain nu nenacha kalam pooi avana vechu game nadakuthe….
  Pravi pota plan lam that villain kum theriyudhu….
  Apdina avan edho close ah iruka maari irukee..

Leave a Reply