துளி தீ நீயாவாய் 15 (4)

பால்கனியை இங்கு எதிர்பார்த்தாளாமா இவள்? பால்கனியை என்ன யாரையுமே இங்கு இவள் எதிர்பார்க்கவில்லையே! ஆக தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவள், முதல் வேலையாக சுற்று முற்றும் பார்த்தாள். யாராவது பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?

விழா முடிந்து பெரும்பாலோர் கிளம்பிப் போயிருந்ததாலும், இந்த நீர்த்தொட்டி இருக்கும் இடம் ஒரு கட்டிடத்திற்கு பின் புறம் என்பதாலும் இப்போதைக்கு இவர்களை பார்த்துவிடும் அளவு இங்கு யாரும் இல்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் இவர்கள் யார் கண்ணிலும் மாட்டலாம் என்ற நிலை.

“இங்க எங்க வந்த?” என இப்போது பல்லைக் கடித்தாள் வேணி.

“மேம் கூட இருக்கப்ப வந்திருந்தா கூட இவ்வளவு மோசமா தோணாதே? இப்ப மேம் பார்த்தா எவ்வளவு தப்பா தெரியும்?” பதறினாள் இவள்.

“அண்ணில்லாம் அங்க பிசியா பேசிட்டு இருக்காங்க, அதைவிடு மதுவ நான் காப்பாத்தியே ஆவேன்னு அன்னைக்கு அவ்வளவு அழுத? இன்னைக்கு என்ன சட்டுன்னு அடிச்சுட்ட?” என விசாரித்தான் அவன்.

இப்போதுதான் இவளுக்கு மெல்ல உறைக்கிறது, மதுவுக்காக இவன் எத்தனை ஏற்பாடு இவள் ஒருத்தியின் நிமித்தம் எடுத்திருக்கிறான் என்பதே! இவள் பாட்டுக்கு ஒரே நொடியில் அதை எல்லாம் கலைத்துப் போட்டால் என்ன அர்த்தம்?

“அது வந்து அவ பவியக்காவ ரொம்ப பேசிட்டா, அதான்” என்றவள், மது பவியைச் சொன்னதையும் சொல்லிவிட்டு, “ஆனாலும் சாரி, என்னால உன்… உங்களுக்கு ரொம்ப பிரச்சனை” என அவன் கண்களைப் பார்த்து திக்கித் திக்கி மன்னிப்புக் கேட்டாள்.

மதுவின் கூற்றைச் சொல்லும் போது அவன் முகம் விழுந்து போன வகையிலேயே அவனுக்கும் அது இவள் அளவுக்கு எரிச்சலாகிறது என்பது இவளுக்குப் புரிகிறது.

அவனோ “ப்ச் என்ன பத்தி ஒன்னும் இல்ல” என்றவன் “மது சொன்னது கேட்க எனக்கும் செம்ம கடியாத்தான் இருக்கு, ஆனா அவ என்ன பிரச்சனைல இருக்காளோ, நம்மளப் பார்க்கவும் எல்லோரும் நல்லா இருக்காங்க, நாம மட்டும் ஏன் இப்படின்னு என்ன எரிச்சல் வந்துச்சோ?” என்றவன்,

அவசரமாக “அதை சரின்னு நான் சொல்லல, ஆனா சரி போறான்னு விட்டுடலாம், அதையே நினச்சு மனச போட்டு குழப்பிக்கிடாத” என ஆறுதல் சொன்னான். கூடவே “அண்ணியையும் உன்னையும் சேர்ந்து பார்க்கிறப்ப மனசுக்கு அவ்வளவு பாந்தமா இருந்துது” என அவன் சொல்லும் போது மண்வாசனை நுகரும் ரம்யதருணங்களை சுமந்திருந்தது அவன் குரல். நிறைவையும்தான். “நிஜமாவே அண்ணிக்கு நீயும், உனக்கு அண்ணியும் வரம்” என்று முடித்தான்.

அவன் சொன்ன செய்தியில், அதை சொன்ன வகையில், இவள் மனம் மீண்டுமாய் ஒரு கணம் பவி இவள் முடியை பிடித்த நிகழ்வுக்குப் போய் வர, கூடவே மதுவுக்கும் அவளது அம்மாவுக்குமான பேச்சுக்களும் நினைவு வர, வேணிக்கு பால்கனியின் கூற்று முழுவதுமாகவே புரிகிறது.

அதில் சற்றே சற்றாய் மனம் அவன் மீதும் கனிகிறது இவளுக்கு என்றால், மதுவின் மீது கொஞ்சமே கொஞ்சமாய் கோபத்தைக் குறைத்துக் கொள்கிறது. “ஆனாலும் அவள எனக்குப் பிடிக்கல” என இவள் ரொம்பவும் வெட்டாமல் சொல்லி வைத்தாள்.

“இல்லப்பா அவள பிடிக்கலைனு சொல்லாத, அவ செய்தது நமக்குப் பிடிக்கல அவ்வளவுதான்” என சொல்லியபடி இவர்களுக்கு அருகில் இருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான் அவன்.

அதோடு இடது காலை பின்னோக்கி மடக்கி அம்மரத்தில் ஊன்றிக் கொண்டு “ஒரு தப்பு செய்துட்டாங்கன்றதால ஒருத்தங்கள மொத்தமா பிடிக்கலைனு சொல்லக் கூடாதுல்ல, பவி அண்ணியெல்லாம் பாரு அவங்க அப்படிச் சொல்வாங்களா?” என அடுத்து அவன் பேசிய வகை நூறு சதவீதம் ஒரு நட்பான அலசல், அதுவும் மதுவிஷயத்தை மட்டுமே மையப் பொருளாய் வைத்து சிந்தித்து பேசிக்கொண்டிருக்கிறான் என இவளுக்குத் துளி சந்தேகமின்றி தெரிந்தாலும் கூட,

சுருள உருவ கொடூரமாய் குத்துப்பட்டுப் போகிறது இவளது காயம்பட்டிருக்கும் இதயப் பகுதி. நீ செய்த எல்லா கேவலத்தையும் தாண்டி பவி உன்ட்ட அன்பா இல்லையா? என்பது போல் பொருள்படுகிறதே இவளுக்கு. அறை வாங்கியவள் போல் இவள் இதில் நின்று போனாள்.

மின்னல் தொட்ட மென்பட்டாய் இவள் முகம் கருகிய வேகத்தில், என்னவென புரியாமலே “ஹேய் ஏன் என்னாச்சு?” என பதறினான் அவன்.

“இல்ல நீ..நீங்க சொல்றது சரிதான்” என்றாள் அதற்குள் சுதாரித்திருந்தவள். “ஆனா இத நான் கொஞ்சம் முன்னால யோசிச்சிருக்கலாம். இனி எப்படி மதுட்ட போய் நான் பேச? அவ எப்படி என்ட்ட பேசுவா? என்னை நம்புவா? எல்லாத்தையும் மொத்தமா ஸ்பாயில் செய்துருக்கேன்” என சொல்லும் போது தன் செயலின் முழு ஆழத்தையும் உணர்ந்திருந்தாள் அவள். இவளது கட்டைவிரல் நகம் வேறு பற்களிடம்.

வெளிப்படையாய் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள்ளோ அலையலையாய் அவளுக்குள் அழுத்திக் கொண்டும் வருகிறது. ஏதோ இனி எல்லாத்தையும் நியாயமா செய்து சாதிக்கப் போறதா சொல்லிட்டு இருந்தாளே! இவளுக்கு உண்மையில் எதையும் உருப்படியா செய்யவே வராதோ!

இதையெல்லாம் கேட்டிருந்த எதிரில் நின்றவனின் முகத்திலோ நேர் எதிராய் ஒரு மெல்லிய இசை வந்து சுமக்கச் சொல்லி படிந்து கொண்டது. ”அன்னைல இருந்து நீ, நீங்க, உன், உங்கன்னு ரொம்ப குழப்பிக்கிற, உனக்கு நீ போன்னு பேசுறதுதான் வசதியா இருக்குதுன்னா அப்படியே கூப்டு, நமக்குள்ள பார்மாலிட்டிஸ்ல்லாம் தேவை கிடையாது” என்றான். அவன் கவனம் அதில்தான் போயிருக்கிறதா, அல்லது அவள் கவனத்தை அதன் புறமாய் திருப்பிவிடுகிறானா?

இதற்கும் சட்டென இவளுக்கு எரிச்சல் எட்டிப் பார்க்கிறதுதான். ஆனால் அழுத்திக் கொண்டு வந்த அலைகள் எல்லாம் அப்போதைக்கு மறந்தும் போகிறது. அதோடேயே “நோ, நீ போன்னு பேசவும் ஒரு வயசு வேணும்…” என்றபடி அவன் முகத்தை கவனித்தவளுக்கு வார்த்தைகளில் slow motion.

காக்கி க்ரீம் பேண்ட்ஸ், டக் இன் செய்ப்பட்ட கருப்பு நிற சட்டை, முழுக்க ஃபார்மல்ஸ் என்ற உணர்வு வர முடியாதபடி முழுக்கையின் ஸ்லீவை ஓரளவு சுருட்டி விட்டிருந்தான்.

மேற்கில் நழுவிக் கொண்டிருந்த சூரியக் கதிர்கள் அவன் பக்கவாட்டு முகத்தை கடந்து கொண்டிருக்கும் வகையிலோ, அல்லது முன்பிருந்ததைக் காட்டிலும் முடியை இன்னுமாய் திருத்தி இருந்த முறையாலோ, முன்பிலும் கொஞ்சமாய் மெலிந்திருக்கிறானோ? மீசையை வேறு வெகு கச்சிதமாய் குறைத்திருக்கிறான், அதனாலோ? ஏகமாய் ஏறி இருந்த ஒரு புத்துணர்வுமாய் முன்பிருந்ததைக் காட்டிலும் வெகு களையாகத் தெரிந்தான் அவன்.

இவள் கவனம் எதில் சிதறுகிறது என அவனுக்கும் தெரிகிறதுதானே!

“டயட் இருக்கேன்” சட்டென சரணடைந்தான். ஒரு குழந்தை மிஞ்சிய சந்தோஷத்தோடு தன் குறும்புத்தனத்தை தாயிடம் ஒத்துக் கொள்ளும் வகை அது.

அவன் காதலின் எந்த பாவத்தில் இவளது பார்வையை அடையாளப்படுத்தி இருந்தாலும் கொதிப்பாய் இருந்திருக்கும்தான் இவளுக்கு. ஆனால் இதை எப்படி எதிர்கொள்ள இவள் என எதையும் யோசிக்கும் முன்பாகக் கூட சிரிப்புதான் வந்து வைக்கிறது.

அதுவும் கண்டனம் கலந்த தாய்மை வகைச் சிரிப்பு என்று சொல்லிக் கொள்ளலாம் அதை.

“வெட்டி வேலை, அதான் வயல்லயே அவ்வளவு வேலை இருக்கே” என தன் சிரிப்பை மொழி பெயர்த்தாள்.

என்னதான் பால்கனி திருடன் இல்லை என்று ப்ரவி சொல்லிவிட்டாலும், எப்படியும் அவன் வகையில் சில விஷயங்கள் தவறாய் இருக்கிறதுதான் என்று இவளுக்கு நன்றாகவேத் தெரியும். ஆனால் சற்று முன் இவர்களுக்குள் நடந்த உரையாடலின் தாக்கத்தினால், மதுவையும் என்னையும் மன்னிக்கணும்னா இவனை எப்படி வெறுக்கிறது சரியாகும்? என்ற ஒன்றும் எழுந்து நிற்பதால் போலும், நட்புக் கரைசல் ஒன்று நல்லவிதமாய் இவள் நரம்புகளில் அவனுக்கான் அளவோடு கரையத் துவங்கி இருக்கிறது.

என்னைப் போலத்தான் இவனும் என்ற மெல்லிய இழையில் முன்பு அவன் மீது உண்டாகி இருந்ததே இரக்கம், அதுவும் தன் வேலையைச் செய்து கொண்டிருப்பதால்தான் இந்த நட்பு நிலை.

ஆனாலும் அந்த வினாடியே, காதலுக்கு கோரிக்கை வைத்தவன் அவன், அவனிடம் இவள் சற்றாய் இலகுவாகப் பழகினாலும் அவன் வகையில் அது தவறான நம்பிக்கையைக் கொடுக்கும் அல்லவா? என்பதும் மனதில் வர,

“சரி நான் கிளம்புறேன், இனி எங்கயும் பார்த்து பேச ட்ரைப் பண்ண வேண்டாம்” என சட்டென பேச்சை முடித்து அப்படியே விறுவிறென நடக்கத் துவங்கிவிட்டாள்.

“அப்ப மது?” என்ற அவன் கேள்வி இவளுக்குப் பின்னாலிருந்து காதில் விழுகிறது.

நடை வேகத்தை நொடி நேரம் கூட குறைக்காமல், திரும்பியும் பார்க்காமல் “அவட்ட பேசிப் பார்க்கிறேன், ஆனா அதுக்கு நாம பேசிக்கணும்னு இல்லையே” என்றபடியே வந்துவிட்டாள்.

இப்படி தெறித்தார் போல் வந்தவள் பள்ளி மைதானத்தின் மையப் பகுதியை அடையும் போதுதான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது.

தொடரும்…

சென்ற பதிவிற்கு சும்மா பின்னி விளாசிட்டீங்க உங்க guesses எல்லாம் amazing.  அந்த guessesஐ பார்க்கவிரும்புறவங்க, https://www.facebook.com/groups/317949992282736/ இந்த க்ரூப்பில் பார்த்துக் கொள்ளலாம்.

கமென்ட் guesses மூலம் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள். இந்த எப்பிக்கும் கமென்ட் செய்ங்க..அடுத்த எப்பியும் சீக்கிரம் போட்டுடுவோம். நன்றிகள்.

6 comments

  1. பெட்டெர் நீங்க கொஞ்சம் பெரிய எபிய வீக்லி ஒன்னே குடுக்கலாம்ல டக்குனு முடிஞ்ச ஃபீல்.
    இத போன வாரமே சொல்லணும்னு நினச்சேன்,எனக்கு வேணி – பவி கெமிஸ்ட்ரி ரொம்ப பிடிக்குது . சாரி ப்ரவி 😉 😉 .
    Madhu added to the list of veni, Vallal thirudan ah . பால்கனி சொல்றப்போல தான் இருக்கணும் என்னனாலும் எனக்கு செம்ம காண்டாகுது தான் . The success of writernu ஒன்னு யோசிப்பேன் நான் என்னால கனெக்ட்டே பண்ணிக்க முடியாத விஷயத்தை நான் ரசிக்கற மாதிரி எழுதறது பால்கனி வேணி சீன் எனக்கு அப்படி தான் இருக்கு I lyk the diet பார்ட் verymuch

  2. எப்படி சொல்ல? வேணியோட அந்த ஊஞ்சல் மனநிலை.. ஒவ்வொரு விஷயத்தையும் அவள் தன் வாழ்க்கை கூட கம்பேர் செய்து தன் தவறைத் திருத்திக் கொண்டு வரது நல்லா இருக்கு. அதே சமயம் பவியின் வார்த்தைகள் .. உங்க அம்மா பார்க்காமலா இவ்ளோ வளந்துருக்க.. இந்த வார்த்தை எவ்ளோ உண்மை. ஒரு நேரம் திட்டறத வச்சு அவங்களுக்கு நம்ம மேலே அக்கறை இல்லைன்னு ஆகிடாது.. சொல்லிருக்கிற விதம். சூப்பர் சிஸ். பால்கனி .. அவனோட சிந்தனை எல்லாமே மெச்சூர்டா இருக்கு. ஆனால் வேணி கிட்டே மட்டும் அது தூரமா போயிடுது.. மதுவிற்கு பவி மேலே என்ன கோபம்? இல்லை பவிய அவள் என்னவா நினைக்கிறா? பால்கனி சொன்ன மன நிலையா. இல்லை அவள் அம்மா ஏதாவது சொல்லக் கேட்டு இப்படி நடக்கிறாளா.. ? அடுத்த எபிகாக காத்து இருக்கிறோம் சிஸ்.

  3. Love you four days la next episode ….oru continuity kidiakrathu ka…contin co this plzz …though small it’s ok.. thank you so much….sema wordings ka…iniku nane balcony ah rasichen😂😉nice …Ema pravee ya patha apdi theiryutha Ila ipadi theriyatha unaku😏🤔pavam pravee❤️nerya lines pidichadhu Tamil la type seya varala so sorry….but very cute EPI but Madhu ethanala pesinalum romba kadupakiten…😬but balcony so sweet his way of explanation❤️😍 thanks again ka ..

  4. Enavo balcony mela our parithabam than epovum varuthu.innum avan nalavana ketavana nu thalaya pichukitalum avana konjam pidikuthu than.appa da our valiya police kar kum life la romance ku chance kidachathula me happy.pavam pavi ponnu moonja thooki vachirunthathula enga end epi vara polikar police a mattum than iruka mudiyumonu bayanthiten.
    Veni pappa nee innum konjam valaranum da see pavi ponna kudumba isthiri anathum enna porups agitanga. Balcony sir vetkapatukite diet iruken sonathu cute a irunthuchu. Love our manushana enelam pannuthu

Leave a Reply