துளி தீ நீயாவாய் 14(6)

“மதுவ எனக்கு எப்படி தெரியும்னு மட்டும் கேட்காதீங்க சார், அதை மட்டும் என்னால சொல்ல முடியாது ப்ளீஸ்” எனும் போது தெளிவின் உறுதி இருந்தது அவளிடம். ஆம் மதுவுக்கு உதவி செய்வதற்காக  அந்த கடித விஷயத்தை வெளியே இழுத்து ப்ரவி, பவி அந்த சோலைராஜனின் மகள், மகன் வரை அத்தனை பேரையும் ஏன் மனதை காயப்படுத்த வேண்டும் என இவள் யோசித்திருந்ததால், முடிந்து போன விஷயம் முடிந்ததாகவே இருக்கட்டும் என இப்படி மறுத்தாள். அதுவும் பால்கனி திருடன் என்ற அளவு கிரிமினலும் இல்லை எனும் போது எதற்காக இதையெல்லாம் தோண்டிக் கொண்டு என்பது அவளுக்கு.

அதே நேரம் எனக்கு ஒரு உண்மை தெரியும், ஆனால் அதை உன்னிடம் சொல்லமாட்டேன் என்று வந்து தனக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு நபரிடம் பேசுவது என்பது எளிதா என்ன?

‘நமக்கு முக்கியமானவங்கட்ட தேவைனா நம்மளால மறுப்பு சொல்லவும் முடியணும், நாம அவங்களுக்கு முக்கியம்னா அந்த மறுப்பை அவங்களும் புரிஞ்சுப்பாங்க, ஏத்துப்பாங்க, கம்பெல் பண்ணியோ, மிரட்டியோ தான் நினச்சத சாதிச்சுக்க ட்ரைப் பண்ணமாட்டாங்க’ பவி இவளிடம் சொல்லிக் கொடுத்த முக்கிய விஷயங்களில் ஒன்று இது. அதை நம்பி களமிறங்கி இருந்தாள் இவள். அமிலப் பரீட்சைதான். சார்க்கு இவள் முக்கியமானவளா இல்லையா?

இவள் முகத்தையே முழு நொடி பார்த்த ப்ரவி இப்போது அந்த கடிதத்தை பிரித்து வாசித்தவன், “குட்” என்றான் ஒற்றை வார்த்தையாய்.

பின் இவளைப் பார்த்து ”அந்த மதுவுக்கு மட்டுமில்ல, இன்னும் நிறைய ஸ்டூடண்ஸுக்கு இது யூஸ் ஆகும் போலயே” என்றவன்,

“வாலண்டியரா ஜாய்ன் செய்துக்கோ, உனக்கும் நல்ல சேஞ்சா இருக்கும்” என இவளே எதிர்பார்க்காத அனுமதியை இவளுக்குக் கொடுத்தான். படீரென பாய்ந்து போய் சார் காலில் விழுந்துவிட்டால் என்ன என்ற அளவுக்கு ஒரு கணம் ஏதேதோ இவளுக்குள் பீறிடுகிறது என்றால், அடுத்த கணம் வெம்மைத் திகிலாகவும் இருக்கிறது. என்னதிது சார் பாட்டுக்கு எவனோ ஒரு பால்கனியோட அதுவும் இவள பொண்ணு கேட்டு வந்தவன், அவன் கூட போய்ட்டுவான்றார்?!

“போறப்ப நீ மட்டுமா இல்லாம உன் கூட உங்க மேமையும் கூப்ட்டுக்கோ” என மீதியையும் ப்ரவி சொல்லி முடிக்கும் போது சட்டென அவள் திகில் சிறை வெடித்து விலக, ஏதோ வானத்தில் சிறகடிப்பது போலத்தான் இருந்தது இவளுக்கு. கூடவே சிரிப்பு வேறு வருகிறது. அதானே சாராவது பால்கனிய போய் பாருன்னு சொல்றதாவது!

“நீயா வந்து இதைச் சொல்லி பெர்மிஷன் கேட்டதில் ரொம்பவும் சந்தோஷம்” ப்ரவியோ இவளைப் பாராட்டினான்.

“இந்த ட்ரான்ஸ்பரன்சிய எப்பவும் மெயின்டெய்ன் செய்வன்னு நம்புறேன், சின்னதா பிரச்சனைனாலும் எங்க இருந்தாலும் உடனே எனக்கு கால் பண்ணு, இம்மீடியட்டா ஹெல்ப் வந்துடும் உனக்கு” எனவும் சொன்னான். இவளை பத்திரப்படுத்தவே இது என்பது இவளுக்குத் தெரியாதா என்ன?

“கண்டிப்பா சார், தேங்க்ஸ் சார்” ஏற்றுக் கொண்டாள்.

“ஒன்னு நீ புரிஞ்சுக்கணும் வேணி, முதல்ல நீ இந்த வீட்டுக்கு வந்தப்ப நீ இங்க இருக்கிறத நான் என்கரேஜ் செய்யலைனா அதுக்கு காரணமும் அப்பவே சொன்னேன். வீட்ட விட்டு ஓடி வந்துடுறது நல்ல முடிவுன்னு உனக்கு தோணிடக் கூடாதுன்றது என் கன்சர்ன்.

ஆனா இப்ப நிலமை வேற. உன்னை நாங்க இங்க வச்சுருக்கோம்னா, உனக்கு ஒரு பேரெண்ட் பொஷிஷன்ல இருக்கோம் நானும் பவியும். சின்னக்குழந்தை மாதிரி இதைச் செய், இதைச் செய்யாதன்னு உன்னை பொத்தி வச்சுக்கிற வயதில் நீ இல்ல, யார எப்படி ஹேண்டில் செய்யணும்னு பழகிக்க வேண்டிய நேரத்தில் நீ இருக்க, அதுக்கு உதவி செய்ற ஸ்தானத்தில் நாங்க இருக்கோம், அந்த ஒரே நோக்கத்தில்தான் நான் இதை பெர்மிட் செய்றதும்,

இந்த மது பால்கனி இவங்களெல்லாம் கையாண்டு பழகிட்டன்னா, உனக்கு தன்னம்பிக்கையும் வந்துடும், இப்பன்னா கருண் மாதிரி ஹார்ம்லெஸ் பெர்சன பார்த்து கூட பயந்து நீ வீட்டுக்குள்ளயே முடங்குறியே” இது ப்ரவியின் விளக்கம்.

ஒருவாறு உள்ளுக்குள் குளிர்மைப் பட்டுப் போனாள் இவள். நெகிழ்ச்சியும்தான்.

உண்மையில் வேணி விஷயத்தில் ப்ரவியின் நோக்கம் இதுதான். அவள் இழந்திருக்கும் தன் மீதேயான மரியாதையை இது மீட்டுத் தரும். காயம்பட்டு இறக்கையை ஒடித்துக் கொண்டு வந்திருப்பவளுக்கு இந்த மாற்றம் சிறகடிக்க மீண்டுமாய் ஊக்குவிக்கும் என்று நம்பினான் அவன்.

ஆனால் இதை அவன் சம்மதிப்பது வேணிக்காக மட்டுமல்ல மதுவுக்காகவும், பால்கனிக்காகவும், பவிக்காகவும் ஏன் இவனது ஆடு புலி ஆட்டத்துக்காகவும்தான்.

“பைதவே வயல்ல வந்து மிரட்டினதுதான் பால்கனி கிடையாதே தவிர, அந்த இன்சிடென்ட வச்சு தனக்கு என்ன ஆதாயம் தேடிக்கலாம்னு ப்ளான் செய்து, காய் நகர்த்துற அளவுக்கு ஆள்தான் அவன்றதும் உனக்கு நியாபகத்தில் இருக்கணும்” இப்படி ஒரு எச்சரிக்கையோடு

“ஆல் தி பெஸ்ட்” என ப்ரவி இவளுக்கு வாழ்த்தி விடை கொடுக்க, ஏதோ ஒன்று புரிந்தும் புரியாமலுமாய் தலையாட்டிக் கொண்டு எழுந்து போனாள் வேணி.

மதுவுக்கு என்ன பிரச்சனைன்னு கூட சார் கேட்கலையே, அப்பன்னா மது விஷயம் சார்க்கு தெரிஞ்சிருக்குமோ? இல்லை இவளுக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்றதால துருவலையா? இதுதான் இவளுக்கான புரிந்தும் புரியாததுமாகிய விஷயம்.

சரியாய் அதே நேரம் தன் வீட்டு மெத்தையில் குப்புறப்படுத்தபடி தானும்தான் யோசித்துக் கொண்டிருந்தான் பால்கனி.

‘இந்த புல்லட் புலிக்காரன வச்சே SP சார லாக் பண்ணி, வேணிய நமக்கு கல்யாணம் செய்ய வழி இருக்குது போலயே’ என ஓடிக் கொண்டிருந்தது அவனது திட்டம்.

தொடரும்…

துளி தீ நீயாவாய் 15

 

7 comments

 1. Po pappa nanga enna policekara. Enala ellam innum inthe balcony ye nalavana ketavana nu kandupudika midila thalaya pichukuren ithula enga investigation panna.nane pavikutty yum karun um inthe ud la visit pannala pavi Vera thanaku ethuvum prachanayonu aluthitu irukalonu visanathula iruken ithula nee Vera po pulla angitu .😏😏

 2. வேணி மேலே போன அத்தியாத்துலேயே எனக்குச் சந்தேகம் இல்லை. இந்த அப்டேட்லே பால்கனி வேறே திருடன் வேறே ன்னு கன்பார்ம் ஆயிடுச்சு. பால்கனிய வச்சு பிரவிதான் திருடனைப் பிடிக்கப் போறானோ? இதில் ஆடு பால்கனி தானோ.? பால்கனி வாங்கின பல்பு .. எஸ்பி தங்கச்சின்னா பால்கனிக்கும் தங்கச்சிதானா.. ஹா. ஹா.

 3. பால்கனி policekar vijayanuku phone panni solairajan than complaint kuduthanu கண்டு பிடிக்கிறான், also policekar kitta அவன உதைப்பேன் solran.

  ஆனா அவன் (பால்கனி) எங்க இருக்கான்னு சொல்லல, ஆனா அடுத்த fewmins ல solairajan வந்து கால்ல விழும் scene.

  Something fishy.

  S. Uma

 4. வேணி அவங்க அப்பா அம்மா பார்த்த கல்யாணத்தில் இருந்து ஓடி வந்துட்டாலா.

  Solairajan ஐ போல் தன் பெற்றோர்களும் எல்லாருடைய காலிலும் விழ வேண்டுமா என நினைக்கிறாள்

 5. இந்த epila reveal ஆயிருக்கும் முடிச்சி என்னனா, வேணிக்கு வந்த லெட்டர் அ எழுதுனது yarenbadhu.

 6. Ennatha solla. Orey viruvirupa pogudhu. Yara kutravali koondula ethuradhunu puriya matengudhu.
  Ella mystery novelslayume nama obvious culprit nu nenaikuravanga kandipa villain a iruka matanga. Andha vidhathula Balcony harmless nu thonudhu. Andha english la Veni ta matum pesuradhu, adhukena karanam? Karun oda poti posuradhukagava???
  Pavi-Pravi a jodi a kanlaye katalaye neenga.
  Aaga motham andha circus karan evannu puriya matengudhu. Poruthirundhu papom

Leave a Reply