துளி தீ நீயாவாய் 13 (8)

இன் ரியாலிட்டி ஒரு பொண்ணோட சம்மதத்தோட நடக்கிற இந்த ஆரம்பகால யூனியன்றது ஒவ்வொரு பொண்ணுக்கும் 100% conscious decisionதான். (யோசித்து எடுக்கும் முடிவு) எனக்கு ஏன் இந்த ரிலேஷன்ஷிப் வேணும்னு அவங்கவங்களுக்கு இருக்கிற காரணம்தான் இந்த வலியை தாங்கிக் கொண்டு இதில் ஈடுபட வைக்குது அவங்கள.

கல்யாணம்னு வர்றப்ப இதுதான் marriage lifeனு நாம நினைக்கிறதால இதை ஏத்துக்குற ஒரு மனப்பான்மை பலமா இருக்கும் பொண்ணுங்கட்ட. மேரேஜுக்கு முன்னால இது போல விஷயத்தில் ஈடுபடுற கேர்ள்ஸ்ட்ட கேட்டீங்கன்னா, அவன் என்ன விட்டுட்டு போய்டுவான்னு பயமா இருந்துதுன்றதுல இருந்து, அப்பனாதான் நான் narrow minded  இல்லன்னு என் ஃப்ரென்ட்ஸ் ஒத்துப்பாங்கன்னு சொன்னாங்கன்ற peer pressure வரை எதாவது காரணம் இருக்கும். ஆனா எதுலயும் யாரும் by flowல நடந்துட்டுன்னு சொல்லவே முடியாது.

ஆனா இதெல்லாமே முதல்ல ஃப்யூ டைம்ஸ்தான். அதுலயே கூட முதல் டைம்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வலி குறஞ்சுட்டேதான் வந்துடும்.

இதுல உங்க கேஸ் இன்னும் கொஞ்சம் வித்யாசம். இந்தப் பிரச்சனையும் ரொம்ப ரேர்னு எல்லாம் சொல்ல முடியாது, நிறைய பொண்ணுங்களுக்கு இது உண்டுதான். இந்த கேர்ள்ஸுக்கு தாங்கவே முடியாத அளவு ரொம்பவே அதீதமா வலி இருக்கும். முதல் அட்டெம்ட்ல யூனியன் அவங்களுக்கு சாத்தியமே படாது. ஏன்னா  குறிப்பிட்ட மசில் திறந்தே கொடுக்காது.

ஆனா இதுலயும் பயந்துகிட ஒன்னுமே இல்ல. ஒரு வாரம் பத்து நாள்னு கப்பிளா இதுக்காகவே லீவு எடுத்து தினமும் ஃப்யூ டைம்ஸுனு ட்ரைப் பண்ணா கொஞ்சம் கொஞ்சமா மசில் திறந்து கொடுத்துடும்.

அடுத்து ஒன் ஆர் டூ மந்த்ஸ் வரை கூட வலி இருக்கலாம், அதுவுமே முதல் டைம்ல இருந்து குறஞ்சுட்டேதான் வந்துடும். தாங்கிக்கிற அளவில்தான் இருக்கும்.

அதனால அப்படி டைம் எடுத்து ட்ரைப் பண்ணுங்க பவித்ரா, பேனிக் ஆக தேவையே இல்ல,

இன்னொரு விஷயம் இப்ப எல்லாம் ட்ரைப் பண்ணி, யூனியன் எல்லாம் நடந்து, அடுத்தும் வலி எல்லாம் குறஞ்சுகிட்டே வந்த பிறகும், அடுத்து கொஞ்சநாள் ரெண்டு பேரும் சேர்ந்திருக்க சூழ்நிலை அமையலைனா, அடுத்து திரும்ப ஆரம்பிக்கப்பவும் வலி இருக்கும், அதுவும் நேச்சுரல். அதுக்கெல்லாம் பயந்துக்க கூடாது,

மத்தபடி அடுத்த வருஷம் உங்க ட்வின்ஸ் டெலிவரிய நானே பார்ப்பேன் பாருங்க” என அவர் முடிக்க,

ஓய்ந்து போய் சுருண்டிருந்தாள் பவி. அவளுக்குள் வந்து விழுந்திருந்த நிம்மதியின் அளவு அப்படி. அதைக் கூட தாங்க முடியாத போல் ஒரு தண்ணீர் நிலையில் தொய்ந்தாள்.

‘ஆமால, ப்ரவி ட்வின்ஸ்னா இவளுக்கும் கூட ட்வின்ஸ் பிறக்கலாம்தானே” என அங்கு போய் நிற்கிறது இவளது ஆதி. அங்கிருந்து வேறு எங்கும் நகர விரும்பவில்லை பெண் மனம். இந்த நாளுக்கும், நேரத்துக்கும், ஏன் வாழ்க்கைக்கும் இந்த ஒரு செய்தி போதும் போல் இருக்கிறது.

இந்த அத்தனை உரையாடலையும் தானும் கேட்டிருந்த ப்ரவி “ஷப்பா, இந்த குத்துவிளக்கு தொல்லை தாங்க முடியலையே, இதுக்குப் போய் என்னமா பயந்து அழுது மனுஷன கொஞ்ச நேரம் தெறிக்கவிட்டுட்டு” என்றவன்,

“தூக்கம் வருதுல்ல பவிமா, ரொம்ப டயர்டா தெரியுற, தூங்கு நீ, எனக்கு எவ்வளவு சீக்கிரம் லீவு எடுக்க முடியுதோ எடுத்துட்டு அப்றமா இந்த ஹனி மூன full swingல கவனிச்சுடுவோம்” என வாக்குறுதி கொடுக்க, அவனுக்குள் ஒண்டியபடியே உடனடியாக தூங்கிப் போனாள் அவன் மனைவி.

வெகு நேரம் அவளையே பார்த்தபடி விழித்துக் கிடந்தான் இவன். ஏதோ அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தாலும் உள்ளுக்குள்ளோ புயல் இன்னும் முடிந்துவிடவில்லை என்றே இவனுக்குத் தோன்றுகிறது.

ங்கு மற்றவர் எல்லோரும் வரவேற்பறையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, தனது அறையில் சென்று முடங்கி இருந்த வேணியோ, பால்கனி கொடுத்திருந்த கடிதத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது திட்டம் இதுதான்.

இந்த மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு சதுரங்கம், ஓவியம், வினாடி வினா போன்றவற்றை இவன் ஒரு நிறுவனம் மூலமாய் மாவட்ட அளவில்  போட்டிகளாக நடத்துவானாம். ஒவ்வொரு போட்டிக்கும் லட்சத்தில் பரிசும் கொடுக்கப்படும். பெரிதாக விளம்பரங்களும் செய்யப்படும். ஆக அனைவரும் விரும்பி பங்கு பெறுவர்.

அப்படி போட்டிக்கு முன், அதில் கலந்து கொள்ள பயிற்சிக்கு என, பள்ளி நேரம் முடிந்ததும் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக ஒவ்வொரு பள்ளிக்கும் வாலண்டியர்ஸ் அனுப்பப்படுவார்கள். அதில் இவள் மது படிக்கும் பள்ளிக்கு அனுப்பப்படுவாள். அங்கு மதுவை சந்தித்து இவள் பேச நினைப்பதை பேசிக் கொள்ளலாம். அதுவும் இது ஒரு நாள் சந்திப்பாக இருக்காது. குறைந்தது மூன்று மாதமாவது இப்படி சந்திப்புகள் தொடரும். ஆக நன்றாகவே பேசிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தான் அந்த பால்கனி.

செலவெல்லாம் அந்த பால்கனியோடதுதானாம். இவளுக்காக லட்சக் கணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருக்கிறேன் என கோடிட்டு காட்டுகிறானோ?!

எது என்னதாகவும் போகட்டும், பவிக்கு தெரியாமல் இவள் எப்படி வாலண்டியராகப் போக? அதுவும் தினமுமாம். மூன்று மாதமாம்.

இந்த பால்கனி என்னதான் நினைக்கிறான்? இது இவள் மதுவை சந்திக்க திட்டமா? இல்லை அவன் இவளை பார்க்க வர வழி வகையா?

ஆனால் மற்ற வகையில் இந்த திட்டத்தில் இவளுக்கு பிடிக்காத ஒன்று என எதுவும் தோன்றவில்லை. எப்படியோ அனேகருக்கு பிரயோஜனமான ஒன்றாகவே இது தெரிகின்றது. அதனால் இதை இவள் பவியிடம் சொல்லிவிட்டே செய்துவிட்டால் என்ன?

ஆனால் மதுவை எப்படி தெரியும் என்ற கேள்வி வருமே!

அதோடு இந்த போட்டி ஏற்பாடே பால்கனியினுடையது எனும் போது, வீட்டில் பெண் கேட்டு வந்து நின்ற பிறகும் இவள் அவனுடன் பழகுகிறாள் என்பது பவி அக்காவுக்கும் SP சாருக்கும் என்னதாகத் தோன்றும்?

அடுத்த பக்கம்